9.28.2007

எண்ணிலா ஆசைகள்

காற்றில்வந்து காதில்
வீழ்ந்த முதல்சொல்லைப் பல்
முளைக்கும் சொல்லஆசைப்பட்டு
எண்ணிலா எண்ணம் வளர்த்தேன்
அந்த எண்ணத்தில் தான்
அம்மா! என்றுரைத்தேன்
பக்கத்தில் இருப்பவர்களை எல்லாம்
நண்பனாக்கி தூக்கத்திலும்
துள்ளி குதித்தேன்
துவண்டு விழுந்தாலும்
தூக்கிவிடும் அன்பை ரசித்தேன்………………
புத்தகத்தைப் பார்த்தத்ப் பொழுது
பல பக்கம் ரசித்தேன்………….
அந்த பக்கத்தில் பார்த்த
புது படத்தை ரசித்தேன்………
அழுது கொண்டு பள்ளிச்செல்லும்
நேரம் சனி ஞாயிற்ைறரசித்தேன்………………

இன்று சிரித்துக்கொண்டே வரவேற்று
பள்ளி நாட்களுக்கு துடித்தேன்
விண்மீன்களை எல்லாம் கைக்குள்
அடக்க வேண்டுமென
கல்லூரிக்குள்காலடி வைக்கும்
பொழுது நினைத்தேன்
காலடி பதிக்கும் முன்னரே
காதலின்அடியை அறிய ஆசைப்பட்டேன்
காதலியை காதலிக்க ஆசை
அவளும் நம்மை மட்டுமே காதலிக்க ஆசை
கல்லூரித்தேர்வே காதலுக்கென்று ஆசை
தேர்வில் காதல் அலீகளின் வெற்றியைப்பார்த்ததும்
காதலை விட்டு ஓட ஆசை
அன்பை விட்டு அழகுக்கு ஆசை
அழகும் அழிந்துவிடுமோ!
என்றெண்ணி புகழுக்கு ஆசை
புகழுக்காக தொடர்ந்த் படிப்பை
தொய்வில்லாமல் முடித்துவிட ஆசை
பார்வையில் பணம் பார்க்க ஆசை
பார்த்த பின்னும் விலக்க முடியாத ஆசை
காமத்திற்கு ஆசை – அதனோடு
கவுரவ த்திற்கு ஆசை
திருமணத்தோடு திருதிவிட்ட ஆசைகளை
எல்லாம்திருப்பிக் கொடுக்க ஆசை
நம் போல் ஒரு பிள்ளை
நமக்குப் பிறக்க ஆசை
நமக்காக துடிக்கும் ஓர்
உள்ளத்தை நண்பனாக்க ஆசை
நகம் நனைக்கும் வயதில்
நட்பை உதைத்த தோசம்
நரை வந்த பின்னும்
நண்பனைத் தேடும்ஒரு நேசம்
நேசத்தோடு பிள்ளைகளுடனே வசிக்க ஆசை
நிறைவேறாவிட்டால் தீரா நித்திரையில்
வீழ்ந்து விட ஆசை.........................

பிறக்க ஆசை

தாய் மடியில் அனுபவித்த முதல்
வலியைஅனுபவிக்க ஆசை
அந்த நினைவற்ற வலிகளுடனே
இருந்திருக்கக்கூடாதாஎன்றாசை
என் மேனி சிந்திய
முதல் ரத்தத்தைபார்க்காசை — அதுவே

நான் சிந்திய கடைசி ரத்தமாகி
இருக்கக்கூடாதா என்றாசை
பள்ளி சென்ற முதல் நாளை
எப்படியாவது வாங்க ஆசை
பக்குவப்படாமல் பள்ளிக்
குள்ளேயே இருந்துவிட ஆசை
பழகும் பொழுது
நல்ல நட்பிற்குஆசை
அந்த நட்பினிலும்
சிறந்த மனிதரைகாண ஆசை
பிரிந்திடினும் எனை
மறவா நண்பனுக்கு ஆசை
அந்த நண்பனிடமும்
எனக்குரிய உரிமைக்கு ஆசை
மறந்திடினும் ஒரு முறையாவது
காதலிக்க ஆசை
அந்த காதலிலும் எனக்குரியவளிடம்
ஊடலுக்குஆசை
ஒரு முறையாவது எனக்குரியவளை
தொட்டு விடஆசை
அந்தத் தொடு உணர்வும்
திருமணத்திற்கு பின்னிருக்கஆசை
பத்து மாதம் எனக்குரியவளின்

பாரம் சுமக்க ஆசை
ஈன்று எடுக்கும் பொழுது என்னவளுடன்
வலி தாங்க ஆசை
என்னால் தோன்றிய உயிரை
உன்னதமாக்க ஆசை
அந்த முயற்சியிலும் என்னவள்
உணர்வு கலக்க ஆசை
இருக்கும் வரைக்கும்
இன்பத்திற்கே ஆசை
இறக்கும் பொழுதும்
துன்பம்வராமலிருக்க ஆசை
கல்லறை யிலும் உறக்கமில்லா ஆசை
அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
ஆசையில்லா ஜென்மமாகப் பிறக்க ஆசை…………………………
……….