10.14.2012

மகிழ்ச்சி பற்றி நீயா நானாவில் அலசல்




       டந்த வாரத்திலேயே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். இருப்பினும் சில அலுவல்களால் எழுத முடியாமலேயே இருந்தது. இன்று தான் இதற்கு நேரம் வாய்த்திருக்கிறது.
       கிழ்ச்சியைப் பற்றி 30.09.2012 நடந்த நீயா நானாவில் பகிர்ந்துக் கொண்ட கருத்துக்கள் உண்மையில் நம் சமூகத்தின் அச்சு அசல் கலாசாரத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது. ஆம் அந்த நிகழ்வில் சந்தோசம்  என்ற வார்த்தைப் பிரயோகத்திலே அவர்கள் பேசினார்கள்.அந்த வாரம் பார்க்காதவர்கள் இங்கே கிளிக் செய்யவும் நீயா நானா

       ங்கு கலந்துக் கொண்ட நிகழ்சியாளர்களிடம்
மகிழ்ச்சியில் இருக்கும் பொழுது அதை எப்படி எடுத்து கொள்கிறீர்கள்..?
மகிழ்ச்சியை குலைக்கும் காரணிகள் என்ன..?,
மகிழ்ச்சி எது..? என்பதாக கேள்விகளை அந்த நிகழ்வில் மூலம் கோபிநாத் அவர்கள் முன் வைத்தார்.
       தற்கு அவர்கள் கொடுத்த விளக்கங்கள் சுவாரசியமாகவும், அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. காரணம் மகிழ்ச்சியில் இருக்கும் பொழுது அவரவர் நிலைகள் எப்படி இருக்கும் என்று எல்லோரும் விளக்கும் பொழுது, பெண்கள் மிகவும் இயல்பாக நடனம் ஆடியும்,பாட்டு பாடியும் இன்னும் சில செயல்கள் செய்தும் காட்டினார்கள்.
       னால் ஆண்கள் வெளிப்படுத்திய விதமோ மகிழ்ச்சியில் இருக்கும் பொழுது, ஹோட்டல் செல்வேன்.நண்பர்களுடன் வெளியில் செல்வேன்.குடும்பத்துடன் வெளியில் செல்வேன் என்ற ரீதியிலேயே இருந்தது.
       து ஆண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம் ஓரளவு சினிமா கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக கோபி சொன்னார். சிந்திக்கையில் உண்மை தான் என்றுத் தோன்றுகிறது.
       ஆம் பெண்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை இயல்பாக வெளிப்படுத்துவதைப் போல்  ஆண்கள் வெளிப்படுத்துவதில்லை. காரணம் என்ன…? பெண்கள் இப்படியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்களா..? என்று கேட்கும் விதமாக நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுகிறது. பெண்களின் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமும் சரி, துக்கத்தைக் கொண்டாடும் விதமும் சரி, காலம் காலமாக இயல்பாகவே தான் இருந்து வருகிறது.
       ங்கையோ ஆண்கள் அந்த இயல்பை இழந்த காலத்தில் தான் பெண் மீது அடக்கு முறையை பிரயோகித்திருக்க வேண்டும். தன்னால் முடியவில்லையே என்ற குறை தான் பெண் மீது அடக்குமுறையை அதிகப்படுத்தியிருக்கிறது.
ருந்தும் தொலைக்காட்சிகளில் பெண்கள் சிலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொழுது மட்டும் சில கேள்விகளை பெண்களே கூட எழுப்புவதுண்டு… ”சே எப்படி நடந்துக்கறா” என்று…? இது எதனால்…?
       ப்படியெனில் தன்னால் முடியாத செயலை இன்னொருவர் செய்கிறார் என்ற காழ்ப்புணர்வே அடக்குமுறைக்கு காரணம். அதில் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி சமூகமே ஒரு அடக்குமுறையை நம் மேல் திணித்திருக்கிறது என்பது அவர்கள் அடுத்துப் பேசிய கருத்துக்கள் சொன்னது.
கிழ்ச்சியை குலைக்கும் செயல் என்ன..? என்ற கேள்விக்கு ஒவ்வொருவர் சொன்னதையும் இந்த சமூகத்தின் அடக்குமுறையாகவே நான் காண்கிறேன். ஒரு பெண்மணி மிக எளிமையாக வலிகளற்ற வாழ்க்கை தான் மிகவும் மகிழ்ச்சி என்றார். சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது அடுப்பு எரிப்பொருள் இன்றி அணைந்துவிட்டால், அது நம் மகிழ்ச்சியை குலைத்துவிடும் என்றார். அதற்கு அவரைச் சுற்றியிருந்த பெண்களனைவரும் கைத் தட்டினர்.
துப் போல் ஆண்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை குலைக்கின்ற செயல்கள் என்று  நிறைய முன் வைக்கப்பட்டன. நமக்குப் பிடித்த ஆடைகளை அணியும் பொழுது வேண்டாம் என்று யாரேனும் சொன்னால் அது நம் மகிழ்ச்சியைக் குலைத்து விடுவதாகச் சொன்னார்கள்.
       தைத் தாண்டி மகிழ்ச்சி என்றால் என்ன..? என்று முன் வைத்த கேள்விக்கு பலர் அளித்த பதிலும் ஒன்றாகத் தான் இருந்தது. ஒரு பெண் ஃபேஸ் புக்கில் நான் போடும் பதிவுக்கு அதிக லைக்ஸ் கிடைத்தால் எனக்கு அன்று மகிழ்ச்சி என்றார்.இந்த காலக்கட்டத்தின் அச்சு அசல் பிரதியாகவே நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.
மொத்தத்தில் பேசியவர்கள் எல்லோருடைய மகிழ்ச்சியிலும் வேறொருவரோ, பொருளோ சம்மந்தப்படாமல் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
பின் பேசிய சிறப்புப் பேச்சாளர்கள் எழுத்தாளர் மனுஷப்புத்திரன்,டாக்டர் மோகன், ஃபாதர் ஜெகத் கஸ்பர் நிறையக் கருத்துக்களைச் சொன்னார்கள். இருப்பினும் மகிழ்ச்சியின் காரணிகளைப் பற்றி டாக்டர் மோகன் அவர்கள் குறிப்பிட்டதை உங்களிடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறேன்.
னெனில் சமூகத்தின் மகிழ்ச்சியையும்,வளர்ச்சியையும் குலைக்கும் முக்கிய காரணிகள் என்னவென்று அவர் சொன்னக் கருத்துக்களில் தெளிவாகத் தெரிந்தது.
ரு குழந்தை சிறு வயதில் தனக்குத் தேவையானப் பொருளைக் கேட்கும் பொழுது அதை நாம் வாங்கித் தர வில்லையென்றால் பிடிவாதம் செய்தாவது அதை நம்மிடமிருந்து பெற இயலும். அதை நாம் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அது கேட்கும் பொருளை வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். இதற்கு மேலாக ஒரு சைக்கிள் கேட்டால் ஒரு பைக்கையே வாங்கிக் கொடுத்து அந்தக் குழந்தையின் பிடிவாதக் குணத்தை மேலும் வளர்க்கிறோம். இதுவே அந்தக் குழந்தைக்கான மகிழ்ச்சியைப் பொருளை நோக்கி நகர்த்திச் செல்கிறது. பிற்காலத்தில் அந்தக் குழந்தை வளர வளர  அதன் மனதில் மகிழ்ச்சியின் அளவுக்கோளை புறப்பொருள்களே நிர்ணயம் செய்கிறது.என்ற கருத்தை சொன்னார்.
ம் இது இன்றையப் பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. அன்று அடுப்பூதும் பொழுது பல முறை அணையப்பட்ட தீயைக் கண்டுப் பறிப்போகாத மகிழ்ச்சி, இன்று காஸ் சிலிண்டரில் சமைத்துக் கொண்டிருக்கையில் ஒரு முறை அணைந்தால் பறிப் போகிறதென்றால் தவறு நம் மனநிலையில் தான் இருக்கிறது.
தைச் சாதாரணமாக அந்தப் பெண்மணி சொன்னாலும் ஒட்டு மொத்த பெண்மணிகளின் குரலாகத் தான் அது ஒலித்தது.
ன்றைய காலத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு பென்சில் தான் என்று என் அப்பா எனக்கு வாரத்திற்கு இரண்டு பென்சில் வாங்கித் தரும் பொழுது சொல்வார். இன்றோ என் அக்கா வீட்டில் நான் வாங்கிக் கொடுக்கும் பென்சில் பாக்ஸ் அடுத்த நாளே  மறைந்து விடுவதைப் பார்க்க முடிகிறது.
ன்று அடுப்பூதும் பொழுது அணைந்தால் ஊதி எரிய வைத்துக் கொள்ள வழி இருந்தது. கட்டையையோ, வரட்டியையோ நாமே உருவாக்கிக் கொள்ளும் உழைப்பு நம்மிடம் இருந்தது. இன்று சிலிண்டரை நாம் தயார் செய்ய முடியாது. அதுவும் வருடம் 6 சிலிண்டர் தான் என்ற சட்டம் மேலும் நம் மகிழ்ச்சியைக் குலைக்கும்.
து மட்டுமின்றி மின்சாரப் பற்றாக்குறையும் வேறு சேர்ந்துக் கொண்டது. இது எல்லாவற்றிற்கும் காரணம் நாம் ஒரே விஷயத்திலேயே மகிழ்ச்சி இருக்கிறது என்று நினைப்பது தான். வேறு வழிக்கான முயற்சியை நாம் எடுப்பதில்லை.
து அகத்திலும் சரி, புறத்திலும் சரி.
ந்த சமூகத்தில் மக்களுக்கான மகிழ்ச்சியை குலைக்கும் புறச் செயல்கள் அதிகம் இருக்கிறதோ… கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கிறதோ… அங்கே மக்கள் வாழவில்லை என்று தான் அர்த்தம். அங்கு அடிமைகள் தான் வாழ்கிறார்கள். ஏனெனில் ஆறறிவுள்ள மனிதன் அடிமைத் தனத்தை மகிழ்ச்சியாக நினைக்க மாட்டான்.காரணம் மகிழ்ச்சியை குலைக்கின்ற செயல்களை உடனே கலைத்தெறியும் முயற்சியை தான் முதலில் செய்வான். இதுவே காலங் காலமாக கலாச்சாரமாகவே இருந்து வருகிறது.

 எந்தரு சமூகத்திலும் மகிழ்ச்சியை குலைக்கும் செயல்கள் அதிகரிக்கும் பொழுதெல்லாம் அங்கு ஒரு புது கலாச்சாரம் உருவாகிறது. ஆனால் அது சிறந்த கலாச்சாரமா என்பதை காலம் தான் நிர்ணயிக்கிறது.

2 comments:

  1. இது எல்லாவற்றிற்கும் காரணம் நாம் ஒரே விஷயத்திலேயே மகிழ்ச்சி இருக்கிறது என்று நினைப்பது தான். வேறு வழிக்கான முயற்சியை நாம் எடுப்பதில்லை.//

    சும்மா நச்சுன்னு சொல்லிட்டீங்க, நம்மாளுங்களுக்கு அதுக்கெல்லாம் நேரம் இருப்பதில்லை அழமட்டுமே தெரியும் போல...!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே...

      நேரம் தான் மகிழ்ச்சியின் வழி அதை விட்டு விட்டு தேடி அலைவதில் பயனில்லை

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts