9.15.2012

என் உதிரம் கலந்த நன்றி உனக்கு...



மேகம் துடைத்து

மழைத்துளியாய்

கருங்கூந்தலை நனைத்து…

துளி மணலில் கலந்து

பாதங்களை தடவும் நீர்த்துளியே…

கோடான கோடி நன்றிகள் உனக்கு…

என்னவளின் குடைக்குள் செல்ல

உதவியதற்கு…

9.13.2012

கும்கியில் மனதை வருடிய பாடல்


இது வரை இப்படி ஒரு பதிவை நான் எழுதியதில்லை. என்னவோ தெரியவில்லை. இந்தப் பாடலைக் கேட்டப் பின்பு எழுதாமல் இருக்க முடியவில்லை. காரணம் நேற்றிலிருந்து என் மனதை மிகவும் ஆக்ரமித்திருப்பது இந்தப் பாடல் தான்.

தாய்மார்களின் புத்திசாலித்தனமும் vs டாக்டர்களின் முட்டாள்தனமும்



இந்த வார நீயா நானா நிகழிச்சியில் விவாதங்கள் மிகவும் சூடாகவே இருந்தது. தாய்மார்களுக்கும் டாகடர்களுக்குமான கருத்துரையாடல்களைத் தாண்டி நம் சமூகத்தின் மருத்துவம் பற்றிய புரிதலையும், புரிதலின்மையையும் பார்க்க முடிந்தது.

குழந்தைகளுக்கு தாய்மார்கள் கொடுக்கும் நாட்டு மருந்தும்,பாட்டி வைத்தியமும் வெறும் முட்டாள் தனம். அதனால் எந்த பயனும் இல்லை என்பது தான் டாக்டர்களின் ஒட்டு மொத்த விவாதமாக இருந்தது.

அதை எதிர்த்துப் பேசிய தாய்மார்களின் கருத்தில் நான் பிரமிக்க வைக்கும் மருத்துவம் பற்றிய ஆழமான புரிதலையும் அறிவையும் எதிர்ப்பார்க்கவே இல்லை.

ஏனெனில் அவர்கள் முன் டாக்டர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கு அவர்கள் அளித்த பதில் வியக்க வைத்தது.

அவர்கள் முன் டாக்டர்கள் வைத்த குற்றச்சாட்டுகள்

குழந்தைக்கு உரம் என்று சொல்லும் பிரச்சினைக்கு அவர்களே தீர்வு காண்பது.

காதில் எண்ணெய் என்று கண்டதை ஊற்றுவது

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது.

விளக்கெண்ணை உபயோகிப்பது.

வசம்பை உபயோகப்படுத்துவது.

இதற்கு தாய்மார்களின் வரிசையில் நிறைய பதில்கள். குழந்தைக்கு உரம் விழுவது என்பது யாரெனும் தூக்கத் தெரியாமல் தூக்கும் பொழுது ஏற்படுவது என்று சொன்னார்கள். இன்னும் சிலர் நிறைய காரணங்கள் சொன்னார்கள்.

தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பதால், உடல் சூடு தணிகிறது. தோல் புதுப் பொலி பெறுகிறது.

விளக்கெண்ணை சூட்டைத் தணிக்கிறது. வயிற்று வலிக்கு சிறந்த மருந்து.

வசம்பு என்பது பிள்ளை வளர்ப்பான். என்று அதை எதிர்த்த டாக்டர்களிடம் ஆனித் தரமாக தங்களின் கருத்தை முன் வைத்தார்கள்.

ஆனால் டாக்டர்கள் ஒரு அதிர்ச்சித் தரும் பதிலைச் சொன்னார்கள். உரம் என்ற ஒன்று இல்லவே இல்லை.அப்படி ஒரு வார்த்தை எங்களின் மருத்துவ அகராதியில் இல்லை. என்றும் உறுதிப்படக் கூறினார்கள். அப்படி ஒரு குழந்தை ஒரு பிரச்சினையுடன் வந்தால் அதற்கு நீங்கள் செய்யும் மருத்துவம் என்ன என்ற கேள்விக்கு ஒருவரும் விடையளிக்கவில்லை

குழந்தை அழுதால் அதற்கு என்னப் பிரச்சினை என்றேத் தெரியாமல் வசம்பை அரைத்துத் தேய்பதும்,மற்றும் இன்னும் சில மருத்துவம் செய்வதும் முட்டள்தனம்.

மொத்தத்தில் டாக்டர்களின் வாதத்தில் நாட்டு வைத்தியமும்,பாட்டி வைத்தியமும் முட்டாள்தனம்.எனவே அதை தயவுச் செய்து பயன்படுத்தாதீர்கள் என்றும் வேண்டிக் கொண்டார்கள்.எனக்குத் தெரிந்து இன்று நிறையப் பேர் இதைத் தான் சொல்கிறார்கள். ஆனால் நான் இந்தக் கட்டுரையை இத்துடன் முடித்துக் கொண்டால் டாக்டர்களின் முட்டாள்தனத்தை நான் கண்டதுப் போல் நீங்கள் எப்படி அறிவீர்கள்.

இன்றைய டாக்டர்களின் மருத்துவம் பற்றிய பார்வைகள் மேல் நாட்டின் விஞ்ஞானக் கண்டுப்பிடிப்புகள் சார்ந்தே இருக்கிறது.இதை அங்கிருந்த ஒவ்வொரு டாக்டர்களின் பேச்சிலும் தெளிவாகத் தெரிந்தது, இருப்பினும் ஒரு டாக்டரைத் தவிர…,

ஏனெனில் அவர் தாய்மார்களின் பக்கம் அமர்ந்திருந்தார். அவர் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட எதிர்ப் புறம் அமர்ந்திருந்த ஒரு டாக்டரும் விடையளிக்கவில்லை.

காரணம் நம் அலோபதி டாக்டர்களில் பெரும்பான்மையானோர் நம் இந்திய குறிப்பாக நம் தமிழக உணவு முறைகளைப் பற்றிய பொதுவான அறிவுக் கூட இல்லாமல் இருப்பதே முக்கிய காரணம்.இந்த நிகழ்ச்சி மூலம் அது வெளிப்படையாகவே அனைவர்க்கும் தெரிந்தது.

இஞ்சியின் குணத்தைப் பற்றித் தெரியவில்லை,வசம்பின் மருத்துவக் குணம் பற்றிய அறிவில்லை. எல்லாவற்றிற்கும் மேல், கீழா நெல்லியின் சரித்திரமே அங்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லை. இதைப் பற்றி அவர்கள் பேசுகையில் தான் ஒரு தகவலை சொன்னார்கள்

மஞ்சள்காமாலை என்பது சாதாரணமாக அதுவாகவே சரியாகிவிடும். அதற்கு நீங்கள் எந்த மருந்தும் சாப்பிடத் தேவையில்லை.ஏனென்றால் அது வைரஸ் மூலம் பரவக் கூடியது என்றும் மேலும் வைரஸ் மூலம் பரவக் கூடிய அம்மை நோய்க்கும் , சளி, இருமலுக்கும் சாதாரணமாக இருந்தாலே அதுவாகவே சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.

எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா…? அப்படியென்றால் மஞ்சள் காமாலை,அம்மை,சளி இருமல் எல்லாம் தானாகவே சரியாகிவிடுமா…?

பின் எதற்கு மருந்துமனைகளும் மருந்துகளும் இந்தக் கேள்வியை அவர்களிடம் யாரும் கேட்கவில்லை.அப்படியெனில் ஏன் மஞ்சள் காமாலையால் உயிரிழப்பு நேரிடுகிறது என்ற கேள்விக்கும் அங்கு விடையில்லை.

வைரஸ்ப் பற்றிய அறிவு இன்று பெரும்பான்மையானவர்களுக்கு வந்திருக்கிறது. இருப்பினும் அது தானாகவே சரியாகிவிடும் என்று ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்தின் முன் சொல்வது எந்த வகையில் சரியாகும்.அப்படியெனில் ஹெபிடைட்ஸ் பி, எய்ட்ஸ் போன்ற நோய்களும் வைரஸ்களால் தான் வருகிறது. அது தானாகவே சரியாகிவிடுமா..? பின் எதற்கு அதற்கான மருந்து கண்டுப்பிடிக்க இன்றும் ஆராய்ச்சி நடந்துக் கொண்டிருக்கிறது.

மேல் நாட்டு ஆராய்ச்சி சொல்கிறதென்று தாங்கள் படித்த அறிந்தவற்றை மட்டுமே சொல்கின்றார்களே ஒழிய, அனுபவித்தவைகள் என்று அவர்களிடம் ஒன்றுமே இல்லை. ஏனெனில் இந்த நோய்க்கு இன்ன மருந்து என்று எழுதி வைத்ததை மட்டும் படிப்பதனால் எந்த உபயோகமும் இல்லை. மருந்தைப் பற்றிய ஆழமான அறிவு தேவைப்படுகிறது. அது நம் பாரம்பரிய மருத்துவத்தில் இருந்தது.

அவர்களிடம் எந்த கேள்வியை வைத்தாலும் ஆராய்ச்சி சொல்கிறது. நாங்கள் அப்படித் தான் படித்தோம். இதைத் தவிர அவர்களிடம் ஒன்றுமே இல்லை. நம் தமிழகத்தின் கலாச்சாரம் வாழ்க்கை முறைப் பற்றிய அறிவில்லாமல், நிச்சயம் நம் சமுதாயத்தை ஆரோக்கியமான சமுதாயமாக மாற்ற இயலாது.

தமிழகத்தின் அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிப்பது இஞ்சி,சுக்கு,மிளகு,சீரகம்,வசம்பு,ஓமம் இதை சிறிது சிறிதாகத் தான் குழ்ந்தைக்குப் பயன்படுத்துகிறார்கள். அளவு மாறும் பொழுது குழந்தைக்கு பிரச்சினை வருகிறது. அதேப் போல் தான் எண்ணெய் குளியலும், மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். ஆனால் எண்ணெய் குளியலையே தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் சில அலோபதி டாக்டர்களின் முட்டாள்த்தனத்தை நினைக்கையில் நம் சமூகத்தைப் பற்றிய கவலை தான் மேலோங்குகிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும் பொழுது குழந்தை எண்ணெய்யை விழுங்கி விட்டால் நிமோனியா காய்ச்சல் வரும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள். ஆம் உண்மைதான் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் குழந்தை காலம் முழுதும் இயற்கைக்கு அடி பணிகிறது. காலம் முழதும் குளிக்காவிட்டால் அலோபதியின் மருந்துக்கு தான் அடிப் பணிகிறது.

குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் பழகாவிட்டால் இறுதி வரை குழந்தைக்கு எண்ணெய் தேய்த்தே குளிப்பாட்ட முடியாது. அது மட்டுமின்றி எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதில் நிகழும் சிறு தவறினால் எண்ணெய்த் தேய்பதையே வேண்டாமென்று மறுப்பது முட்டாள்த் தனம். என்று ஒரு தாய் மார் சொல்லும் பொழுது டாக்டர்களின் மேல் மக்களுக்கு உள்ள அதிருப்தி வெளிப்படுகிறது.

இன்று ஒரு நோய்க்கு மருந்தில்லை என்றால் அது நாளைக் கண்டுபிடிக்கப்படலாம். அது வரை ஏதெனும் சாக்குச் சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தில் நோயாளியைப் பயமுறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் நம் நாட்டில் பின்பற்றி வரும் மருத்துவ முறைகளெல்லாம் முட்டாள்த் தனங்கள் .இது தான் இப்பொழுது அலோபதியைப் பற்றிய பெரும்பான்மையானோரின் கருத்தாக இருக்கிறது.

இதற்குக் காரணம் அவர்கள் ஆராய்ச்சியாளராக இல்லாததே… ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தங்களின் மருத்துவ அறிவை மேம்படுத்திக் கொள்ள அவர்கள் முயலுவதில்லை.பணம் மட்டுமே அவர்களின் கண்களுக்குத் தெரிகிறது.

ஒரு டாக்டர் சொல்கிறார் குழந்தை மலம் கழிக்கவில்லையென்றால் 5 நாள் வரைப் பொறுத்திருக்கலாம். நன்றாக யோசித்துப் பாருங்கள் 5 நாள் வரை காத்திருந்து பிறகு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று ஆயிர ஆயிரமாக செலவழிப்பதற்கு பாட்டி வைத்தியமான வசம்பை தாய்மார்கள் முன் வைக்கிறார்கள். அவர்களின் கருத்துப்படி வசம்பு விஷம். மேல் நாட்டு ஆராய்ச்சி சொல்கிறது. அம்மை நோய்க்கு வேப்பை இலையும், மஞ்சளும் ஒன்றுமே செய்வது இல்லை. இப்படி வெளி நாட்டவர்களின் பிரதிநிதியாக அடுக்கிக் கொண்டேப் போகிறார்கள்.

இதற்கெல்லாம் சிறப்பு விருந்தினராக வந்திருந்த சித்த வைத்தியர் மைக்கேல் ஜெய்ராஜ் விளக்கமளித்தார். வசம்பை அப்படியே யாரும் பயன்படுத்துவதில்லை. அதை சுட்டுத் தான் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்புகள் சொல்கிறது. மேல் நாட்டில் இதைப் பற்றி அறியாமல் வசம்பை சுடாமல் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு முடிவு சொல்கிறார்கள். இது எந்த வகையிலும் சரியான முடிவில்லை. இப்படித் தான் நம் பாரம்பரிய மருத்துவங்கள் மறுக்கப்படுகிறது. என்றார். இந்த ஆராய்ச்சிகளெல்லாம் எவ்வளவு முட்டாள்த் தனங்கள் என்று அவர் சொல்கையில் தான் நமக்குத் தோன்றுகிறது.

மேலும் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ராஜ்குமார் பேசுகையில் சித்தர்களைப் பற்றிய செய்தியையும், திருமூலரின் திருமந்திரத்தை சுடுகாட்டில் அமர்ந்துப் படித்ததாகவும் கூறினார். இதற்கு முன்னும் நீயா நானாவில் அவர் பேசியிருக்கிறார். அப்பொழுது பேசியதற்கு இந்த முறை பேசியதற்கும் நிறைய மாற்றங்கள். நம் பாரம்பரிய மருத்துவத்தில் விஷயமிருக்கிறது என்று அவருக்குத் தெரிந்ததனால் தான் திருமந்திரத்தைப் புரட்டியிருக்கிறார்.

அடுத்த சிறப்பு விருந்தினர், அக்கு பஞ்சர் டாக்டர் உமர் ஃபரூக். இவருடைய பேச்சு மிக தெளிவான பேச்சு. அலோபதி கொடுப்பது மருந்து கம்பெனிகள் தயாரிக்கும் ரசாயனப் பொருள். தாய்மார்கள் சொல்வது அவர்கள் அன்றாடம் உபயோகிக்கும் இயற்கையான பொருட்கள். ரசாயனப் பொருட்கள் தீங்கில்லை, இயற்கையானப் பொருட்கள் தான் தீங்கு என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஏனெனில் உங்களிடம் allopathy (proof – laboratory proof – applicable proof ) இருக்கிறது. ஆனால் அது நம் பாரம்பரிய மருத்துவத்தில் யாரும் குறிப்பாக அதை எழுதி வைக்கவில்லை.

Death by medicine

By Gary Null, PhD; Carolyn Dean MD, ND; Martin Feldman, MD; Debora Rasio, MD; and Dorothy Smith, PhD

http://www.webdc.com/pdfs/deathbymedicine.pdf

என்றப் புத்தகத்தில் மால் நுட்ரிஷன் பற்றிய ஆபத்துகளும்,நவீன மருந்துகளின் ஆபத்தையும் விளக்குகிறது. என்றார்.

இறுதியாக சிறப்பு விருந்தினராக வந்திருந்த எழுத்தாளர் இளங்கோ கல்லானை சொல்கையில் இவர்கள் சொல்வது போல் வேப்பிலையிலும் , மஞ்சளிலும் ஒன்றுமில்லை என்றால். ஏன் அதற்கு பேடண்ட் ரைட் வாங்கினார்கள் . பின் ஏன் நம் மருத்துவத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். குறிப்பாக அலோபதி மருத்துவர்கள் சில பேருக்கே நம் பாரம்பரிய மருத்துவம் பற்றிய குறிப்புகள் தெரிந்திருந்தாலும் அதை அவர்கள் அறிவுறுத்துவது இல்லை. கேட்டால் அதை நாங்கள் சொல்லக் கூடது என்கிறார்கள்.

அப்படியெனில் அவர்களிடம் நேர்மையும் வெளிப்படையானப் போக்கும் இல்லை. சித்த வைத்தியத்தையும்,ஆயுர்வேதத்தையும் பற்றிக் கூற என்றுமே அலோபதிக்கு தகுதியில்லை என்றும் சொன்னார்.

இருப்பினும் இதையும் தாண்டி சில டாக்டர்கள் எதிரே அமர்ந்து தாய்மார்களின் பக்கம் அமர்ந்துப் பேசியவர் போலும் இருக்கிறார்கள். அதற்காக சித்த வைத்திய, ஆயுர் வேத மருத்துவர்களும் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் என்றும் நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

ஏனெனில் அலோபதி போலவே அதிலும் 5 வருட படிப்பு தான். அந்தப் படிப்பை முடித்ததும் அவர்களும் தங்களின் மருத்துவம் பற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்கிறார்களா… என்ற உததரவாதமில்லை.

இது மருத்துவத்தில் நிகழும் தவறில்லை. நம் சமூகத்தின் கல்வி முறையில் நிகழும் தவறு.இன்றையகல்வி பணம் பண்ணும் தொழிலாக மாறி விட்டதால், அதைக் கொண்டு செய்யும் எந்த தொழிலும் பணத்தையே முன்னிலைப் படுத்துகிறது.இது அலோபதிக்கு மட்டுமின்றி சித்த,ஆயுர் வேதம் மற்றும் அனைத்து மருத்துவங்களுக்கும் மருத்துவர்களுக்கும் பொருந்தும். என்ன இதில் லட்சமென்றால் மற்றதில் ஆயிரத்தில் கணக்கு இருக்கும். நம் அரசாங்கம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தையும்,விஞ்ஞானக் கண்டுப்பிடிப்புகளையும் இணைக்கும் வகையில் (integrated) கல்வி முறை அமைந்தால் மருத்துவம் அடுத்தக் கட்டத்திற்கான உயர்வை எட்டும். அதை விடுத்து அலோபதி, சித்த, ஆயுர்வேதம் என்ற பிரிவினைகளால் எந்தப் பலனும் இல்லை. பலன் ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு மட்டும் தான்.

நம்முடைய வாழ்க்கை முறை இன்று நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கிறது.எனவே இதை மனதில் வைத்து மருத்துவம் செய்யும் எந்த மருத்துவ முறையுமே வரவேற்கக் கூடியது தான்.

942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது


அற்றது போற்றி உணின்


After digestion one who feeds 942


His body no medicine needs.

இதில் வரும் முறைகளை கடைப்பிடித்தாலே ஆரோக்யமான சமுதாயம் உருவாகும்.




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

9.12.2012

சீக்கிரம் பொழுது சாய்ந்தது



இந்த அரச மரத்தடியில்

இன்று மட்டும் ஏனோ

அம்மன் குடிவந்தது

நீ அமர்ந்ததைப் பார்த்தால்

எனக்கு வேறொன்றும் சொல்லத்

தோன்றவில்லை…

என்று எனக்காக காத்திருந்த

உன்னிடம் சொன்னேன்

முறைப்பாக இருந்த உன்னை

என் பேச்சு மேலும் கோபப்படுத்தியது

அம்மனுக்கு கோபம் வந்தால்

இந்த அடியேன் என்னாவது

பார்வையாலையே எரித்துவிடுவாய்

போல் இருக்கிறதே– என்றேன்

சற்று உன் முகம் சாந்தமானது

அம்மனுக்குப் பூ எங்கே?

என்று என்னை மடக்கினாய்—

மன்னித்துவிடு! உன் கூந்தலில்

எந்தப் பூவும் இடம் பெறமறுக்கிறது…

கோபத்தை மறந்து என் இதழ்களையே

கண் இமைக்காமல் ஆச்சரியத்தில் பார்த்து

ஏன்?  என்றாய்—

என்னை பொறாமைத் தீயில்

தள்ள நினைக்காதே அதிஷ்டக்காரனே!

அவளைப் பார்த்து பொறாமை

கொள்ள எங்களுக்கு மனமில்லை

என்று கெஞ்சுகிறது அத்தனைப்பூக்களும்….

என்றதும்

உன் முகம் மாறிய நளினங்களை

எந்தப் புகைப்படக் கருவியில்

நான் பதிவு செய்ய – என்

மனத் திரையைத் தவிர…

மேலும் கேட்டாய்—- சரி

அது என்ன அதிஷ்டக்காரன்?

உனக்கு சொந்தம் அல்லவா!

அதனால் சொல்லியிருக்கும்

என்றேன்….கிண்டலான

ஒரு பார்வை பார்த்தாய்

வேறு என்ன சொன்னது?

இருந்தாலும் பாவம் நீ

என்று மேலும்

சொல்லாமல் நிறுத்தினேன்.

ஏன்? நிறுத்துவிட்டாய்

சொல் ஏன் பாவம் நீ

என்ன சொன்னது?

என்று ஆர்வத்தோடு நீ கேட்க…

லேசான தயக்கத்துடன்

பூக்கள் நாங்கள் எங்கள்

அழகை மறைப்பதில்லை

உன்னவளோ ஆடைகொண்டு

அவள் அழகை மறைத்துவிடுகிறாள்

பாவம் தானே நீ என்றது -என்றேன்

நொடியில் உன் முகத்தில்

மின்னிய அந்த ஒளிச் சிதறலில்

நான் எரிந்து போகாதது ஆச்சரியமே!

திருடா! என்று என் தலையினை

பிடித்துக் கொண்டாய் …

என் தலை எழுத்து அன்று

சீக்கிரம் பொழுது சாய்ந்தது




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

9.11.2012

வஞ்சனை என் மீதா…?


வர்ணனனப் போதாதே

வர்ணிக்க இயலாதே

வார்த்தைகள் பத்தாதே

உன்னை சொல்லால் அலங்கரிக்க

9.09.2012

தமிழர்களின் பூக்கள் பற்றிய நுண்ணறிவு




நண்பர்களே நான் தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி பகிரப் போகும் இரண்டாவது பதிவு இது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற பதிவில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

”தமிழன் பெருமைகளை இன்றைய தலைமுறையிடம் சொல்லி தமிழனை சிறுமை படுத்தாமல் இருப்பது நல்லது.”

என்னைப் பொறுத்தவரையில் இது பெருமையல்ல... நம்மை நாம் மீட்டெடுக்கும் முயற்சி. துரித உணவுகளினால் ஆரோக்கியத்தை இழக்கும் மக்கள் இயற்கை உணவின் மகத்துவத்தையும், அதன் சிறப்பையும் உணர்ந்த பின்னர், இது முதலிலேயே தெரிந்திருந்தால் என்று கவலைப்பட்டு மீள முயற்சிக்கின்றனர். அவர்களுக்கான முன்னெச்சரிக்கை தான் இதுவெல்லாம். இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கின்றனர். முடிந்தால் பின்பற்றுங்கள் என்று சொல்வது தான் இந்தப் பதிவின் நோக்கம்.

Popular Posts