Showing posts with label பூக்கள். Show all posts
Showing posts with label பூக்கள். Show all posts

10.16.2012

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (6)




எனக்காக காத்துக் கொண்டிருந்த
உன் விழிகளின் ஏக்கத்தை
அந்த ஒளிக் கூட என்னிடம்
சொல்ல முடியாமல் சீக்கிரம்
கதிரவனை மேற்கு நோக்கி
அனுப்பிக் கொண்டிருந்தது.
வான் வெளி யெல்லாம்
உன் விழிச் சிவப்பினைக்
களவாடிக் கொண்டிருந்தது.
உன் மெல்லியக் கைகள்
பூக்களைக் கோர்த்துக்
கொண்டிருந்தது.

9.12.2012

சீக்கிரம் பொழுது சாய்ந்தது



இந்த அரச மரத்தடியில்

இன்று மட்டும் ஏனோ

அம்மன் குடிவந்தது

நீ அமர்ந்ததைப் பார்த்தால்

எனக்கு வேறொன்றும் சொல்லத்

தோன்றவில்லை…

என்று எனக்காக காத்திருந்த

உன்னிடம் சொன்னேன்

முறைப்பாக இருந்த உன்னை

என் பேச்சு மேலும் கோபப்படுத்தியது

அம்மனுக்கு கோபம் வந்தால்

இந்த அடியேன் என்னாவது

பார்வையாலையே எரித்துவிடுவாய்

போல் இருக்கிறதே– என்றேன்

சற்று உன் முகம் சாந்தமானது

அம்மனுக்குப் பூ எங்கே?

என்று என்னை மடக்கினாய்—

மன்னித்துவிடு! உன் கூந்தலில்

எந்தப் பூவும் இடம் பெறமறுக்கிறது…

கோபத்தை மறந்து என் இதழ்களையே

கண் இமைக்காமல் ஆச்சரியத்தில் பார்த்து

ஏன்?  என்றாய்—

என்னை பொறாமைத் தீயில்

தள்ள நினைக்காதே அதிஷ்டக்காரனே!

அவளைப் பார்த்து பொறாமை

கொள்ள எங்களுக்கு மனமில்லை

என்று கெஞ்சுகிறது அத்தனைப்பூக்களும்….

என்றதும்

உன் முகம் மாறிய நளினங்களை

எந்தப் புகைப்படக் கருவியில்

நான் பதிவு செய்ய – என்

மனத் திரையைத் தவிர…

மேலும் கேட்டாய்—- சரி

அது என்ன அதிஷ்டக்காரன்?

உனக்கு சொந்தம் அல்லவா!

அதனால் சொல்லியிருக்கும்

என்றேன்….கிண்டலான

ஒரு பார்வை பார்த்தாய்

வேறு என்ன சொன்னது?

இருந்தாலும் பாவம் நீ

என்று மேலும்

சொல்லாமல் நிறுத்தினேன்.

ஏன்? நிறுத்துவிட்டாய்

சொல் ஏன் பாவம் நீ

என்ன சொன்னது?

என்று ஆர்வத்தோடு நீ கேட்க…

லேசான தயக்கத்துடன்

பூக்கள் நாங்கள் எங்கள்

அழகை மறைப்பதில்லை

உன்னவளோ ஆடைகொண்டு

அவள் அழகை மறைத்துவிடுகிறாள்

பாவம் தானே நீ என்றது -என்றேன்

நொடியில் உன் முகத்தில்

மின்னிய அந்த ஒளிச் சிதறலில்

நான் எரிந்து போகாதது ஆச்சரியமே!

திருடா! என்று என் தலையினை

பிடித்துக் கொண்டாய் …

என் தலை எழுத்து அன்று

சீக்கிரம் பொழுது சாய்ந்தது




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

9.09.2012

தமிழர்களின் பூக்கள் பற்றிய நுண்ணறிவு




நண்பர்களே நான் தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி பகிரப் போகும் இரண்டாவது பதிவு இது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற பதிவில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

”தமிழன் பெருமைகளை இன்றைய தலைமுறையிடம் சொல்லி தமிழனை சிறுமை படுத்தாமல் இருப்பது நல்லது.”

என்னைப் பொறுத்தவரையில் இது பெருமையல்ல... நம்மை நாம் மீட்டெடுக்கும் முயற்சி. துரித உணவுகளினால் ஆரோக்கியத்தை இழக்கும் மக்கள் இயற்கை உணவின் மகத்துவத்தையும், அதன் சிறப்பையும் உணர்ந்த பின்னர், இது முதலிலேயே தெரிந்திருந்தால் என்று கவலைப்பட்டு மீள முயற்சிக்கின்றனர். அவர்களுக்கான முன்னெச்சரிக்கை தான் இதுவெல்லாம். இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கின்றனர். முடிந்தால் பின்பற்றுங்கள் என்று சொல்வது தான் இந்தப் பதிவின் நோக்கம்.

3.07.2012

நாணத்தால் தலைக் கவிழ்ந்தது பூக்கள்


 
உன் வீட்டுத் தோட்டத்தில் தான்
பூக்கள் எவ்வளவு அழகாகப் பூக்கிறது
என் வீட்டில் மட்டும் அப்படி
பூப்பதில்லையே

12.30.2011

இது போதும்!


 முதன்முதலாய் நீ என் வீட்டிற்கு
வருகிறாய் என்றதும் — என்
வீட்டிற்குள் தான்
எத்தனை மாற்றங்கள்–உன்னால்
நிகழ்ந்தது தெரியுமா?

Popular Posts