6.19.2013

ரணகளம்: என்னுடைய முதல் குறும்படம் (காணொளி)



( ஒரு போட்டியினால் தீண்டாமையை மாற்றிவிட முடியுமா?)இது கற்பனைத் தான் என்றாலும் என் மனதுக்குள் நிகழ்த்தி அதை நிஜத்தில் நீங்களும் பார்க்குமாறு வடிவம் கொடுக்கும் அளவு இந்த முயற்சி வந்திருக்கிறது. இதைத் தான் சமூக மாற்றத்திற்கான அடித்தளமாக நான் பார்க்கிறேன். போர்க்காய் என்ற ஒரு விளையாட்டை வைத்து தீண்டாமை என்ற ஒரு சமூக மடமையை ஒரு குறும்படத்திலாவது மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த ரணகளம் மூலம் எங்கள் குழுவிற்கு நிறைவேறியது. இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த என் நண்பர் நிவாஸ்குமாருக்கும், விக்னேஷ், குழு நண்பர்கள் அனைவருக்கும், குறிப்பாக லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர் சந்திரசேகர்,மற்றும் எங்களை மேலும் ஊக்குவித்த தினத்தந்தி, டெக்கன் கிரானிக்கல் நாளிதழிற்கும் இந்தப் பதிவின் மூலம் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் 

இந்தக் குறும்படத்தை என் பதிவுலக நண்பர்கள், மற்றும் வாசக நண்பர்கள் அனைவரும் கண்டு கருத்துரையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

 ரணகளம் : தீண்டாமையை வேரறுக்கும் முயற்சி



நட்புடன் 
தமிழ்ராஜா

5 comments:

  1. சிறுசிறு முயற்சி ஒரு நாள் வெற்றியாக மாறும்... உங்களின் எண்ணத்திற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. இன்னும் வெற்றிகள் காத்திருக்கு சகோ,,, பல உயரங்களை தொட இருக்கின்றீர்கள்... முயற்சி திருவினையாக்கும்...

    ReplyDelete
  3. முதல் முயற்சியே பார்க்கும் அனைவரின் உணர்ச்சிகளையும் தட்டி எழுப்புகிறது. அடுத்தடுத்த முயற்சிகள் மாபெரும் வெற்றியை தங்களுக்கு தேடித்தரும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சிந்திக்க தூண்டிய விழியம், மென்மேலும் தங்களின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துகள். நான் தங்கள் தளத்தின் பின்தொடர்பவர்கள் பகுதியில் இணைகிறேன். என் தளம்

    தமிழ்மொழி.வலை ( www.thamizhmozhi.net )

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts