10.05.2007

மிருகம் சிரித்திருந்தால்

ஏதோ உலகத்தில் பிறந்து விட்டோம்
அதனாலே உறவை வளர்த்துவிட்டோம்
பாதம் மண்ணில் படியும் வரை
பறவைகள் போலே வாழக்கற்றோம்
தேடுதல் நிறைந்த வாழ்வினிலே
பாம்புகள் போலே ஊர்ந்திருக்கோம்
மாணிக்கம் கண்ணில் படும் வரையில்
பலரை நாமும் சீறவிட்டோம்
பட்டினி ஒன்றை நாம் மறந்தால்
வாழ்வில் வேதனை எதுவுமில்லை
படுக்கும் நாளை நினைத்தபடியே
பசியை நாமும் திர்த்திருக்கோம்
சின்னக் காகிதம் பெரிதாய் தெரிவதனால்
செல்வம் எதுவென மறந்துவிட்டோம்
புள்ளிக் கோலங்கள் போல் தான்
நம்வாழ்வும் நாளையும் வேறொன்று தோன்றிவிடும்
சிரிப்பதை ஒன்றே கற்றுவிட்டோம்
மிருக்கத்தில் இருந்து வேறுப்பட்டோம்
மிருகம் முன்னமே சிரித்திருந்தால்
இன்று இயற்க்கையை அழத்தான் விட்டிடுமா ?

மழலை


உன்னை முதன்முதலாய் தொட்டுத்

தூக்கையில் என்னுயிர்
மறுமுறை ஜணிக்கின்ற
வலியை உணர்ந்தேன் கண்ணே !
உன்னை நெஞ்சோடு அணைக்கையில்
தான் வலியே சுகமாய்
நிலைப்பதை உணர்ந்தேன் கண்ணே!
அடிக்கடி நீ சிரிக்கும் பொழுது தான்
உள்ளம் அழகழகாய் மாறுதே!

நொடிக்கொருமுறை நீ அழுகையில் தான்
உயிரும் அதிர்வது போல் உள்ளதே!
படபடவென்று உன் கைகள் அசையத்தான்
கண்களில் உற்சாகம் பொங்குதே!
சரசரவென்று உன் உடல் நகர்ந்திடத்தான்
பூமியின் போக்கே மாறுதே!
மடிமீது நீ தவழ்ந்திடத்தான்
மனதுக்குள் மத்தாப்பு பூக்குதே!
எப்பொழுது உன் மழலை மொழி
கேட்பேன் என்னுயிர் துடிக்குதே!
என் ஒரு விரலும் நீ கடித்திடத்தான்
நரம்பினுள் அமிர்தம் பாயுதே!
சிலுசிலுவேன்று நீ நனைத்திடத்தான்
என்னாடையும் பல முறை ஏங்குதே!
சிணுங்காமல் உன்னைக் கொஞ்சிடத்தான்
என் ஒவ்வொரு அசைவும் முயலுதே!

10.02.2007

உணர்ச்சிகளுக்காக

நரை விழுந்த மனதில்
குறையொன்று கண்டேன்
குறை கண்ட மனதிலோ!
சிறையொன்றைக் கண்டேன்
சிறையான மனமோ!
தேய்வானது பிறையாய்
தூக்கத்தின் மத்தியில்
பிதற்றங்கள் பலவும்
அதன் தாக்கத்தின்விளைவாய்
சோர்வுகள் படரும்
பாழாகும் உயிரோ
மறந்ததையே நினைக்கும்
நோயாகும் உடலோ
துறந்தையே கேட்கும்
போகின்ற வரையிலும்
பூக்காத தெளிவு
சேர்கின்ற பொழுது தான்
தெளிவாக்கும் பூக்கள்
தேகத்தின் மடியில்
நினை கின்ற பொழுது
உயிர் தாகத்தின் தேடலை
யாரறிவாரோ!

Popular Posts