1.25.2013

விஸ்வரூபம் படத்தின் முதல் விமர்சனம்!

இது என்னுடைய விமர்சனம் இல்லை...

முகநூலில் நான் படித்த விமர்சனம். இதை ஒரு திரைத்துறைச் சார்ந்தவனாக உங்களிடம் பகிர கடமைப்பட்டிருக்கிறேன்.

 படம் பார்த்துவிட்டேன் நான் . நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னைத் திட்டலாம் உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தைப் பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .
துப்பாக்கி படத்தைப் பார்த்துவிட்டு வந்து மனம் கொதித்து பதிவு போட்டவன் நான் .ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு எந்த இடத்திலும் அது போன்ற உணர்வு வரவில்லை .அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .
கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கத்தில் பெண் சாயல் கொண்டவர் ..
.கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனை துப்பறிய அனுப்புகிறார்மனைவி . அந்த துப்பறிவு நிபுணர் கமலை பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.
ஒருமுறை துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுற்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரியைப் படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் கமல் மனைவியின் முதலாளி பெயர் என அதில் இருக்கிறது..மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்திச் சென்று கொடுமை படுத்துகின்றனர் .
அதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியைக் காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கைதாவில் பயிற்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .
கதை- இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிற்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவுப் படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .
இது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .
கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கோயம்புத்தூரிலும் மதுரையிலும் சுற்றித் திரிந்தேன் என்பார் .இங்கே எந்த இடத்திலும் பயிற்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .
அடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணைக் கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதைச் சரியாக சொல்வார் .
இந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொதிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .
அதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது. தன் பணியின் பொருட்டே கமல் அவரைக் கல்யாணம் செய்து இருப்பார் .கதையோடு பார்த்தால் அதையும் தவறாகச் சொல்லமுடியாது .
கடைசியாக ஒன்று தடுத்து நிறுத்தவேண்டிய துப்பாக்கி படத்தை விட்டு விட்டோம் .
நான் இதை எழுதியதால் என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம் ஆனால் உண்மையைப் பேசாமல் இருக்கமுடியாது
முகநூலில் பார்க்க

எழுதியவர்: @Farouk Mohamedohamed


நட்புடன் 
தமிழ்ராஜா

10 comments:

  1. நடுநிலையுடன் எழுதப்பட்ட விமர்சனம்

    ReplyDelete
  2. ஒரு படம் பற்றி ஒருவரின் கண்ணோட்டம் ஒருமாதிரி இருக்கும், மற்றொருவருக்கு வேறொரு மாதிரி இருக்கும்!! சொல்லப்பட்ட விதம் அப்படியே மக்களை சென்றடையாது!

    தவறான கண்ணோட்டம் வந்து விட்டால் மாற்றுவது கடினம்! படம் எடுப்பது இப்போதைக்கு எந்த சீர்திருத்தத்திற்காகவும் அல்ல! படத்தின் அடிப்படை மட்டுமே! அப்படி இருக்கும் போது இதுபோன்ற வீண் விவாதமற்றவையாக எடுத்தால் தேவலாம்...

    இது தமிழ் முஸ்லிம் பற்றிய குறை சொல்லவில்லை என்றால் மத்த நாட்டு முஸ்லிம்களை மட்டும் தவறாக காட்டலாமா? எனக்கு ஆப்கானில் நண்பர் இருக்கிறார். அங்கும் ஒரு அமைதியான சூழ்நிலை தான் உள்ளது. எதற்கு இந்த வீண் விஷ பரீட்சை? கமல் இந்த படத்தை ஆப்கானில் ரிலீஸ் செய்யமுடியுமா???

    ReplyDelete
    Replies
    1. சமீரா
      தலிபான்களும்,அல்கொய்தாவும் நல்லவங்க என அடித்து சொல்லுங்க!! ஹி ஹி

      இதுதானே தாவா!!

      நன்றி!!

      Delete
    2. யோவ் சார்வாகன் நீர் வக்காலத்து வாங்கும் அமெரிக்காவை விட அவங்க நல்லவங்கதான்,,


      Delete
  3. Thanks, Good Review. I must see this movie.

    ReplyDelete
  4. எவனோ எழுதினத போட்டு ஒப்பேத்தாம நீங்க பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க சார்,,

    முஸ்லிம்னா ஆப்கான்ல தமிழ்நாட்டுல உலகத்துல எங்கிருந்தாலும் அவன் முஸ்லிம்தான்..

    ReplyDelete
  5. //ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர// ஆமாம் ஆப்கான் மக்களுக்கு பொழுது போகாம அமெரிக்காவ எதிர்க்கிறாங்க..

    ReplyDelete
  6. boss, can you write your Thuppaki review too.. I want to now what made you to feel Thuppaki bad :)

    ReplyDelete
  7. நேற்று தான் இந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவான் என்ற அடிபடையில் என் கருத்து என்னே வென்றால் அப்கானிஸ்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரியாத பாமர மக்கள் இந்த படத்தை பார்த்தால் இங்குள்ள இஸ்லாமியரை நிச்சயம் ஒரு காட்டு மிரண்டியாகவோ ,இரக்க மற்ற கொடுரகாரர்களாக தான் நினைக்க தோன்றும்.

    பள்ளி மாணவர்கள் , சிறு குழந்தைகள் பார்த்தல் இஸ்லாமியரை பற்றி தவறான எண்ணமே மனதில் பதியும், நிச்சயம் தன இஸ்லாமிய நண்பனை தீவிரவாதி என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்.எல்லா நண்பர் கூட்டத்திலும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் அவனுக்கு தீவிரவாதி என்ற பட்டபெயர் உறுதியாகி விட்டது.

    அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.

    கமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .தீவிரவாதிகளை கண்காணிக்கும் காமிரா முன் வரும் கரப்பான் பூச்சியை ஊதி சாதனை செய்து விட்டு, அமெரிக்க அதிகாரி ஒரு புன்னகை மூலம் அப்ளாஸ் செய்வாரே . இந்த காட்சிக்கு பதிலாக ,கமல் நேரடியா அந்த அமெரிக்கனின் ஷூவை நக்கி இருக்கலாம்.

    ஆஸ்கார் விருது மட்டும் உலகின் அங்கீகாரம் கிடையாது என்று சொன்னவர் அந்த அமெரிக்க அங்கீகாரத்திற்கு இந்தியனின் மானத்தை ஏலம் போட்டு விட்டார்.

    மற்றபடி கதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை . ஹேராம் படத்தில் அந்த சோடா பேக்டரி சீன எவளோ போர் அடிக்குமோ அதே போல தாலீபான்களை காட்டும் கட்சிகள் ஹிந்தி , அராப் ,இங்க்லீஸ் என்று எல்லா மொழிகளிலும் பேசி கடைசியில் நமக்கு தலை சுத்துவது தான் மிச்சம்.

    இந்த படத்திற்கு நூறு கோடி என்று சொல்வது மிக பெரும் பொய் . சத்தியமா சொல்றேன் கமல் சம்பளம் இல்லாமல் முப்பது கோடி கூட ஆகிருகாது. கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

    ஆப்கன் வீதி போல நாலு வீடு எல்லாம் செட்டிங் அந்த வீட்டை அமெரிக்கர்கள் பாம் போட்டு அழிப்பார்கள் . அதான் செலவு.அமெரிக்கால கார் சேசிங் மற்றபடி வேற செலவு ஏதும் தெரியல .மறுபடியும் கேக்குறேன் கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

    கமல் தெரியாமலோ ,முற்போக்கு சிந்தனயோடோ இந்த படத்தை எடுக்க வில்லை மிக மிக திட்டமிட்டு தாலிபான்கள் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை கேவல படுத்தி காட்டு மிராண்டிகளாக சித்தரித்து அமெரிக்க அங்கீகாரத்தை பெறவே இதனை மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார் .

    இப்படத்தின் மூலம் கமலின் முற்போக்குவாதி என்ற சாயம் வெளுத்து உண்மை முகம் வெளி பட்டு விட்டது.

    ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் விஸ்வரூபம் கமலின் சுயரூபம் .

    எது எப்படியோ இந்த பிரச்சனையால் இந்த விளங்காத படம் எப்படியும் கமலுக்கு போனியாகிவிடும் .

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts