8.04.2012

சேய் மட்டுமல்ல தாயும் தான்...


உனக்கென்று ஒர் உயிர்
இருப்பதை நீ உணர்ந்திருப்பாய்
ஆனால் இன்னொரு உயிரின்
சலனத்தை இப்பொழுது மட்டுமே
நீ உணர்வாய்
அரிதாய், மெலிதாய்,சிறிதாய்
உன்னுள் ஓர் உயிர் உன்னைத்
தாயாக்கத் துடிக்கும்

8.03.2012

முகநூலில் பரவி வரும் புது கலாச்சாரம்

     முகநூலில் நிறைய புகைப்படங்களை தரவேற்றம் செய்து (like) விருப்பங்களைப் பெரும் போக்கு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே...
     தங்களின் புகைப்படங்களை ஆண், பெண் பாகுபாடின்றி முகநூலில் தரவேற்றி மற்றவரின் பார்வைக்கு பதிவிடுவதும். அதைப் பார்க்கும் பலர் வக்கிரமாக பின்னூட்டம் அளிப்பதும் முகநூலில் ஒரு வழக்கமாகவே நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
     இதுயெல்லாவற்றையும் விட தற்பொழுது ஒரு பதிவைப் பார்த்து அதிர்ந்தேன்
     ஒரு இளைஞன் அவனருகில் ஒரு இளைஞி, அவனின் கைகள் அவள் தோளை அணைத்தப்படி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு "என் வருங்கால மனைவி" என்று வேறு அதற்கு தலைப்பிட்டபடி ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதற்கு கீழே இப்பொழுது காதலி இன்னும் 2 வருடங்களில் என் மனைவி என்று வேறு குறுந்தகவல்
     இதற்கு ஏகப்பட்ட விருப்பங்கள் குவிந்தபடி இருக்கின்றது. மேலும் 100க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள்

     என் வருங்கால மனைவி என்று அந்த இளைஞன் மார்த் தட்டிக் கொள்வது மிகவும் துணிச்சலான செயல் தான். ஆனால் அதை முகநூலில் போட வேண்டிய அவசியம் என்ன...?  பெற்றோரின் முகத்திற்கு நேராக அல்லவா இதைச் சொல்ல வேண்டும். அதை விடுத்து காதலை இப்படி தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்துவது அறிவீனமில்லையா...?
   இருவருக்குள் மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டு விருப்பங்களையும், விருப்பமின்மைகளையும் பகிர்ந்துக் கொள்வது தானே காதல். அதை விடுத்து பலருக்கு முன் விளம்பரப்படுத்தி  அதை பலருடன் பகிர்ந்துக் கொண்டு, விருப்பங்களை பெறுவது எப்படிக் காதலாகும்.
     இதை அந்தப் பெண் ஆமோதிப்பது, நம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமமாகத் தான் இருக்கிறார்கள் எனபதை உணர்த்துவது போலுள்ளது
     எதற்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற சுய சிந்தனையில்லாத இந்த இளைஞர்களின் எதிர்காலத்தில் தான், நம்முடைய சமூகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது, என்றெண்ணும் பொழுது தான் சமூகத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கிறது.


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

8.02.2012

“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

   முதல் முறையாக என் வலைத்தளத்தில் வேறொரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்தியை பதிவிடுகிறேன். ஏனெனில் இது அனைவரும் அறிந்துக் கொள்ளக் கூடிய செய்தி. இதை என் வலைத்தளத்தில் பதிவிடுவதில் நான பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
   சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன்.

8.01.2012

சரவணன் மீனாட்சி திருமணம் ஒரு சமூகப் பார்வை:

 

     சென்ற வார இறுதியில் என் வீட்டு தொலைக்காட்சியின் ரிமோட் என் சகோதிரியின் கையில் சிக்கிக் கொண்டது. எவ்வளவுக் கேட்டும் கிடைக்கவில்லை. சரி மெகாத் தொடர் தானே அரை மணி  நேரத்தில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் காத்திருந்தேன். நேரமாகத் தான் தெரிகிறது, அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் சரவணன் மீனாட்சியில் இருவருக்கும் திருமணமாம்.எனவே 8:30 லிருந்து 10:30 வரை 2 மணி நேரம் அந்த தொடர் ஒளிப்பரப்பாகும் என்ற தகவல் தாமதமாகவே தெரிந்தது.

7.30.2012

நான் ஈ : ஒரு கலைஞனின் துணிச்சலான முயற்சி

     இந்திய திரையுலகிலேயே முதல் முயற்சி என்று நான் ஈயைச் சொல்லலாம். இது வரை வந்த எந்தத் திரைப்படங்களிலும் இல்லாத அளவு காட்சியமைப்புகளுக்காக 90 நிமிடங்கள் கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள்.
     ஹாலிவுட்டெல்லாம் பெரிய பெரிய மிருகங்களை வைத்து மிரட்ட ஒரு ஈ யை வைத்து மிரட்டியிருக்கிறார் ராஜ மெளலி.

7.29.2012

என் காதல் காலம்


 
ஒவ்வொரு மழைக் காலத்திலும் 
பெய்கிற மழைத் துளிகள் 
ஒவ்வொரு முறையும்
புது காதலர்களை முத்தமிட்டுக் 
கொண்டு தான் இருக்கிறது.
ஒற்றைக் குடைக்குள் இருவரையும் 
அணைத்திடும் இந்த மழைக் காலத்திற்கு 
கார் காலம் என்பதை காட்டிலும் 
காதல் காலம் என்றே பெயர் 
சொல்லி அழைக்கலாம்.

Popular Posts