உலக தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பில்
பதிவர் சந்திப்பு 26-08-2012 அன்று சென்னையில் வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது.
அந்த சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் தென்றலின் கனவு என்ற கவிதைப் புத்தக
வெளியீடு நடந்ததை தமிழ்ப்பதிவ நண்பர்கள் அனைவரும் அறிவர். அந்த விழாவில் கலந்துக்
கொண்ட அனைவர்க்கும் தென்றலின் கனவு புத்தகம் வழங்கப்பட்டது. உடனே அந்தப்
புத்தகத்தில் உள்ள கவிதைகளைப் படிக்க முடியவில்லையென்றாலும்,தொடர்ந்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படித்தேன். ஒரு
குறிப்பிட்ட பக்கத்திற்கு மேல் என்னால் தென்றலின் கனவை கீழே வைக்க முடியவில்லை.
அந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
ஆரம்பமே
நம்மை தன் வரிகளில் ஈர்க்கிறார். (கண்ணால் கவிபேசி) என்ற தலைப்பில் அமைந்த
கவிதையில்
இமையில்
மை வைத்து
உனை
இம்சிக்கும் எண்ணமில்லை
என்று தன் வார்த்தைகளை நம் மூன் வீசுகிறார்.
அடுத்து
பக்கங்களைத் திருப்பினேன். தென்றலின் கனவில் தென்றலில்லை என்று சொல்கிறார்.
அதிர்ச்சியாய் அந்த கவிதையை வாசிக்கத் தான். நீயென்ன பிறை நிலவோ வில்
இக்கரையில்
தென்றலில்லை
அக்கரையில்
புயல் மழையோ”
என்பதான வரிகள் என்னை மிகவும் ஈர்த்தது. கவிதை மொத்தமும் எழுதலாம். ஆனால் ஒரு
பதிவு போதாது. எனவே நான் மிகவும் ரசித்த வரிகளை மட்டுமே இங்கே பதிகிறேன்.
அடுத்துகவிதை
நகர வாழ்க்கையின் கோரத்தைச் சொல்வதாக அமைகிறது. உரையாடல் போல் இருவருக்குமிடையே
அமைவதாய் இந்த கவிதை படைக்கப்பட்டிருக்கிறது. சொர்க்க பூமி
பட்டணத்தில் பொருளெல்லாம்
பெருசு தான் இருக்கும் புள்ள்
மனுசங்க மனசேனோ
கடுகளவும் இல்லையாம் புள்ள..!
சொர்க்க பூமி இங்கிருக்கு
சோகப்பட்டினந்தான்
வேணாம் புள்ள....
ஆம் பட்டனத்தில்
வாழ்பவர்களும் இன்று சொர்க்கபூமி என்று சொல்வது கிராமத்தைத் தான். இதை உணர்ந்து
எழுதியுள்ளார்கள். இருப்பினும் சகோதரி அவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவெனில்
நானும் பட்டணம் தான் ஆனால் மனசு கடுகளவு இல்லை.
எனக்குத்
தெரிந்து கவிதை எழுதும் எல்லோருக்கும் இளகிய மனம் இயல்பாய் வந்துவிடும் போல...
சகோதரியின் வேரின் வலிகள் அதை அழகாக பதிவு செய்கிறது.
வாயில் காவலரா நாங்கள்
வாடி நிற்கும் எங்களை
கண்டால் வேரோடு
பிடுங்கி எறியும் மனிதன்
என்று தன் ஆதங்கத்தை கவிதையில் பதிவு
செய்கிறார். தொடர்கையில் வித்தியாசமான ஒரு கவிதை. கொள்கை மாற வேண்டும் , என்ற தலைப்பில் எழுதியிருந்த விதம். நான் இது வரை எங்கும்
படித்து உணராத ஒரு உணர்வை தந்தது.
பூங்காற்றும் சுகமாய் இல்லை
புன்னைகையில் சுரத்தில்லை.
அருமையான
வரிகள்.
காதலின் வலியை சுருக்கென ஒரு கவிதை எனக்கு சொன்னது காதலின் பார்வையில்
கூத்து மேடைதனிலே நானும் காதல் பார்த்திருக்கேன்
இதென்ன உசுர குத்திக் கொலைக்கும்
வலியா இல்ல காதலும் இருக்குது
இந்த காதலும் இருக்குது. உண்மையில் படிக்கையில் நம் மனதும் வலிக்கும் அந்த
இடத்தில்...
என்ன சொல்வது அடுத்து ஒரு தென்றல்
பற்றிய வரிகள் நிலவும் நீயும் இயற்கையின்
நியதியை கொஞ்சம் மாற்றிப் பார்க்க நினைத்திருப்பது அருமையான புனைவு.
காற்றிலும் என்ன மாயம்
உன்னிடத்தில் தென்றலாகவும்
எனைத் தீண்டுகையில்
புயலாகவும் மாறுகிறதே
உண்மையில் காதலிப்பவர்களின் அகத்தைப் படம் பிடித்துக்
காட்டுவதாக இது அமைந்திருந்தது.
என்னை மிகவும் வலிக்க
செய்த வரிகளை எப்படி சொல்லாமல் விடுவது. நினைவுகளோடு
நீ ஓடி ஒளிந்த
மவுன யுத்தத்தில்
உதிரம் சிந்தாமலே
சமாதியாகின்றன என் நினைவுகள்.
மனம் லேசான வலிகளுடனே அடுத்த கவிதைக்கு நகர்ந்தது.
பொதுவாகவே
சகோதரியின் கவிதையில் காதல் மட்டுமின்றி சமூகத்தின் மீதுள்ள அக்கறையும் இழையோடுவதை
படிப்பவர்கள் உணரலாம். அதைத் தாண்டி இயற்கையின் ஆழ்ந்த கவனிப்பும், எல்லா உயிரினங்களின் மேலும் எழும்
அன்பின் துடிப்பையும் உண்ர முடிகிறது.
வாழவிடுவோம் பறவைகளை என்ற தலைப்பில் அமைந்த
கவிதையில் அதை நீங்கள் காணலாம்
குருவியாய் நான் பிறக்க வேண்டும்
ஆசை துளிர் என்னில் விட்டதுவும்
எப்பொழுதாவது இந்த ஆசை எல்லோருக்கும் வரும்
என்று நினைக்கிறேன். நான் அனுபவித்திருக்கிறேன். என் வீட்டில் குருவி கூடுக்
கட்டியப் பொழுது... இதில் தன்னுடைய நகைச்சுவையையும் புகுத்தியது அருமை
அறுபது நாள் என் வீட்டில்
மின்விசிறி சுழலவில்லை
இந்த அனுபவம் எத்தனைப் பேருக்கு நிகழ்ந்ததோ
தெரியவில்லை. சில நேரங்களில் பட்டாம் பூச்சிகாக அணைக்கப்படும் மின்விசிறியில்
ஒட்டிக் கொண்டிருக்கும் நமக்கான அன்பு.
இங்கே நான் கலங்கியது
உண்மை. இப்படி ஒரு அரை நாள் விடுப்பு சகோதரி எனக்கும் சேர்த்துத் தான்
கேட்டிருக்கிறார் என்று, ஆம் அம்மாவிடம் கேட்பதாக அமைந்த இந்த கவிதை அம்மாவை
மண்ணுலகில் பிரிந்த அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் சமர்ப்பணம்
ஒரு அரை நாள் விடுப்பில் வா
உன் மடியில் தலை சாய்க்க வேண்டும்
இதைத்
தாண்டிப் போகையில் எனக்கு சிறிது நேரமாகியது. பிறகு விருந்தோம்பலில் கவிதாயினி
மகிழ்வித்தார். அழகான கற்பனை. மழையை மையாக அமைத்து எழுதிய கவிதை விருந்தோம்பல்
எந்த விருந்தினருக்காக
என் வீட்டு வாழை மரத்தில்
இலை கழுவிக் கொண்டிருக்கிறது
மழை....
மழையில் நனையும் ஒரு தருணத்தில் எழுதினார்கள் போல்
இருக்கிறது. படிக்கையில் நம்மால் அந்த ஈரத்தை உணர முடிகிறது.
பட்டுக்கோட்டை
பிரபாகரன் அவர்கள் விழா மேடையில் ஒரு கவிதையை உதாரணம் சொன்னார். அதையும்
படித்தேன். விழாவிற்கு வந்த நண்பர்கள் கேட்டிருப்பீர்கள். வராத நண்பர்களுக்காக எழுதுகிறேன்.
கோபம் வரத்தான் செய்கிறது
குடுமிப் பிடித்து
மண்ணில் உருண்டு புரண்டு
சண்டையிடும்
மழலைகளை காணும் பொழுதெல்லாம்...
கோபம் வரத்தான் செய்கிறது
என்னிடம் சண்டையே
போட்டிராத அக்காவின் மேல்
இந்த அனுபவம் நிச்சயம்
எனக்கில்லை.அக்கா மட்டுமின்றி தம்பி தங்கைகளுடனும் எனக்கு இந்த விஷயத்தில் கோபமே
வந்ததில்லை.
இங்கு 63
ஆம் பக்கத்தில் வந்த கவிதை மீண்டும் என்னை தொடர்ந்தது 84 ஆம் பக்கத்திலும் காதல்
வந்த பிறகு நான் அதை அங்கே கவனிக்கவில்லை எனறதனால் என்னைத் தொடர்ந்திருக்கிறது.
கோலமிட சென்று
உன் பெயர் எழுதி வைக்கிறேன்
என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டு
என்னுள் வந்த மாற்றம்
உன்னுள்ளும் நிகழ்கிறதா ...?
என்று ஒரு கேள்வியுடனே நிறுத்தியது. காதலர்கள்
இன்றும் கண்டுபிடிக்கமுடியாத விடையை மீண்டும் கேள்வியாய் பதிவு செய்திருக்கிறார்.
வீட்டில்
தினமும் காலையில் எழும் பொழுது குடும்பப் பெண்களின் மனநிலை எப்படி இருக்குமென்பதை
அப்படியே பதிவு செய்கிறது
எந்திரத்தனமான உலகில்
எழுந்திருக்கும் போதே
இட்லிக்கு தொட்டு கொள்ள
என்ன செய்வது
என்று ஆரம்பித்து பெண்களின் மொத்த அன்றாட
வலிகளையும் பதிவு செய்கிறார். கொஞ்சம் ஆணாக இருப்பதில் வெட்கம் தலைக்காட்டுகிறது
அந்நொடி. இருப்பினும் இன்று இந்த நிலையை பெண்களுடன் ஆண்களும் பகிர்ந்துக் கொள்வதை
நிறைய குடும்பங்களில் நான் பார்த்திருக்கிறேன். இது சமூகம் முழுதும் பரவினால்
நன்று.
எத்தனைத் தான் அவரின் கவிதைகளில்
பல கருத்துக்கள் உள்ளடங்கி காணப் பட்டாலும் என் வயதின் குறையோ இல்லை காதலுக்கே
உரிய ஈர்ப்போ.... அவரின் காதல் கவிதைகள் என்னை மிகவும் ஈர்த்தது.
அதில் சில
சிரித்துக் கொண்டே இருப்பேன்
நீ வடிக்கப் போகும்
சிற்பம் நான்
எத்தனை முறை
செதுக்கினாலும்
சிரித்துக் கொண்டே இருப்பேன்.
விரட்டிவிட்டு சில வரிகள்
உறக்கத்தை வெளியே விரட்டிவிட்டு
இமை கதவுகளை
இழுத்து சாத்திக் கொண்டேன்
லீலை சில வரிகள்
உன் அம்மாவிற்கு
மறுபெயர் யசோதையா...?
ஆ... என்ன
ஒரு கற்பனை. காதலன் செய்யும் குறும்பை மாயக்கண்ணனுககு ஒப்பிடும் பாணியின் அழகை எப்படிச்
சொல்வது. இதைப் பற்றிச் சொல்ல ஒரு பதிவு போதாது.
இறுதியாக
இந்த கவிதைப் பயணத்தை முடித்துக் கொள்ளும் தருவாயில் நானெங்கு பயணம் போவது
என்ற கவிதையில் காதலின் பிரிவைப் பற்றி மிக அழகாக சொல்லியுள்ளார்கள்
உன் முகம் கண்ட பிறகு
நான் எங்கே பயணம் போவது
நிச்சயம் ஒரு பெண்ணாய் என்னை உணர வைத்த கவிதை. இந்த
கவிதையுடன் நான்
எனது வாசிப்பில் தென்றலில் கனவுப் பயணத்தை முடித்துக் கொள்கிறேன். இன்னும் நிறைய கவிதைகளை
விட்டு விட்டேன். காரணம் அதை நீங்களே படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்
இந்தப்
புத்தகம் நீண்ட நாளைக்குப் பிறகு என் வாசிப்பிறகு மனநிறைவை தந்தது. கவிதைப் புத்தகம்
வாசித்து நீண்ட நாட்கள் ஆகிறது என்ற குறையை தீர்த்தது தென்றலின் கனவு.
விழாவிற்கு
வந்தவர்கள் கையில் உள்ள ” “தென்றலின் கனவு “ படித்துப் பார்க்கவும். வராதவர்கள இங்கே தென்றல் சென்று
புத்தகம் பற்றிய தகவலைப் பெறவும்
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
நல்லா தென்றலில் குளிர் காய்ந்து இருக்கிறீர்கள்..அருமை..
ReplyDeleteகுளிர் மட்டுமில்லை. அனல் தகிக்கும் வீச்சும் எழுத்தில் உண்ர முடிந்தது
Deleteமிக ஆழ்ந்து படித்து
ReplyDeleteமிக மிக அருமையாக விமர்சனம்
செய்துள்ளமைக்கு வாழ்த்துக்கள்
நான் மேலோட்டமாக மேய நினைத்தாலும், தென்றலின் கனவு அதன் பால் என்னை ஆழ்ந்து படிக்க வைத்துவிட்டது ஐயா. நேர்த்தியான எழுத்து.
Deletetha.ma 2
ReplyDeleteஉங்கள் வாசிப்பின் வெளிப்பாட்டில் தென்றலின் தேகம் சிலிர்க்கும் ..........நானும் சுவாசித்த வரிகள் தான் நீங்கள் வெளிபடுதியதர்க்கு தோழியின் சார்பாக நானும் நன்றிகள் சொல்கிறேன்
ReplyDeleteஇதில் ஏன் பிரித்துப் பேசுகிறீர்கள். சுரேகா அவர்கள் சொல்லியது போல் “ நாம் கூடிக் கரையும் காகங்கள் அல்ல, நாம் கூடி மழைப் பொழியும் மேகங்கள் ”
Deleteமகிழ்ந்தேன் உங்கள் புரிதலில் நன்றி என்ற ஒற்றை சொல்லில் அடைத்து அனுப்பிட முடியாத மகிழ்ச்சி
Deleteஒற்றை சொல்லில் அடைத்து அனுப்பிட முடியாத மகிழ்ச்சி
Deleteஅருமையான சொல்லாடல்.
விரிவாய் எழுதிருக்கீங்க. நானும் புக் வச்சிருக்கேன். படிக்கணும்
ReplyDeleteசீக்கிரம் படியுங்கள். இது நிறைய தமிழ் உள்ளஙகளை சென்றடைய வேண்டும்.
Deleteஎவ்வளவு ஆழ்ந்து படித்துள்ளீர்கள்...
ReplyDeleteசிறப்பிற்கு சிறப்பு சேர்த்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி நண்பரே... இருப்பினும் நான் எதிர்ப்பார்க்கும் பின்னூட்டம். எனக்கு அதில் இந்த வரிகள் பிடித்தது என்று ஒரு பின்னூட்டம் வராதா என்று எதிர்ப்பார்க்கிறேன்
Deleteஅழகாக ஆழமான உணர்ந்து ரசிச்சு ... படிச்சிருக்கிறீங்க..
ReplyDeleteபடிக்க மட்டுமில்லை சுவாசிக்கவும் செய்தேன்.
Deleteஅருமையான விமர்சனம் நண்பரே... நன் எழுதும் முன் நீங்கள் முந்திக் கொண்டீர்கள் ஆனால் அழகாக சுவாசித்து உளீர்கள்...உங்கள் நட்பில் அறுபதாய் இணைந்து கொண்டேன்... நன்றி நண்பா
ReplyDeleteநீங்களும் எழுதுங்கள். அறுபதாய் இணைந்த நண்பரை வரவேற்கிறேன்.
Deleteதமிழ் தொட்டிலில் தங்களின் அழகு தமிழால் தென்றலை இதமாக தாலாட்டி பாராட்டி எனக்கு புகழ் எனும் ஆழ்ந்த சந்தோசமான நித்திரையை தந்தவரே...விழித்து எழுத்து நானும் பார்த்தேன் பதினோரு நாள் கழித்து...
ReplyDeleteதங்களின் உயர் கருத்துக்களை கண்டு வியந்தே போனேன் நானும் மற்றவர்களை போல...
எப்படி இப்படியும் ஒரு பொறுமையான கருத்துக்களை பிரித்து கூறமுடியும் என்று....அப்படியொரு விளக்கத்தை வரிக்கு வரி கொடுத்து இருக்கிறீர்கள்... அதற்கு நான் உங்களுக்கு என் தலை சாய்ந்த பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்... உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி பாராட்டு தெரிவித்த உங்களின் நல்ல உள்ளத்திற்கு மீண்டும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்...
சகோதரி நான் எதையும் செய்யவில்லை. உங்களின் தென்றலின் கனவு தான் என்னை எழுதத் தூண்டியது.இது எனக்கும் மகிழ்ச்சியே... உங்களிடமிருந்து இதற்கு பின்னூட்டம் கிடைத்தது. தொடருங்கள் உங்களின் கவிதைப் பயணத்தை...
Deleteஇனிமையான விளக்கவுரை விமர்சனம் என்று சொல்ல மனமில்லை நண்பரே ...
ReplyDeleteஅற்புதமாய் சுவை பட விளக்கிய உங்களுக்கு என் நன்றிகள் ..
உண்மை தான் நண்பரே இது விமர்சனம் இல்லை. ஒரு சின்ன வாசிப்பின் துளிகள்
Deleteஅருமையான விமர்சனக்கோவை
ReplyDelete