6.16.2013

சாதி அழியாது, நவீனப்படுத்தப்படுகிறது...


அந்தனன் - புத்திக்கு மட்டுமே வேலைக் கொடுப்பவன்.அதன் மூலம் எல்லோரையும் தனக்கு கீழ், பணி செய்யும்படி சாதித்துக் கொள்கிறான்....

அந்தனன் : அரசியல்வாதிகள், மென்பொருளில் வேலைப்பார்ப்பவர்கள், இப்படி மூளையை வைத்து மட்டுமே சமூகத்தின் சகல வசதிகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டவர்கள்....


சத்ரியன் : போர்த் தொழில் செய்பவன். தன் நாட்டை காப்பாற்ற கடமைப்பட்டவன். வீரத்தால் மற்றவரை அடி பணிய வைப்பவன். அந்தனனுக்கு அடங்கி நடப்பவன்...

சத்ரியன் : ராணுவத்தில் வேலை செய்பவன், காவல்த்துறையில் பணிபுரிபவன்.வீட்டிற்கு வெளியே காவல் பணி புரிபவனும் சேர்த்து தான்.

வைசியன் : பிறர் உழைத்து விளைவித்ததை வாங்கி பரிமாற்றம் செய்து தொழில் செய்பவன்...

வைசியன் : எல்லா வியாபாரிகளும், தொலைக்காட்சி நடத்துபவர்களும், பத்திரிக்கை, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை நடத்துபவர்களும், இன்னும் நீங்கள் நிரப்பிக் கொள்ளலாம்....

சூத்திரன் : எந்த வேலையாக இருந்தாலும் பிறருக்காக செய்துவிட்டு அதற்கு கூலி வாங்குபவன்...

சூத்திரன் : பிறருக்காக வேலையைச் செய்துவிட்டு சம்பளம் வாங்கும் எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும், இது ஐ.டித் துறைக்கும் பொருந்தும்....


இந்த பிரிவில் நிறைய குளறுபடிகள் இருக்கும். அதுப் போல் தான் ஆதியில் தொழில் முறையில் பிரிக்கப்பட்ட சாதியிலும்....


அந்த கட்டமைப்பு உடைந்த பிறகு இன்று இப்படிப்பட்ட கட்டமைப்புகள் வலுபெறுவது உறுதி...
 

அன்று சிற்றரசுகள் பேரரசுகளாக உருமாற இந்த கட்டமைப்பு சமூகத்திற்கு தேவைப்பட்டது. ஆனால் இன்றோ... வளர்ந்து வரும் இந்தக் கட்டமைப்பு யாரை பேரரசுகள் ஆக்க உருவாக்கப்படுகிறது...?

அரசியலவாதி பையன் - அரசியல்வாதி
டாக்டர் பையன் - டாக்டர்
இன் ஜினியர் பையன் - இன் ஜினியர்..
கூலித் தொழிலாளியன் மகன் - இந்த நாட்டில் டாக்டரோ, இன்ஜினியரோ, அரசியல்வாதியோ ஆவது மிகவும் கடினம்....

அரிதாக நிகழும் ஒரு சில சம்பவங்களை வைத்து இது சமத்துவ சமுதாயம் என்று தப்பான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது...

இன்று ஒரு இன் ஜினியர் பையனுக்கு - இன் ஜினியர் படித்த பெண் தான் மனைவி ஆக முடியும் அதேப் போல் தான் எல்லாத் துறையும் மாறி வருகிறது....

இதற்கும் அன்றைய கால சாதி முறைக்கும் பெரிதாக என்ன வித்தியாசம்...

அரசியல்வாதி தன் மூளையை வைத்து காலம் முழுவதும் அடுத்தவர் உழைப்பில் காலத்தை ஓட்டி தன் மகனையும் மகளையும் அதே துறைக்கு கொண்டு வந்து விடுகிறான்.

ஒரு மென்பொருள் துறைக்காக தமிழ்நாடே இருண்ட மாநிலமாக பல ஆண்டு காலம் மாறியிருக்கிறதே... மென்பொருள் துறையில் வேலைப்பார்க்கும் சதவீகிதத்தை கணக்கில் எடுத்துப் பாருங்கள்.... அன்றைய பிராமண சதவீகிதம் புரியும்...

உழைப்பவர்கள் எந்தக் காலத்திலும் காலில் போட்டு மிதிக்கப்படுவார்கள் என்பதை இன்றைய சமுதாயமும் நிரூபித்துக் கொண்டு தானிருக்கிறது...

அன்று பிராமணர்கள் வகுத்த கோட்பாடு படியும், வைசியர்களின் வசதிக்கு ஏற்றபடியும் ஆட்சி நடந்தது... அதற்கு மன்னர்கள் உதவினார்கள்

இன்று அரசியல்வாதிகளின் கோட்பாட்டின் படி, வியாபாரிகளின் வசதிக்காக ஆட்சி நடக்கிறது... இதற்கு இன்று ராணுவமும், காவல்துறையும் உதவுகிறது....

சாதி எப்படி ஒழியும்,,,, ?

அரசியல் இருக்கும் வரை பெயர் மாறுமே தவிர சாதிக் கோட்பாடு மாறவே மாறாது...

 நட்புடன் 
தமிழ்ராஜா

6 comments:

  1. absolutely correct. this was in my mind for long time. you correctly pointed out.
    very rarely only poor people can become doctor/engineer/powerful politician.

    ReplyDelete
  2. அந்தனன் : மென்பொருளில் வேலைப்பார்ப்பவர்கள்.
    சூத்திரன் : ஐ.டித் துறைக்கும் பொருந்தும்.

    Which is correct?

    ReplyDelete
    Replies
    1. இந்த பிரிவில் நிறைய குளறுபடிகள் இருக்கும். அதுப் போல் தான் ஆதியில் தொழில் முறையில் பிரிக்கப்பட்ட சாதியிலும்....

      இது ஒரு உரையாடல் தான் 100% சரியென்று அர்த்தமில்லை... இதில் உங்கள் கருத்துக்களும் இதற்கு வலு சேர்க்கலாம்

      Delete
  3. நவீன ஜாதிமயம் பற்றி மிக அழகாக கூறியுள்ளீர்கள்... வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சாதி ...தீயாகி சாம்பலாகும் வரை இப்படி பெயர்கள் மாறுபடுமே தவிர எந்த விதத்திலாவது வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

    ReplyDelete
  5. சாதியெனும் பேயை தீயிட்டு அழிக்கும் வரை இப்படி எந்த பெயரிலாவது வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் . நல்ல அலசல்.

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts