9.04.2012

திரைவிமர்சனம் : முகமூடி தொழில்நுட்பப் பூச்சாண்டி


     மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் திரைக்கு வந்திருக்கிறது மிஷ்கினின் சூப்பர் ஹீரோ முகமூடி. தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்ப்டம் என்று நிறைய விளம்பரங்கள். கமல் நடித்த குரு என்னவாயிற்று என்று என் மனக்கேள்விக்கு பலரிடம் விடைக் கேட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
     இல்லை ஹாலிவுட்டில் வருவதுப் போல் அந்தப் பாணியில் எடுத்தால் தான் அது சூப்பர் ஹீரோ திரைப்படமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று முகமூடியைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளலாம்.

     (ஜீவா)புரூஸ் லீ தற்காப்புக் கலைகளில் ஒன்றான  குங்க்பூவில் தேர்ச்சிப் பெற்றவன். ஆனால் அதை வைத்து அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் திண்டாடுபவன். அவனுடைய  குங்க்பூ குருவான செல்வாவும் அதே நிலையில் தான் இருக்கிறார். வீட்டு வாடகைக் கூட கொடுக்க முடியாத பரிதாப நிலை. இதை மாற்ற நினைக்கும் தருணத்தில் தான் ஜீவா பூஜா சந்திப்பு நிகழ்கிறது. முகமூடி உருவாக காரணமான பூஜா-ஜீவா சந்திப்பு நிகழ்ந்ததும் கொஞ்சம் நகைச்சுவையுடன் திரைக்கதை நகர்கிறது.
     பூஜாவை கவர்வதற்காக ஜீவா போடும் வேடமே முகமூடி. இதற்கு நடுவில் சிட்டியில் நடக்கும் கொள்ளையைப் பிடிக்க காவல்துறையினர் நாசர் தனிப்படை அமைத்து தேடி வருகிறார். அந்த கொள்ளையர்கள் வடக்கில் இருந்து தெற்கு வந்திருப்பதாக நம்மை படத்தின் ஆரம்பத்திலேயே பயமுறுத்துகிறார்கள். இந்தக் கொள்ளையெல்லாம் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களைக் குறி வைத்தே நிகழ்கிறது. இப்படி நடத்தப்படும் ஒரு கொள்ளையில் ஜீவா முகமூடி வேடத்தில் ஒருவனை போலீஸிற்குப் பிடித்துக் கொடுக்கிறான். இதன் பிறகு முகமூடி தலைப்புச் செய்தியாகிறான். 

          பூஜாவிடம் தன் காதலைச் சொல்லி முகமூடி வேடத்தை கலைய நினைத்து ஒரு இரவு பூஜா வீட்டை அடையும் பொழுது அங்கு திரைக்கதை மாறுகிறது. பூஜாவின் அப்பாவான நாசர் மீது கொள்ளையன் ஒருவன் துப்பாக்கி சூடு நடத்த அதில் ஜீவா மாட்டிக் கொள்கிறான்.
     முகமூடி வேடத்தை கலைய முடியாத நிலையில் கொள்ளையர்களை நோக்கிப் புறப்படுகிறான் ஜீவா. இறுதியில் கொள்ளையர்களைப் பிடித்து பூஜாவுக்கு தன் காதலை எப்படி புரிய வைத்தான் என்பது தான் மீது கதை.
     இங்கே நரேனைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இவர் தான் வில்லனென்று அடிக்கடி நமக்கு அவர் முகமூடியை கழட்டிக் காட்டுகிறார். ஏனெனில் படத்தின் பெயர் முகமூடி எனபதால் வில்லனும் முகமூடியுடன் இருப்பது சற்று தலைப்பைக் குழப்பிவிடக் கூடாது என்று இயக்குனர் சிந்தித்திருக்கலாம். அது மட்டுமின்றி அடிக்கடி இவரே பாட் மேன்,சூப்பர் மேன் என்று ஜீவாவை சொல்வது, அந்நியனின் இறுதிக் காட்சியில் பிரகாஷ் ராஜ் விக்ரமைப் பார்த்து சொல்லும் பாணியை நினைவுப்படுத்துகிறது. முதல் காட்சியிலேயே  குங்க்பூ கலைஞனான நரேன் ஒரு மூதாட்டியைக் கொல்வதும், எல்லா கொள்ளை நடக்கும் இடங்களுக்கும் தானே செல்வதும் வில்லனின் கதாப்பாத்திரத்தைச் சிதைக்கிறது.நரேனுக்கு புது அவதாரமென்றாலும் விளையாட திரைக்கதையில் இடமில்லை.
     மிஷ்கின் அவர்களின் நேர்த்தியான இயக்கம் நிறைய இடங்களில் தெரிகிறது. சில இடங்களில் அவரின் முந்தையப் படங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. படத்தின் ஒளிப்பதிவு அபாரம். ஒளிப்பதிவாளர் சத்யன் அவர்களின் உழைப்பு நிறைய இடங்களில் தெரிந்தாலும், வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல் அதற்கு சரியான சான்று. எடிட்டர் கவ்கினும் நம்மை நிறைய இடங்களில் படத்தொகுப்பின் மூலம் கவர்கிறார். ஜீவா கொள்ளைக்காரர்களை துரத்தும் காட்சி இதற்கு மிகச் சரியான உதாரணம். பிண்ணனி இசை சொல்ல வேண்டியதில்லை. ஏற்கனவே யுத்தம் செய்” யில் இசைத்த அதே கிருஷ்ணகுமார் என்ற கே தான். அது மட்டுமின்றி ஜீவாவும், நரேனும் ஷாஹோலின் டெம்பிள் சீனாவின் தற்காப்புக் கலையில் திறமையானவர்களிடம் தற்காப்பு பயிற்சி மேற்க் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமின்றி வில்லன் ஆட்கள் உட்பட அனைவரும் (YMCA)நந்தனத்தில் 6 மாதம் பயிற்சி எடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் தொழில் நுட்ப ரீதியாக திரைப்படம் நூறு சதவீகிதம் வெற்றி தான்.
     ஆனால் என்கிறீகளா..? ஆம் வசனம் சொல்ல வேண்டியதில்லை. ஆரம்பக் காட்சியில் “ தண்டச்சோறு “ என்று ஜீவா சொல்ல, அவன் தாத்தா “ எல்லாரும் சோத்துக்காகத் தான் வாழுறாங்க.... என்று நிறுத்தி” “ சில பேர் மட்டும் தான் அதை தாண்டியும் வாழறாங்க”“ என்று சொல்லும் இடம் அசத்தல். இப்படி நிறைய இடங்கள் இருந்தாலும் திரைக்கதை மட்டும் தான் சொதப்பல். ஜீவாவின் தாத்தா கதாப்பாத்திரம், போலீஸ்காரர்கள். இறுதிக்காட்சியில் கூட்டமாக இருந்த வில்லன் ஆட்கள் காணாமல் போவது. என்று நிறைய இடங்கள் இருக்கிறது. ஜீவா எப்படி மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலமானான். இதைப் படம் பார்த்தவர்கள் யாரும் சொல்லவில்லை.
     ஆனால் செல்போனில் இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பறந்தது. படம் இடைவெளிக்குப் பிறகு போரு மாமு என்று நிறைய குரல்கள். உண்மையில் இடைவெளிக்கு பிறகு இது மிஷ்கின் படம் தானா என்று நிறையப் பேருக்கு சந்தேகம் வந்திருக்கும். மொத்தத்தில் முகமூடி குழந்தைகளை கவரும் என்று விளம்பரங்கள் செய்திருந்தாரகள். முகமூடி குழந்தைகளுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பூச்சாண்டி தான். அடுத்த பாகம் வந்தால் ஒரு வேளை அதில் அசத்தலாம்


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

6 comments:

  1. படத்திற்கு போன என் நண்பனின் குழந்தைக்கு நல்ல தூக்கமாம்...

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது குழந்தைகளை நாம் ஏமாற்ற முடியாதே...

      Delete
  2. குழந்தைகளுக்கு பிடித்து இருக்காம்...

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் நண்பரே... சில காட்சிகள் குழந்தைகளை கவரும் வண்ணம் தான் எடுத்திருக்கின்றனர்.

      Delete
  3. நல்லதொரு பார்வை... எனது தளத்தில்...
    http://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தளத்தில் சென்றுப் பார்த்தேன். அருமையான கட்டுரை நண்பரே...

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts