10.12.2007

சிரிக்க நினைத்தேன்


வார்தைகளை எப்படி மனதிலிருந்து
தோண்டி எடுப்பது என்று நினைவுகள்
அடிக்கடி சோர்கின்றப் பொழுது தான்
சொற்களில் இதமில்லாமல் கடுமை
வெளிப்படுவது கண்டேன்......................
முற்களில் இதயம் மாட்டியது போல்
வலி எங்கே என்று தேடித்
திரிகையில் தான் மேனி
முழுதும் சோர்வைக் கண்டேன்.........
கண்ணீர் சீந்தவும் மனதின்
நினைவுகள் தூண்ட வேண்டும்என்று
கண்கள் கசக்கப் போராடும்
பொழுது உணரக் கண்டேன்.............
உதடுகளில் மலர்ச்சியை காண்பிக்க
உள்ளத்தில் எத்தனை
அழ வேண்டும் என்பதை
துவண்ட இதயத்தின்
சோகத்தில் கண்டேன்

10.09.2007

சிந்திக்கத் தூண்டும் உன் சந்திப்பு

என் நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்கி ,அவனுடைய நண்பனின் காதலுக்காக எழுதியது. ஒரு மாதம் அவன் சொன்ன தகவல்களில் இருந்து நான் எழுதிய முதல் காதல் கவிதை, ஆறு வருடத்திற்கு முன் எழுதியது. இப்பொழுது அவர்களுக்குள் திருமணம் நிகழ்ந்து ஆண்டுகள் ஆகிவிட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களையும் சிறிது மகிழ்விக்கலாம் என்ற எண்ணத்தில் இதோ காதலுடனான என் முதல் சந்திப்பு....................


கால மணித் துளிகளோடு
என் காதல் மழைத் துளிகளையும்
வீசும் தென்றல் காற்றினூடே- உலவ
விடுகிறேன் தூசி போலே
இதை மாசு போல் நினைத்து
உதறி விட முடியாது.....
உள்ளுக்குள் இருக்கும் நோயை
தும்மல் மூலம் வெளிக்காட்டிவிடுகிறது தூசி
அது போல் உள்ளத்தில்
உள்ள நோயைக் காதல் மூலம்
வெளிக்காட்டிவிடுகிறது கண்கள்
அதை உள்ளே அடக்குவது முறையோ!
அடக்குவதால் தான் என்ன பயனோ!
இந்த வெள்ளைத் தாளில்
என் சிந்தனைத்துளிகளை சிந்தவிட
ஏனோ என் மனம் விரும்புகிறது
இதை உள்ளத்தின் உளறல் என்று
நினைப்ப தினால் எனக்கொன்றும்
கவலையில்லை......
உள்ளத்தின் உளறல் என்றாலும்
உதடடளவில் இல்லாத
உறுதியான உச்சரிப்பு
மலையை உடைக்கவோ! நிலவைப் பிடிக்கவோ!
என் காதலுக்குத் தெரியாது
ஆனால் உள்ளத்தை உருக்க...........
உணர்வை எழுப்ப...........
அன்பைக் கொடுக்க...........
என் காதலுக்குத் தெரியும்
அந்த தாஜ்மஹாலின் உன்னத
உயிர்த் துடிப்பை உணர முடியும்
அந்த கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கும்
காதல் நெஞ்சங்களை
எழுப்ப முடியும்...............
நேற்றைக்காகவோ! இன்றைக்காகவோ! நாளைக்காகவோ!
நான் வாழவில்லை..............
ஒரு மணித் துளி வாழ்ந்தாலும்
எனக்காக என் ஆத்மாவின்
ஆனந்தத்திற்காக வாழ்கிறேன்
என் ஆனந்தம் இந்த ரோஜாவின்
மெல்லிய இதழை விடவும்
துல்லியமானது....
எனக்கு கிடைத்த இந்த ஆனந்தம்
காதலால் வந்ததே...........
காலத்தின் மீது முற்களூக்கு
உள்ள காதலால் தானே
கடிகாரம் கூட மணித் துளிகளை
உதிர்க்கிறது
ரோஜாச் செடியில் முற்கள் என்று
நாம் கவலைப் பட்டாலும்
கடினமான அந்த நெஞ்சத்திலும்
எவ்வளவு மென்மையுள்ளது என்பதை
ரோஜாவின் புன்னகையே விளம்பரப்படுகிறதே....
ஆம் நீ என் கண்ணில் மட்டும்பட்டிருந்தால்
பரவாயில்லை
உன் முதல் சந்திப்பு என்னை
சிந்தித்திருக்க வைத்திருக்காது..........
சிந்திக்கத் தூண்டும் உன் சந்திப்பு
என் இதயத்தைத் தொட்டு
என் நெஞ்சில் நினைவையும்
சுமக்கவைத்துவிட்ட உன் பார்வை------
என் விழியினில் ஊர்ந்து சென்று
உள்ளத்தையும் அல்லவா தாக்கிவிட்டது
அந்த தாக்கத்தினால் ஏற்பட்ட புண்
என் இதயத்தில் இன்றும் வேதனையை
உண்டு பண்ணுகிறது
இந்த வேதனை சுககமாக இருந்தாலும்
சோகமான நினைவுகளை என்னுள்
தோற்றுவித்து தாகமான என் நெஞ்சில்
திடீரென்று இன்பமான தூறலை
தூவியது சோதனை தான்
உன் சந்திப்பினால் ஏனோ
உலகம் கூட எனக்கு அடக்கம்போல்
தான் தெரிகிறது
ஆனால் என் உள்ளம் அடங்காமல்
போனது தான் புரியவில்லை
என்னுள் துளிர்கின்ற இந்த
மொட்டான நினைவுகள் ஏனோ
மலரத் துடிக்கின்றது
காலம் அதற்கு குறுக்கே நிற்கிறது
உதட் டால் உணர்வுகளை உரைக்க
உள்ளம் தடுக்கிறது
மனதால் உன்னை நினைக்கமட்டும்
காதல் உதவுகிறது
எனக்குள் இருக்கும் உணர்வு உன்னிடம்
அது நீங்காத நினைவுகளாய் என்னிடம்
உறங்காத உளரல்களாய் என்
உறக்கத்தில் நின்றாடும் கண்ணிடம்
துடித்துக் கொண்டிருக்கும் என் நினைவுகளை
நீ பகிர்ந்து கொள்ள வருவாய்....
என நான் நினைக்கவில்லை
வந்தால் என் நினைவுகள் உன்னை சுமக்கும்
இல்லையேல் அந்த நினைவுகளை நான் சுமப்பேன்
கால ஏட்டில் எல்லா எழுத்துக்களையும்
எழுதி முடிக்கும் வேளை வரை
இந்த நினைவு ஏட்டை அடிக்கடித் திருப்புவேன்
சுகமான அந்த நினைவுகள்
என் மனதார வாசிக்கப்படும் உச்சரிப்புகள்
இரவின் ஒரு நாளில்
என் முடிவான வாழ் நாள் வரும் பொழுது
நான் சிந்திக்கும் அந்த சிந்தனை
உன் சந்திப்பின் பசுமையான
நினைவுகளையே அசை போடும்
பெண்ணே! இத்தனைக்கும் நான்
உன்னையன்று சந்திக்காமல் இருந்திருந்தால்
என் சலனமற்ற மனது
சாந்தமாய் இருந்திருக்கும்......................................

Popular Posts