Popular Posts

நம் வரிப் பணம் நமக்கல்ல நாட்டிற்காவது …?

12.28.2012 · 7 comments    என்ன இது நம் வரிப் பணம் நமக்கல்ல நாட்டிற்காவது பயன்படுகிறதா...? ஆமாம், நாம் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம் அந்த வரிப் பணத்தில் தான் நம் அரசாங்கம் நடக்கிறது. இது அனைவரும் அறிந்த ஒன்றே…

ரணகளம் : குறும்படம் திரையீடல்

12.26.2012 · 7 commentsபதிவ நண்பர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் வணக்கம். என்னுடைய முதல் குறும்படம் (ரணகளம்) திரையீடல் வரும் டிசம்பர் மாதம் 30ந்தேதி ஏ.வி.எம் ஸுடியோவில் பகல் 11.00 மணியளவில் நடைப் பெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு பதிவ மற்றும் வாசக நண்பர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். 

கண்ணாடியின் கேள்வி

12.21.2012 · 5 comments
ஏன் இப்படி நாயைப் போல் அலைகிறாய் ?
உனக்கென்ன குறை வைத்தேன் நான் ?
இப்படி சோம்பி கிடக்க வா நீ பிறந்தாய், உனக்குள் இருந்த அறிவு எங்கே?
உன்னை மனிதனாக்கிய  அந்த சிந்தனை எங்கே …?
எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி இப்படி இருப்பது உனக்கு
உறுத்தவில்லையா? உன்னை எந்த ஒரு கலங்கமுமின்றி வளர்க்க எத்தனை
முயற்சி செய்திருப்பேன். இருந்தும் நீ இப்படி இருக்கலாமா?

திரைவிமர்சனம் : கும்கி அழகான குழப்பம்

12.16.2012 · 6 comments        சிவாஜியின் பேரன்,பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகன்,இந்தப்படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் சுந்தரபாண்டியனில் முதலில் காட்சி தந்து  மக்களின் மனதில் இடம் பிடித்த கதாநாயகி லட்சுமி மேனன்,இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்குனர் பிரபுசாலமனின் மைனாவின் பிரம்மாண்டமான வெற்றி, யானைகள் பற்றிய கதை,இப்படி நிறைய எதிர்ப்பார்ப்பை மக்களுக்கு இந்த படம் திரைக்கு வருவதற்கு முன் தந்திருந்தாலும். இந்த படத்தின் இசை வெளியீட்டுக்குப் பின் தான் இந்தப் படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பு மேலும் பன்மடங்கானது.
         உண்மையில் இந்தப் படம் அந்த எதிர்ப்பார்ப்பையெல்லாம் பூர்த்தி செய்ததா…?

தமிழக மீனவர்களின் இரக்கமிக்க துணிகரச் செயல் (பகிர்வு)

12.11.2012 · 6 commentsபடத்தில் - மீனவர் மணிகண்டன் மீனை தூக்கிச் செல்கிறார்

         

 என்னுடைய வலைத்தளத்தில் என்னைப் பாதித்த செய்திகளை மட்டும் எப்பொழுதெனும் நான் பகிர்வதுண்டு. தற்பொழுது என்னை மிகவும் நெகிழ வைத்த செய்தியை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
          
      மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.

திரைவிமர்சனம்: நீர்ப் பறவை ஆழமாக நீந்தியிருக்கலாம்.

12.07.2012 · 7 comments
  நீர்ப்பறவை தலைப்பே என்னை திரையரங்கம் நோக்கி ஈர்த்தது. மேலும் அடிக்கடி தொலைக்காட்சியில் தென்படும் துண்டுக் காட்சிகள் நீர்ப்பறவையைப் அவசியம் பார்த்தே ஆக வேண்டுமென்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்திவிட்டது.மேலும் படத்தின் இயக்குனரும் நடித்த நடிகர்களுக்கும் மற்றும் அதில் பணி செய்த அத்தனைக் கலைஞர்களும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் : கொண்டாட்டம்

12.02.2012 · 10 comments

       இயக்கம் என்பது சின்ன விஷயமல்ல என்று பலர் சொல்வார்கள். ஆனால் சின்ன சின்ன விஷயங்களில் தான் இயக்கமே இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி தரணிதரன். டிஜிட்டல் கேமராவான 5-டியில் குறைந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டு கதையின் பலத்துடன் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவரும் ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” இயக்குனரின் துணிச்சலான முயற்சி.

பாக்கெட் மனியின் பூதாகரப் பிரச்சினைகள் நீயா நானாவில்

11.30.2012 · 7 comments


       இந்த வார நீயா நானாவில் பாக்கெட் மனிப் பற்றிய நிறை குறைகளை விவாதிக்கையில் தான் நம் சமூகத்தின் அத்தியாவசியத் தேவைகளின் புரிதலின்மையைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.
       நீயா நானாவில் ஒரு பக்கம் பெற்றோர்களும், மறுபக்கம் பிள்ளைகளையும் அமர வைத்து  விவாதிக்கையில் தான் பிள்ளைகளைக் காட்டிலும் பெற்றவர்கள் எத்தனைப் பெரிய தவறை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இரசித்த நூல்கள்:வெண்ணிற இரவுகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

11.19.2012 · 7 comments
கனவுலகவாசியின் நினைவுகளிலிருந்து என்று புத்தகத்தை திறக்கையிலேயே ஆரம்பிக்கிறது வெண்ணிற இரவுகள். இந்த குறுநாவலைப் பற்றி பேராண்மை படத்தில் ஒரு இடத்தில் ஜெயம் ரவி சொல்வார். உடனே அந்த புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்கிவிட்டேன். இப்பொழுது படித்தும் விட்டேன். அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதலாம் என்று தொடங்குகையில் தான். எனக்கு முன் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியவர்களின் விமர்சனத்தைப் படிக்கலாம் என்று தேடினேன். அது நீண்டு கொண்டே செல்கிறது.

உள்ளத்தின் ஆழத்திலிருந்து…

11.18.2012 · 15 comments
விழுந்தது மழைத்துளியோ!
என் காதல் உயிர்த்துளியோ!
உன் மேனித் தொட்ட துளிகளில்
என் காதலுமுண்டோ…?

இந்த பெண்மையின் மனதை
ஒரு சொல்லினில் அறிய
நீ முயற்சி செய்கிறாய்
நீ முயற்சி செய்கிறாய்
நானும் சொல்லிடுவேனோ…!
எளிதில் நானும் சொல்லிடுவேனோ…

தீபாவளி ஞாபகங்கள்

11.13.2012 · 3 comments

தீபாவளி என்றதும் எல்லோருக்கும் பல ஞாபகங்கள் வரும். முதலில் பட்டாசு.புது சினிமா,பலகாரம்,இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இன்னும் சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆனால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது என் பாட்டி வீடு தான்.

கல்லணை : தொழில்நுட்பம்

11.09.2012 · 17 comments
        
        என்னுடைய வலைத்தளத்தில் நான் வேறு தளத்தில் இருந்துப் பகிர்ந்துக் கொள்ளும் பதிவுகளில் இதுவும் ஒன்று. சிலப் பதிவுகள் மக்களை, குறிப்பாக தமிழக மக்களை சென்றடைய வேண்டும் என்பதால் இந்த பதிவுகளை நான் பகிர்ந்துக் கொள்கிறேன். இது உலக மக்கள்  தமிழர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் முயற்சி அல்ல. நாம் நம் முன்னோர்கள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்யினாலே இப்பகிர்வு.

இரசித்த நூல்கள்: காதலில் துயரம் - கதே

11.06.2012 · 15 comments     
  நீண்ட நாட்களாக நான் படித்து ரசித்த புத்தகங்களைப் பற்றி பதிவிட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. ஆனால் அதற்கான சரியான நேரம் எனக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் நான் படித்த கதேயின் காதலின் துயரம் என்னை அதற்கான நேரத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். எனவே தான் அதற்கு ”ரசித்த நூல்கள்” என்ற தலைப்பிட்டு படித்த புத்தகங்கள் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். அதில் முதலில் நான் எழுதப் போவது கதேயின்” காதலின் துயரம்” தமிழாக்கம் எம். கோபாலகிருஷ்ணன்.

ராமரும்,நபிகளும் : மதநல்லிணக்கம்

11.05.2012 · 4 comments  சமீபத்தில் தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள் பேசியதையே இங்கு உங்களிடம் நான் பகிர்ந்துக் கொள்கிறேன்
       மதம், மனங்களிலுள்ள அறியாமையை பக்தி என்னும் ஒளியால் அகற்றவே உலகில் பல மதங்கள் தோன்றியிருக்கின்றது. அதைப் பற்றி கடந்த சனிக்கிழமையன்று சுகிசிவம் அவர்கள் பேசுகையில் அருமையான ஒரு தகவலை சொன்னார்.

இனி இனிக்கும்

11.01.2012 · 10 comments


மனதிலிருந்து எந்த நினைவுகளையும்
அழித்துவிட முடியாது
என்று சாலையைக் கடக்கையில்
உன்னைக் கணடதும்
தான் தோன்றியது.
இரண்டு வருடங்களுக்கு முன்
இதே சாலையில் கைக்கோர்த்தபடி
நடந்த அந்த இரு உருவங்கள்
பளிச்சென மின்னல் போல்
என் மனக்கண் முன் வந்துப் போனது
அதே உருவங்கள் தான் இன்றும்
வேறு ஒரு பரிமாணத்தில் மாறி
உலகில் உலவிக் கொண்டிருப்பதாய்
எனக்கு எண்ணத் தோன்றியது.
என் சிந்தனையை சட்டென
உனதுப் பார்வை கலைத்துப் போட்டது.
நீ என்னைப் பார்த்தப் பார்வையில்
உன்னைப் பற்றிய எந்த உணர்வும்
வெளிப்பட்டுவிடக் கூடாதே என்ற
அச்சஉணர்வு உனக்கிருப்பதை
என்னால் உணர முடிந்தது.
அந்தப் பார்வையை விலக்காமல்
என்னருகில் வந்து
நின்றாய்
பழைய நினைவுகளின்
எந்த சுவடுமின்றி
நிகழ்வில் ஒரு வார்த்தையை
பிரயோகிப்பது எத்தனை கடினம்
என்பதை அந்நொடி தான் உணர்ந்தேன்
ஏனெனில் அந்த முயற்சியில்
நானும் தோற்றேன் நீயும் தோற்றாய்
உனது விழியும் எனது விழியும்
சந்தித்துக் கொண்ட அந்த தருணம்
மட்டும் எதுவும் பேசாமல்,
எதையும் கேட்காமல் அந்த நொடிகள்
கடந்துவிடக் கூடாதாயென்று
மனம் துடித்தது.
வாகனங்களின் சத்தத்திலும்
உனது சுவாசக்காற்றின் துடிப்பை
என்னால் உணர முடிந்தது.
என்ன தான் நாம் பேசிவிட முடியும்
என்றெண்ணுகையில் தான்
எதிர்ப்பார்க்காத ஒரு கேள்வியை
கேட்டாய் நீ
நல்லாயிருக்கீங்களா…?
வேண்டாம் நான் பொய்
சொல்ல மாட்டேன் என்றதுக்கு
எனக்கு வரும் என்று
சொன்ன நீ
நல்லாயிருக்கிறேன்
உன் நினைவுகள் இல்லாமல்
உன் கனவுகளும் இல்லாமல்
யாருடனோ எங்கையோ
என்றாய்…
மனதின் ஒட்டு மொத்த வலிகளும்
ஒரு வரியில் சரியாகி விட முடியுமா…?
என் விழிகள் அவளின் விழிகளை
நேருக்கு நேர் சந்தித்தது
கண்ணீர் மலர்கள் அவள் விழிகளில்
மலர்ந்து கன்னத்தின் வழியே
உதிர்ந்துக் கொண்டிருந்தது.
அந்த சாலையின் ஓரத்தில்
உன் கரங்களைப் பற்றி
உண்மை சொல்லட்டுமா என்றேன்
நீயும் தலையை ஆட்டினாய்
எனக்கு சர்க்கரை இனித்து
இரண்டு வருடமாகிறது. என்றதும்
நீ லேசாக நகைத்தாய்
உன் கரங்கள் என் கரத்தை
அழுத்தமாய் பற்றியது
இனி இனிக்கும் என்று
கன்னத்தில் இருந்த ஈரத்தைத்
துடைத்தபடியே சொன்னாய் நீ

நட்புடன் 
தமிழ்ராஜா

பீட்சா : துணிச்சலான பயமுறுத்தல்

10.30.2012 · 12 comments


       நான் இந்தப் படத்தை முதல் நாளேப் பார்த்துவிட்டேன். இருப்பினும் அதைப் பற்றி எழுத இப்பொழுது தான் நேரம் கிடைத்தது. அதான் ஒரு வாராமா நிறைய படித்துவிட்டோமே நீ என்ன மிகவும் தாமதமாக வந்திருக்கிறாய் என்று கேட்பவர்களுக்கு இங்கே நான் சொல்லிக் கொள்வது இது விமர்சனமல்ல… இது ஒரு விவாதம்.

மாற்றானும் கே.வி.ஆனந்தின் குழப்பமும்

10.24.2012 · 8 comments

   மாற்றான் பல விமர்சனங்களை இணையத்தில் பெற்று மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் தொலைக்காட்சியைத் திறந்தால்,அனைத்து சேனல்களிலும் சூர்யா நம் கண் முன் வந்து மாற்றானில் தானும் மாற்றான் குழுவும் சந்தித்த சவால்களை சொல்கிறார்கள்.

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (7)

10.21.2012 · 3 comments
உன்னுடைய எடையறிய
நீ நின்ற இயந்திரம்
ஏனோ ! உன் எடையை
மட்டும் காட்ட மறுத்தது.

கங்கை நீர் புற்று நோயை உண்டாக்கும்!: ஆய்வு

10.19.2012 · 8 comments
இதைப் பற்றிய ஒரு பதிவை நான் ஏற்கனவே என் வலைத்தளத்தில் எழுதியிருந்தாலும் , இது அவசியம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு என்பதால், என் தளத்தில் பகிர்கிறேன்

புதுடெல்லி:புனித நதியாக கருதப்படும் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகிவிட்ட நிலையில், தற்போது கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரணகளம் : என்னுடைய முதல் குறும்படம்

10.18.2012 · 12 comments

          

       ரணகளம் என்னுடைய முதல் குறும்படமாக அமைந்துவிட்டது. உண்மையில் குறும்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இருந்தது இல்லை. 
           ஆனால் என் நண்பனுக்கு உதவ சென்ற நான் குறும்பட இயக்குனராகிவிட்டேன். கல்லூரியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன் விளையாட்டாக அங்கு அவனுடன் வேலைப் பார்த்தவர்களுடன் சேர்ந்து ஒரு கதைக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்புக்குரிய அனைத்து வேலைகளையும் தொடங்கிவிட்டான்.

பேராசையும் பெரியப் படங்களின் வீழ்ச்சியும்

10.17.2012 · 2 comments
       2012 ஆம் ஆண்டு திரைத்துறையில் பெரிய சலனத்தை ஏற்படுத்திய ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். பல கோடி சம்பளத்தை ஸ்டார்களுக்கு கொட்டிக் கொடுத்து, பல கோடிகளில் படங்களை தயாரிக்கும் பழக்கம் தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக நிகழ்ந்த வண்ணமிருப்பது அனைவரும் அறிந்ததே…

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (6)

10.16.2012 · 6 comments
எனக்காக காத்துக் கொண்டிருந்த
உன் விழிகளின் ஏக்கத்தை
அந்த ஒளிக் கூட என்னிடம்
சொல்ல முடியாமல் சீக்கிரம்
கதிரவனை மேற்கு நோக்கி
அனுப்பிக் கொண்டிருந்தது.
வான் வெளி யெல்லாம்
உன் விழிச் சிவப்பினைக்
களவாடிக் கொண்டிருந்தது.
உன் மெல்லியக் கைகள்
பூக்களைக் கோர்த்துக்
கொண்டிருந்தது.

எனது பிளாக்கில் பிரபலமான இடுகைகள் எல்லாம் மாறிவிட்டன

10.15.2012 · 26 comments
       இன்று காலை எனது பிளாக்கை திறந்துப் பார்க்கையில் எனது பிரபலமான இடுகைகள் அடங்கிய பகுதியில் இடுகைகள் எல்லாம் மாறியிருக்கின்றன. அது மட்டுமின்றி எனது பேஸ் வீயூவில் இருந்த கவுண்ட் அப்படியே பல ஆயிரங்களில் இருந்து மறைந்து 20க்கு வந்துவிட்டது.

மகிழ்ச்சி பற்றி நீயா நானாவில் அலசல்

10.14.2012 · 2 comments
       டந்த வாரத்திலேயே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். இருப்பினும் சில அலுவல்களால் எழுத முடியாமலேயே இருந்தது. இன்று தான் இதற்கு நேரம் வாய்த்திருக்கிறது.
       கிழ்ச்சியைப் பற்றி 30.09.2012 நடந்த நீயா நானாவில் பகிர்ந்துக் கொண்ட கருத்துக்கள் உண்மையில் நம் சமூகத்தின் அச்சு அசல் கலாசாரத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது. ஆம் அந்த நிகழ்வில் சந்தோசம்  என்ற வார்த்தைப் பிரயோகத்திலே அவர்கள் பேசினார்கள்.அந்த வாரம் பார்க்காதவர்கள் இங்கே கிளிக் செய்யவும் நீயா நானா

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (5)

10.09.2012 · 8 commentsகாற்றின் தூண்டுதலால்
அசைந்துக் கொண்டிருந்த
அந்த ஆலமரத்தடியில்
சையாமல் வெகு நேரமாய்
மெளனமாய் நின்றிருந்த
உன்னை கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தேன் நான்…
எனது பார்வையை ரசித்துக்
கொண்டிருந்த நீ திடீரென
என்னிடம்
ன்னை ஏன் காதலிக்கிறாய்…?

வலைப்பதிவர்களும் நாங்களும் கலாட்டா 2 (சினிமாக்காரர்கள்)

10.06.2012 · 4 comments


ரொம்ப நாளா இந்த புலம்பலை நான் கேட்டுட்டு வரேன். அது என்ன புலம்பலுன்னு உங்களுக்கும் இந்த பதிவு மூலம் விளக்கவே இந்த முயற்சி...
இது சினிமாக்காரர்களின் புலம்பல்…  புதிதாக ஒரு திரைப்படம் எடுக்க திட்டமிடும் திரைப்பட இயக்குனரும், அவருடன் இரண்டு உதவி இயக்குனர்களும்….

காந்தி கணக்கு : தமிழர்களின் துரோகச் செயல்(தெளிவான விளக்கம்)

10.02.2012 · 21 comments


காந்தி கணக்கு” தமிழ்நாட்டில் பெரும்பாலும் அபத்தமாகப் பிரபலமாகியுள்ளது. இந்த வார்த்தையின் தோற்றம் பற்றி இன்று காலை ஒரு தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் பேசினார்.
       அதில் காந்தி கணக்கு என்ற வார்த்தை எப்படி வந்தது என்ற வரலாற்றைச் சொன்னார். பெரும்பாலும் திரும்ப வராத, ஏமாற்றப்பட்ட கணக்குகளையே காந்தி கணக்கில் எழுது என்று சொல்லும் வழக்கம் தமிழர்களிடையே பரவி  இருக்கிறது.
       இந்த வழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டும் தானா … பிற மாநிலங்களிலும்  இருக்கிறதா ? என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில் தான் வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த காந்தி கணக்கு என்ற சொல்வழக்கு பரவியிருக்கிறது.
       ஒரு நேர்மையான மனிதரைப் பற்றி இப்படி ஒரு வழக்கம் நிலவுவதை எண்ணி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட்டே ஆக வேண்டும். இருப்பினும் இந்த வார்த்தை தோன்றிய விதம் தமிழ்நாட்டில் வேறு விதமாகவே உள்ளது.
       இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் இருந்த காலக்கட்டங்களில் பல நிறுவனங்களின் கணக்குகளில்  குளறுபடிகள் வரும் பொழுதெல்லாம், அந்த தொகையை சரி செய்ய “ மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்திற்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது என்ற கணக்கில் சேர்த்துவிடுவார்களாம். அது மருவி காந்தி கணக்கு என்று மாறி இன்றும் தமிழ் மக்களிடம் பரவி வருகிறது.

       இந்த தலைப்பில் தமிழில் ஒரு திரைப்படம் வேறு வந்தது.பிறகு அந்த தலைப்பிற்கு எதிர்ப்பு வலுக்கவே அதை மகான் கணக்கு என்ற தலைப்பில் வெளியிட்டார்கள். காந்தி கணக்கு என்ற சொல்லிற்கு பின்னே தமிழர்களாகிய நம்முடைய தேச துரோகச் செயல் அப்படமாகத் தெரிவதை நம்மால் மறுக்க முடியாது.
       சுதந்திரப் போராட்டத்திற்காக உதவி செய்யவில்லையென்றாலும், நன்கொடை வழங்கவில்லையென்றாலும், கணக்கில் வராத தொகையையெல்லாம், காந்தியின் போராட்டக் கணக்கில் எழுதிய அந்த துரோகச் செயலை தமிழர்கள் செய்திருக்கிறார்கள் எனும் பொழுது உண்மையில் ஒரு தமிழனாக நான் தலைக் குனிகிறேன்.
       அதுவும் காந்தி கணக்கு என்ற வார்த்தையின் பிரபலம், ஒரு குறிப்பிட்ட தமிழர்களின் ஊழலைப் பறைச்சாற்றுவதாகவே உள்ளது. அந்தக் குறிப்பிட்ட தமிழர்களின் இழிவான செயலால், ஓட்டு மொத்த தமிழர்களின் முகமாகவும் இது இன்று மாறியுள்ளது.
       சுதந்திரப் போராட்டத்திற்காக தன்னுடைய சொத்தையெல்லாம் விற்று கப்பலோட்டியவரும், தமிழர்களாகிய நம் தன்மானத்தைத் தூக்கி நிறுத்தியவருமான வ.உ.சிதம்பரனார் பிறந்த மண்ணில் தான் இப்படி சில ஊழல்காரர்களும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது, மனது வலிக்கிறது.
       அது மட்டுமின்றி அதை ஏற்கும் விதத்தில் நாமும் தெரிந்தோ தெரியாமலோ இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எத்தனைப் பெரிய இழிவான செயல். தமிழர்களின் நகைச்சுவை சிந்தனை ஒரு மகாத்மாவையே இழிவுப்படுத்தும் அளவு கேவலமாகப் போனது எதனால்…?
       சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட நாட்டிற்காக கொடுக்கும் கொடையில் தப்பானக் கணக்கை காட்டி அதை காந்தியின் பெயரிலேயே எழுதும் போக்கு எப்படி நம் தமிழர்களுக்கு வந்தது. இன்று இந்திய அரசாங்கம் எதற்கும் எங்களுக்கு உதவவில்லை, என்று கொடித் தூக்கும் பேச்சளவு தமிழர்கள், சுதந்திர வரலாற்றின் ஏடுகளை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். பக்கத்து நாட்டு விடுதலைக்காக சீறி எழும் தமிழ் வீரர்கள், நம் தேச விடுதலைக்காக நாம் ஆற்றிய ஊழல் பணியை திரும்பிப் பார்த்தால், நாம் இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதையற்று, தமிழன் என்று சொல்லிக் கொள்ளவும் வெட்கப்பட்டு, மனிதன் என்று சொல்லிக் கொள்ளவும் திரானியற்று தான் இருப்போம் என்பதை மறந்துவிடக் கூடாது. 

  தமிழகத்தில் தியாகம் ஒளிவிட்ட காலக்கட்டத்திலேயே, நம் தேசத்திற்காக கொடுத்த கொடையில், இப்படியொரு ஊழல் இருந்திருக்கிறதே…

       இன்றோ சுயநலத்தின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழகத்தில் ஒவ்வொரு நன்கொடையிலும், திட்டத்திலும் எத்தனை ஊழல் நடந்துக் கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே...
வறுமை எனபது வன்முறையின் மோசமான ஒரு முகம் என்று சொன்னார் காந்தி.  இந்தியாவின் வறுமைக்கு முக்கிய காரணமே ஊழல் தான். அந்த ஊழலின் முதல் படி தமிழகத்தில் காந்தியின் பேரிலேயே ஆரம்பித்திருக்கிறது என்பதை நாம் ஆதரிக்கலாமா…?
       தமிழர்களாகிய நாம் ஊழலைத் தடுக்க முடியவில்லையென்றாலும், இந்த வார்த்தையின் பிரயோகத்தையாவது தடுக்கலாம் இல்லையா…?
       நாம் தமிழர்கள் என்பது உண்மையென்றால், இந்த வார்த்தையை நிச்சயம் நம் சூழலில் இருந்து ஒழித்தே ஆக வேண்டும். இது மகாத்மாவிற்கு நாம் அளிக்கும் மிகப் பெரிய மதிப்பு மட்டுமின்றி, நம் வருங்கால தலைமுறையினர் ஊழலை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையும் தான்.
இப்படி ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் என்பதை வருங்கால தலைமுறையினர் எண்ணி அதிசயப்படுவர், அது மட்டுமின்றி அதை நம்புவது அவர்களுக்கு கடினமாக இருக்கும் “ என்று காந்தியின் மறைவில் ஒரு புகழ்ப் பெற்ற மாமனிதர் சொன்னார்.
       ஆம் அவரின் வாழ்க்கை அப்படியொரு எளிமையானது. நம் கற்பனைக்குள் எளிதில் அகப்படாதது. அவர் தோன்றிய இந்நாளில் தமிழர்களாகிய நாம் இந்த ஊழல் வார்த்தையை நம்மிடையே இருந்து அகற்றுவதை கடமையாகக் கொள்வோம்.தமிழன் மேலுள்ள கரையை அகற்றுவோம். விரைவில் வார்த்தையில் மறையும் ஊழல் நம் வாழ்க்கையிலும் மறையும் என்பதில் நம்பிக்கை வைப்போம்
      
      வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

இயற்கையின் மாற்றமும் அமைதியும் (ஆராய்ச்சி 1)

9.28.2012 · 12 comments             நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவது போல் ஒரு உணர்வு. எழுத்துக்கு என்றுமே நான் அடிமை. எழுதுவது என்றுமே எனக்கு பிடித்த விசயம். அதற்கு இந்த நொடி வாசகர்களாகிய  நீங்கள் உதவியாக இருக்கிறீர்கள்.எழுதுவதை யாரேனும் படிக்க வேண்டுமே...

இயற்கையின் மெல்லிய அசைவுகளில்

9.25.2012 · 4 comments
கண்களை மூட கடினப்பட்டு
சோர்ந்திருந்த வேளையில்
உதடுகள் திறப்பதே
அரிதாகிவிட்ட நொடிகளில்
செவிகள் மட்டும் எதையோ
கேட்கத் துடிக்கும்

வலைப்பதிவர்களும் நாங்களும் கலாட்டா (அரசியல் தலைவர்)

9.21.2012 · 10 comments
இணையத்தில் வலைப்பதிவர்களின் எழுத்துக்கள் பிரபலமடைந்து அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தொழில்,சமூகம் சார்ந்த உறுப்பினர்களும் எப்படிப் பார்க்கிறார்கள். அதை தங்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் கருதும் அவர்களுடையை மனநிலையை நகைச்சுவையோடு சொல்லலாம் என்ற சிறு முயற்சியே இந்த பதிவு. முதல் முயற்சியும் கூட…
கட்சி தொண்டர் :  தலைவரே இந்த வலைப்பதிவர்கள் தொல்லை தாங்க முடியலை. எதுன்னாலும் எழுதிபுடறாங்க… பத்திரிக்கைல வர்றதுக்குள்ள் நம்மள வறுத்தெடுத்துப் புடறாங்க…

காதலும் கடவுளும்

9.19.2012 · 6 comments

       மனிதர் உணர்ந்துக் கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது... இது அடிக்கடி நிறைய காதலர்கள் மத்தியில் உச்சரிக்கப்படும் ஒரு வாசகம் தான். காதலர்கள் யாரிடம் கேட்டாலும் எங்களின் காதல் புனிதமானது என்று தான் சொல்கின்றனர். பிறகு சில வருடங்களிலோ,மாதங்களிலோ,வாரங்களிலோ, நாட்களிலோ காதல் தன் புனிதத்தை அவர்களிடன் இழந்துவிடுகிறது. அதே காதலர்களை கேட்டால், காதல் எல்லாம் வெறும் மாயை என்று சொல்கின்றனர்.

சித்திரப் பெண்ணழகே !

9.16.2012 · 7 comments


சித்திரப்  பெண்ணழகே ! உன்னை
என்  சிந்தையில்  வைத்திடவே
கண்மலர் பூத்தி டம்மா  பாவையே
பார்வை  ஒருங்கிடவே

என்னையே  மனதில்  வைத்தாய்
என்னுடன்  நினைவையும் 
சேர்த்து  வைத்தாய்
கண்ணிலே  காதலையே  கன்னியே
என்னுள்  ஏன்  வைத்தா

என் உதிரம் கலந்த நன்றி உனக்கு...

9.15.2012 · 13 commentsமேகம் துடைத்து

மழைத்துளியாய்

கருங்கூந்தலை நனைத்து…

துளி மணலில் கலந்து

பாதங்களை தடவும் நீர்த்துளியே…

கோடான கோடி நன்றிகள் உனக்கு…

என்னவளின் குடைக்குள் செல்ல

உதவியதற்கு…

கும்கியில் மனதை வருடிய பாடல்

9.13.2012 · 6 comments


இது வரை இப்படி ஒரு பதிவை நான் எழுதியதில்லை. என்னவோ தெரியவில்லை. இந்தப் பாடலைக் கேட்டப் பின்பு எழுதாமல் இருக்க முடியவில்லை. காரணம் நேற்றிலிருந்து என் மனதை மிகவும் ஆக்ரமித்திருப்பது இந்தப் பாடல் தான்.

தாய்மார்களின் புத்திசாலித்தனமும் vs டாக்டர்களின் முட்டாள்தனமும்

· 13 commentsஇந்த வார நீயா நானா நிகழிச்சியில் விவாதங்கள் மிகவும் சூடாகவே இருந்தது. தாய்மார்களுக்கும் டாகடர்களுக்குமான கருத்துரையாடல்களைத் தாண்டி நம் சமூகத்தின் மருத்துவம் பற்றிய புரிதலையும், புரிதலின்மையையும் பார்க்க முடிந்தது.

குழந்தைகளுக்கு தாய்மார்கள் கொடுக்கும் நாட்டு மருந்தும்,பாட்டி வைத்தியமும் வெறும் முட்டாள் தனம். அதனால் எந்த பயனும் இல்லை என்பது தான் டாக்டர்களின் ஒட்டு மொத்த விவாதமாக இருந்தது.

அதை எதிர்த்துப் பேசிய தாய்மார்களின் கருத்தில் நான் பிரமிக்க வைக்கும் மருத்துவம் பற்றிய ஆழமான புரிதலையும் அறிவையும் எதிர்ப்பார்க்கவே இல்லை.

ஏனெனில் அவர்கள் முன் டாக்டர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கு அவர்கள் அளித்த பதில் வியக்க வைத்தது.

அவர்கள் முன் டாக்டர்கள் வைத்த குற்றச்சாட்டுகள்

குழந்தைக்கு உரம் என்று சொல்லும் பிரச்சினைக்கு அவர்களே தீர்வு காண்பது.

காதில் எண்ணெய் என்று கண்டதை ஊற்றுவது

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது.

விளக்கெண்ணை உபயோகிப்பது.

வசம்பை உபயோகப்படுத்துவது.

இதற்கு தாய்மார்களின் வரிசையில் நிறைய பதில்கள். குழந்தைக்கு உரம் விழுவது என்பது யாரெனும் தூக்கத் தெரியாமல் தூக்கும் பொழுது ஏற்படுவது என்று சொன்னார்கள். இன்னும் சிலர் நிறைய காரணங்கள் சொன்னார்கள்.

தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பதால், உடல் சூடு தணிகிறது. தோல் புதுப் பொலி பெறுகிறது.

விளக்கெண்ணை சூட்டைத் தணிக்கிறது. வயிற்று வலிக்கு சிறந்த மருந்து.

வசம்பு என்பது பிள்ளை வளர்ப்பான். என்று அதை எதிர்த்த டாக்டர்களிடம் ஆனித் தரமாக தங்களின் கருத்தை முன் வைத்தார்கள்.

ஆனால் டாக்டர்கள் ஒரு அதிர்ச்சித் தரும் பதிலைச் சொன்னார்கள். உரம் என்ற ஒன்று இல்லவே இல்லை.அப்படி ஒரு வார்த்தை எங்களின் மருத்துவ அகராதியில் இல்லை. என்றும் உறுதிப்படக் கூறினார்கள். அப்படி ஒரு குழந்தை ஒரு பிரச்சினையுடன் வந்தால் அதற்கு நீங்கள் செய்யும் மருத்துவம் என்ன என்ற கேள்விக்கு ஒருவரும் விடையளிக்கவில்லை

குழந்தை அழுதால் அதற்கு என்னப் பிரச்சினை என்றேத் தெரியாமல் வசம்பை அரைத்துத் தேய்பதும்,மற்றும் இன்னும் சில மருத்துவம் செய்வதும் முட்டள்தனம்.

மொத்தத்தில் டாக்டர்களின் வாதத்தில் நாட்டு வைத்தியமும்,பாட்டி வைத்தியமும் முட்டாள்தனம்.எனவே அதை தயவுச் செய்து பயன்படுத்தாதீர்கள் என்றும் வேண்டிக் கொண்டார்கள்.எனக்குத் தெரிந்து இன்று நிறையப் பேர் இதைத் தான் சொல்கிறார்கள். ஆனால் நான் இந்தக் கட்டுரையை இத்துடன் முடித்துக் கொண்டால் டாக்டர்களின் முட்டாள்தனத்தை நான் கண்டதுப் போல் நீங்கள் எப்படி அறிவீர்கள்.

இன்றைய டாக்டர்களின் மருத்துவம் பற்றிய பார்வைகள் மேல் நாட்டின் விஞ்ஞானக் கண்டுப்பிடிப்புகள் சார்ந்தே இருக்கிறது.இதை அங்கிருந்த ஒவ்வொரு டாக்டர்களின் பேச்சிலும் தெளிவாகத் தெரிந்தது, இருப்பினும் ஒரு டாக்டரைத் தவிர…,

ஏனெனில் அவர் தாய்மார்களின் பக்கம் அமர்ந்திருந்தார். அவர் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட எதிர்ப் புறம் அமர்ந்திருந்த ஒரு டாக்டரும் விடையளிக்கவில்லை.

காரணம் நம் அலோபதி டாக்டர்களில் பெரும்பான்மையானோர் நம் இந்திய குறிப்பாக நம் தமிழக உணவு முறைகளைப் பற்றிய பொதுவான அறிவுக் கூட இல்லாமல் இருப்பதே முக்கிய காரணம்.இந்த நிகழ்ச்சி மூலம் அது வெளிப்படையாகவே அனைவர்க்கும் தெரிந்தது.

இஞ்சியின் குணத்தைப் பற்றித் தெரியவில்லை,வசம்பின் மருத்துவக் குணம் பற்றிய அறிவில்லை. எல்லாவற்றிற்கும் மேல், கீழா நெல்லியின் சரித்திரமே அங்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லை. இதைப் பற்றி அவர்கள் பேசுகையில் தான் ஒரு தகவலை சொன்னார்கள்

மஞ்சள்காமாலை என்பது சாதாரணமாக அதுவாகவே சரியாகிவிடும். அதற்கு நீங்கள் எந்த மருந்தும் சாப்பிடத் தேவையில்லை.ஏனென்றால் அது வைரஸ் மூலம் பரவக் கூடியது என்றும் மேலும் வைரஸ் மூலம் பரவக் கூடிய அம்மை நோய்க்கும் , சளி, இருமலுக்கும் சாதாரணமாக இருந்தாலே அதுவாகவே சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.

எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா…? அப்படியென்றால் மஞ்சள் காமாலை,அம்மை,சளி இருமல் எல்லாம் தானாகவே சரியாகிவிடுமா…?

பின் எதற்கு மருந்துமனைகளும் மருந்துகளும் இந்தக் கேள்வியை அவர்களிடம் யாரும் கேட்கவில்லை.அப்படியெனில் ஏன் மஞ்சள் காமாலையால் உயிரிழப்பு நேரிடுகிறது என்ற கேள்விக்கும் அங்கு விடையில்லை.

வைரஸ்ப் பற்றிய அறிவு இன்று பெரும்பான்மையானவர்களுக்கு வந்திருக்கிறது. இருப்பினும் அது தானாகவே சரியாகிவிடும் என்று ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்தின் முன் சொல்வது எந்த வகையில் சரியாகும்.அப்படியெனில் ஹெபிடைட்ஸ் பி, எய்ட்ஸ் போன்ற நோய்களும் வைரஸ்களால் தான் வருகிறது. அது தானாகவே சரியாகிவிடுமா..? பின் எதற்கு அதற்கான மருந்து கண்டுப்பிடிக்க இன்றும் ஆராய்ச்சி நடந்துக் கொண்டிருக்கிறது.

மேல் நாட்டு ஆராய்ச்சி சொல்கிறதென்று தாங்கள் படித்த அறிந்தவற்றை மட்டுமே சொல்கின்றார்களே ஒழிய, அனுபவித்தவைகள் என்று அவர்களிடம் ஒன்றுமே இல்லை. ஏனெனில் இந்த நோய்க்கு இன்ன மருந்து என்று எழுதி வைத்ததை மட்டும் படிப்பதனால் எந்த உபயோகமும் இல்லை. மருந்தைப் பற்றிய ஆழமான அறிவு தேவைப்படுகிறது. அது நம் பாரம்பரிய மருத்துவத்தில் இருந்தது.

அவர்களிடம் எந்த கேள்வியை வைத்தாலும் ஆராய்ச்சி சொல்கிறது. நாங்கள் அப்படித் தான் படித்தோம். இதைத் தவிர அவர்களிடம் ஒன்றுமே இல்லை. நம் தமிழகத்தின் கலாச்சாரம் வாழ்க்கை முறைப் பற்றிய அறிவில்லாமல், நிச்சயம் நம் சமுதாயத்தை ஆரோக்கியமான சமுதாயமாக மாற்ற இயலாது.

தமிழகத்தின் அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிப்பது இஞ்சி,சுக்கு,மிளகு,சீரகம்,வசம்பு,ஓமம் இதை சிறிது சிறிதாகத் தான் குழ்ந்தைக்குப் பயன்படுத்துகிறார்கள். அளவு மாறும் பொழுது குழந்தைக்கு பிரச்சினை வருகிறது. அதேப் போல் தான் எண்ணெய் குளியலும், மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். ஆனால் எண்ணெய் குளியலையே தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் சில அலோபதி டாக்டர்களின் முட்டாள்த்தனத்தை நினைக்கையில் நம் சமூகத்தைப் பற்றிய கவலை தான் மேலோங்குகிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும் பொழுது குழந்தை எண்ணெய்யை விழுங்கி விட்டால் நிமோனியா காய்ச்சல் வரும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள். ஆம் உண்மைதான் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் குழந்தை காலம் முழுதும் இயற்கைக்கு அடி பணிகிறது. காலம் முழதும் குளிக்காவிட்டால் அலோபதியின் மருந்துக்கு தான் அடிப் பணிகிறது.

குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் பழகாவிட்டால் இறுதி வரை குழந்தைக்கு எண்ணெய் தேய்த்தே குளிப்பாட்ட முடியாது. அது மட்டுமின்றி எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதில் நிகழும் சிறு தவறினால் எண்ணெய்த் தேய்பதையே வேண்டாமென்று மறுப்பது முட்டாள்த் தனம். என்று ஒரு தாய் மார் சொல்லும் பொழுது டாக்டர்களின் மேல் மக்களுக்கு உள்ள அதிருப்தி வெளிப்படுகிறது.

இன்று ஒரு நோய்க்கு மருந்தில்லை என்றால் அது நாளைக் கண்டுபிடிக்கப்படலாம். அது வரை ஏதெனும் சாக்குச் சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தில் நோயாளியைப் பயமுறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் நம் நாட்டில் பின்பற்றி வரும் மருத்துவ முறைகளெல்லாம் முட்டாள்த் தனங்கள் .இது தான் இப்பொழுது அலோபதியைப் பற்றிய பெரும்பான்மையானோரின் கருத்தாக இருக்கிறது.

இதற்குக் காரணம் அவர்கள் ஆராய்ச்சியாளராக இல்லாததே… ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தங்களின் மருத்துவ அறிவை மேம்படுத்திக் கொள்ள அவர்கள் முயலுவதில்லை.பணம் மட்டுமே அவர்களின் கண்களுக்குத் தெரிகிறது.

ஒரு டாக்டர் சொல்கிறார் குழந்தை மலம் கழிக்கவில்லையென்றால் 5 நாள் வரைப் பொறுத்திருக்கலாம். நன்றாக யோசித்துப் பாருங்கள் 5 நாள் வரை காத்திருந்து பிறகு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று ஆயிர ஆயிரமாக செலவழிப்பதற்கு பாட்டி வைத்தியமான வசம்பை தாய்மார்கள் முன் வைக்கிறார்கள். அவர்களின் கருத்துப்படி வசம்பு விஷம். மேல் நாட்டு ஆராய்ச்சி சொல்கிறது. அம்மை நோய்க்கு வேப்பை இலையும், மஞ்சளும் ஒன்றுமே செய்வது இல்லை. இப்படி வெளி நாட்டவர்களின் பிரதிநிதியாக அடுக்கிக் கொண்டேப் போகிறார்கள்.

இதற்கெல்லாம் சிறப்பு விருந்தினராக வந்திருந்த சித்த வைத்தியர் மைக்கேல் ஜெய்ராஜ் விளக்கமளித்தார். வசம்பை அப்படியே யாரும் பயன்படுத்துவதில்லை. அதை சுட்டுத் தான் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்புகள் சொல்கிறது. மேல் நாட்டில் இதைப் பற்றி அறியாமல் வசம்பை சுடாமல் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு முடிவு சொல்கிறார்கள். இது எந்த வகையிலும் சரியான முடிவில்லை. இப்படித் தான் நம் பாரம்பரிய மருத்துவங்கள் மறுக்கப்படுகிறது. என்றார். இந்த ஆராய்ச்சிகளெல்லாம் எவ்வளவு முட்டாள்த் தனங்கள் என்று அவர் சொல்கையில் தான் நமக்குத் தோன்றுகிறது.

மேலும் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ராஜ்குமார் பேசுகையில் சித்தர்களைப் பற்றிய செய்தியையும், திருமூலரின் திருமந்திரத்தை சுடுகாட்டில் அமர்ந்துப் படித்ததாகவும் கூறினார். இதற்கு முன்னும் நீயா நானாவில் அவர் பேசியிருக்கிறார். அப்பொழுது பேசியதற்கு இந்த முறை பேசியதற்கும் நிறைய மாற்றங்கள். நம் பாரம்பரிய மருத்துவத்தில் விஷயமிருக்கிறது என்று அவருக்குத் தெரிந்ததனால் தான் திருமந்திரத்தைப் புரட்டியிருக்கிறார்.

அடுத்த சிறப்பு விருந்தினர், அக்கு பஞ்சர் டாக்டர் உமர் ஃபரூக். இவருடைய பேச்சு மிக தெளிவான பேச்சு. அலோபதி கொடுப்பது மருந்து கம்பெனிகள் தயாரிக்கும் ரசாயனப் பொருள். தாய்மார்கள் சொல்வது அவர்கள் அன்றாடம் உபயோகிக்கும் இயற்கையான பொருட்கள். ரசாயனப் பொருட்கள் தீங்கில்லை, இயற்கையானப் பொருட்கள் தான் தீங்கு என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஏனெனில் உங்களிடம் allopathy (proof – laboratory proof – applicable proof ) இருக்கிறது. ஆனால் அது நம் பாரம்பரிய மருத்துவத்தில் யாரும் குறிப்பாக அதை எழுதி வைக்கவில்லை.

Death by medicine

By Gary Null, PhD; Carolyn Dean MD, ND; Martin Feldman, MD; Debora Rasio, MD; and Dorothy Smith, PhD

http://www.webdc.com/pdfs/deathbymedicine.pdf

என்றப் புத்தகத்தில் மால் நுட்ரிஷன் பற்றிய ஆபத்துகளும்,நவீன மருந்துகளின் ஆபத்தையும் விளக்குகிறது. என்றார்.

இறுதியாக சிறப்பு விருந்தினராக வந்திருந்த எழுத்தாளர் இளங்கோ கல்லானை சொல்கையில் இவர்கள் சொல்வது போல் வேப்பிலையிலும் , மஞ்சளிலும் ஒன்றுமில்லை என்றால். ஏன் அதற்கு பேடண்ட் ரைட் வாங்கினார்கள் . பின் ஏன் நம் மருத்துவத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். குறிப்பாக அலோபதி மருத்துவர்கள் சில பேருக்கே நம் பாரம்பரிய மருத்துவம் பற்றிய குறிப்புகள் தெரிந்திருந்தாலும் அதை அவர்கள் அறிவுறுத்துவது இல்லை. கேட்டால் அதை நாங்கள் சொல்லக் கூடது என்கிறார்கள்.

அப்படியெனில் அவர்களிடம் நேர்மையும் வெளிப்படையானப் போக்கும் இல்லை. சித்த வைத்தியத்தையும்,ஆயுர்வேதத்தையும் பற்றிக் கூற என்றுமே அலோபதிக்கு தகுதியில்லை என்றும் சொன்னார்.

இருப்பினும் இதையும் தாண்டி சில டாக்டர்கள் எதிரே அமர்ந்து தாய்மார்களின் பக்கம் அமர்ந்துப் பேசியவர் போலும் இருக்கிறார்கள். அதற்காக சித்த வைத்திய, ஆயுர் வேத மருத்துவர்களும் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் என்றும் நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

ஏனெனில் அலோபதி போலவே அதிலும் 5 வருட படிப்பு தான். அந்தப் படிப்பை முடித்ததும் அவர்களும் தங்களின் மருத்துவம் பற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்கிறார்களா… என்ற உததரவாதமில்லை.

இது மருத்துவத்தில் நிகழும் தவறில்லை. நம் சமூகத்தின் கல்வி முறையில் நிகழும் தவறு.இன்றையகல்வி பணம் பண்ணும் தொழிலாக மாறி விட்டதால், அதைக் கொண்டு செய்யும் எந்த தொழிலும் பணத்தையே முன்னிலைப் படுத்துகிறது.இது அலோபதிக்கு மட்டுமின்றி சித்த,ஆயுர் வேதம் மற்றும் அனைத்து மருத்துவங்களுக்கும் மருத்துவர்களுக்கும் பொருந்தும். என்ன இதில் லட்சமென்றால் மற்றதில் ஆயிரத்தில் கணக்கு இருக்கும். நம் அரசாங்கம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தையும்,விஞ்ஞானக் கண்டுப்பிடிப்புகளையும் இணைக்கும் வகையில் (integrated) கல்வி முறை அமைந்தால் மருத்துவம் அடுத்தக் கட்டத்திற்கான உயர்வை எட்டும். அதை விடுத்து அலோபதி, சித்த, ஆயுர்வேதம் என்ற பிரிவினைகளால் எந்தப் பலனும் இல்லை. பலன் ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு மட்டும் தான்.

நம்முடைய வாழ்க்கை முறை இன்று நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கிறது.எனவே இதை மனதில் வைத்து மருத்துவம் செய்யும் எந்த மருத்துவ முறையுமே வரவேற்கக் கூடியது தான்.

942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது


அற்றது போற்றி உணின்


After digestion one who feeds 942


His body no medicine needs.

இதில் வரும் முறைகளை கடைப்பிடித்தாலே ஆரோக்யமான சமுதாயம் உருவாகும்.
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

தமிழ்த்தொட்டில் சமீபத்திய இடுகைகள்

Powered by Blogger.

என்னைப் பற்றி

நான் பின்தொடருபவை...

About

நீங்களும் இணையலாம்

என் கவிதைகள் பக்கம்

Search This Blog

வருகை தந்து பக்கங்களை பார்த்தவர்கள்

Featured Posts Coolbthemes

Blogroll