7.10.2012

நட்புடன் மின்மடலில் ஒரு விவாதம்



 இது ஒரு நட்பு ரீதியிலான மடல் என்றாலும், ஒரு சமூகம் சார்ந்த விவாதம் இதற்குள் அடங்கியிருப்பதால், இதை இங்கே பதிவிடுகிறேன்


அழிவி னவை நீக்கீ ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
From ruin friendship saves and shares
The load of pain and right path shows.

நட்பிற்கினிய தோழிக்கு,

                   நேற்றைய பொழுது எனக்கு ஒரு புது அனுபவம். இப்படிபட்ட விவாதங்கள் பல நடந்ததுண்டு என் வாழ்வில், இருப்பினும் அது ஆண்களிடம் மட்டுமே நிகழ்ந்தது. ஒரு பெண்ணின் கருத்துகளை முதல் முறையாக கேட்க முடிந்தது நேற்று தான்.
              எந்த ஒரு தொடக்கமும் பெண்ணிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது. ஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டுமெனில் பெண்களின் பங்கு முக்கியமாகிறது. உண்மை என்னவெனில் பெண்கள் தான் சமூகத்தை நிர்ணயிக்கிறார்கள். இன்றும்....
           ஒரு பெண்  தன்னை பாதுகாக்கும்,அரவனைக்கும் சக உயிரை தேர்ந்தெடுக்கும் கலையில் தான் மிகப் பெரிய சமூக மாற்றமே காலங்காலமாக நடந்திருக்கிறது. மிருக குணத்தில் இருந்து ஆணின் மனம் மாறி உடல் பலத்தை கொண்டு ஒரு பெண்ணை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு பிறந்ததே பெண்களின் ஆளுமையால் தான்...
      ஒரு சிறந்த ஆண் என்ற பார்வை பெண்களின் மனதில் காலம் தொட்டே மாறிக் கொண்டு வருவதால் தான், ஆண்கள் எப்பொழுதும் குழம்பிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு ஆண் காமத்தில் இருந்து காதலுக்கு தாவியதும், வன்முறையில் இருந்து வீரத்திற்கு பெயர்ந்ததும். பெண்ணின் ஆளுமையால் தான். காமத்தின் தெளிவு காதல்... வன்முறையின் தெளிவு வீரம். எந்த ஒரு இலக்கியமும் இந்த இரண்டை மட்டுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பதிவு செய்துக் கொண்டு வருகிறது. ஒரு சமூகத்தின் கட்டமைப்பே இந்த இரண்டைக் கொண்டு தான் உருவாகிறது.இதை கொண்டே சமயங்கள் தோன்றின...

        ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் ஆண்களின் இயலாமையால் உருவானது தான்.

ஆணின் பலத்தை கொண்டு பெண்கள் நிர்ணயித்த சமூகம். 
ஆண்களின் புத்தியை கொண்டு நிர்ணயித்த சமூகம்.
ஆண்களின் பொருளாதாரத்தைக் கொண்டு நிர்ணயத்திற்கும் இன்றைய சமூகம். 

    நீங்கள் சரித்திர ஏடுகளை புரட்டிப் பார்த்தால், ஆண்களின் இந்த எல்லா நிலைகளிலும் ( பலம்,புத்தி,பொருளாதாரம் )பெண்களும் சம அளவில் பங்காற்றியிருக்கிறார்கள். பலம்( உடல் பலம்) பெண்களும் உடல் பலத்துடன் காட்டில் சுற்றியிருக்கிறார்கள். போர்களத்தில் போர் புரிந்திருக்கிறார்கள். இன்று ஆணுக்கு இணையாக பொருளாதாரத்தை உயர்த்த சமமாக பணியாற்றுகிறார்கள்.

           இந்த மூன்றிலும் சராசரியாக இருக்கும் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் வாழ்வது எப்படி? ( Survival of fittest)

  பலம்,புத்தி,பொருள் இந்த மூன்றும் சரி வர பெறாதவனின் நிலை கேள்விக் குறி தான். இந்த பூமியில் வாழ அன்பு அவசியமில்லை என்ற நிலை ஏற்படும் பொழுதெல்லாம், அந்த நிலையை மாற்ற பல சமயங்கள் தோன்றி மக்களின் மனதில் புரட்சியை உருவாக்க முயன்றிருக்கின்றன.

           எனக்கு தெரிந்த வரை எந்த சமயமும் அன்பை தவிர எதையும் போதிக்கவில்லை. பலம்,புத்தி,பொருள் நிறைந்தவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும் என்ற நிலையை மாற்ற பல்வேறு சமயங்கள் பல்வேறு காலகட்டங்களிலும் முயன்றிருக்கின்றன.  இன்றும் முயன்று கொண்டுத் தான் இருக்கின்றது. இந்த எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆண் பெண் ஈர்ப்பு தான். எனவே தான் எல்லா சமயங்களிலும் (ஆண் பெண் மணம்) புரிதல் என்ற முறை பொதுவாகப் பின்பற்றப் படுகிறது. இந்த முறையினால் பெண்களை சொத்து என்ற அடிப்படையில் ஒரு ஆணின்றி ஒரு சமயமே பாதுகாத்தது.

       மணம் புரிந்த ஆணின்றி வேறு யாருக்கும் அந்தப் பெண் சொந்தமில்லை என்ற கோட்பாடு உருவாக ஆரம்பித்தது.
பெண் தன்னையறியாமலே முடக்கப்பட்டால்.....
எனக்கு தெரிந்து இந்த நிலை கிறித்துவ சமயம் பரவலாக பரவுவதற்கு முன் இல்லை. கிட்ட தட்ட 2000 ஆண்டுகளாக தான் ஒரு பெண் ஆணை அடக்கி
ஆள்பவனுமாகவும், இல்லை அடங்கிப் போகிறவனுமாகவுமே பார்த்துக் கொண்டு வந்திருக்கிறாள். ஆணும் அந்த நிலையிலேயே ஒரு பெண்ணை பார்த்து வந்திருக்கிறான்.
         எனவே தான் ஆண் பெண்ணுக்குமான நட்பு இன்றும் சாத்தியப்படாமலே இருக்கிறது. அப்படி கொஞ்சம் ஆபூர்வமாக முளைத்தாலும் இந்த சமூகம் அதற்கு பழக்கப் படாததால்,அதை ஏற்றுக் கொள்வது கடினம்.
           எல்லா சமயங்களும் ஏதோ ஒரு விதத்தில் பெண்களை சுயமாக சிந்திக்க விடாமல் செய்துவிடுகிறது. இது இன்றைய பிரச்சினை இல்லை. கி.மு.... கி.பி பிரச்சினை.
         எந்த சமூகத்தில் தன் இணையை பெண் சுயமாக தேடிக் கொள்ளும் சுதந்திரம் இருக்கிறதோ அந்த சமூகம் தான் ஆரோக்கியமான சமூகமாக இருக்க முடியும்.
         இருப்பினும் இன்றைய நிலையில் இருக்கும் பெண்கள் சுயமாக தேர்ந்த்தெடுக்கும் ஆண்கள்... எப்படி இருக்கிறார்கள்
            நீங்கள் ஒரு குறை சொன்னீர்கள் “ உற்று பார்க்கிறார்கள்இது ஆண் சமூகம் அடுத்த கட்ட்த்திற்கு சென்றுக் கொண்டிருப்பதற்கான குறியீடுகள்.
    
         எதேனும் தவறிருப்பின் மன்னிக்க வேண்டாம், திருத்தவும்....

என்றும் நட்புடன்
தமிழ்ராஜா




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts