Popular Posts

துளித் துளியாய் மரணப் பிறப்பு

12.31.2011 · 5 comments


துளித் துளியாய் மரணப் பிறப்புத்
தரும் காதலே தயவு செய்து
என்னிடம் இப்பொழுது வராதே

இது போதும்!

12.30.2011 · 5 comments


 முதன்முதலாய் நீ என் வீட்டிற்கு
வருகிறாய் என்றதும் — என்
வீட்டிற்குள் தான்
எத்தனை மாற்றங்கள்–உன்னால்
நிகழ்ந்தது தெரியுமா?

எனக்கு உலகமாகவே தெரிகிறாள்

12.15.2011 · 2 comments


 
அது ஒரு காதல் தருணம்
மனம் எங்கிருக்கிறது என
என் உயிரின் ஒவ்வொரு துளியும்
ஆராய்ந்துக் கொண்டிருக்க

மீண்டும் நாளைத் தொடரும்

12.10.2011 · 0 comments


பார்த்துக் கொண்டே  இருக்க
நான் என்ன தொலைக்காட்சியா?
என் பார்வையை மாற்ற வேண்டும்
என்ற எண்ணத்தில் கேட்டாய் நீ
ஆமாமென்றென்…!

திரைவிமர்சனம்: போராளி இன்னும் கொஞ்சம் போராடியிருக்கலாம்

12.08.2011 · 2 comments

 

     இரத்த உறவுகள் எல்லாம் வெறும் பேச்சு தான். நட்பு ஒன்று மட்டும் தான் வாழ்க்கைக்கு என்றும் துணை நிற்கும் என்பதை இரத்தம் கலந்த திரைக்கதையோடு சொல்லும் படம் போராளி.

இதமான இந்த பற்றுதலை...

12.07.2011 · 0 comments

 
உண்மையில்
காதலைத் தவிர வேறெது
தரும் மனதிற்குள்
இதமான  இந்த பற்றுதலை...

இதைத் தான் உலகம் காதல் என்கிறதா…?

12.06.2011 · 8 comments


 
உன்னுடனான என் நிகழ்வுகளை
மட்டும் மனதின் ஓர்
மூளையில் சேகரிக்க நினைக்கிறேன்
முடியவில்லை

எப்படி மறைப்பது பெண்ணே!

12.05.2011 · 6 commentsஎழுதிக் கொண்டிருக்கும் காகிதத்தில்
எங்கிருந்தோ வந்து 
விழும் மழையின் 
ஒற்றைத் துளி நீர் சிந்தி
எழுத்துக்கள் கரைவதுப் போல...

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (3)

12.04.2011 · 2 comments


 
வாள் வீச்சை சந்திக்கும் இந்த
கண்கள் உன் விழி வீச்சை
சந்திக்கும் துணிவை
பெறுகையில் தான்
எனக்கான வீரத்தை கற்றேனடி...

எனக்கான தேடல்

12.02.2011 · 9 comments


வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்ளும் வயதில்
நான் இருப்பதாக பலர் சொல்கிறார்கள்
இந்த வயது வரை வாழ்க்கையென்றால் 
என்னவென்றே  தெரியவில்லை,
இதில் துணை வேறு அவசியமா?
இந்த நொடி வரை என் வாழ்க்கை துணையின்றி
நன்றாகத் தான் போய்க் 
கொண்டிருக்கிறது.

திரைவிமர்சனம் : மயக்கமென்ன ரசிக்கயென்ன...?

11.30.2011 · 5 comments

  
ஓட ஒட ஓட நேரம் போகலை
பாக்க பாக்க பாக்க படம் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆக மொத்தம் ஒண்ணும் விளங்கல

தெருவோரப் புகைப்படக் கலைஞன் தன் வாழ்க்கையினுள்ளே ஒரு பெண் வந்தவுடன் உலகம் போற்றும் ஒருப் புகைப்படக் கலைஞனாகிறான். இது தான் கதையின் கரு. 50 ஓவரில் 150 தான் இலக்கு. அதை அடிக்க என்னென்ன மொக்கைப் போட முடியுமோ அத்தனையும் போட்டு கடைசி பந்தில் சிக்சர் அடித்துவிட்டு பல்லைக் காட்டுகிறது படம்.

தமிழன் அடி வாங்குகிறானா, முதலில் யார் தமிழன் ?

11.28.2011 · 19 comments


     தமிழா எழுந்திரு...! தமிழன் அடி வாங்குகிறான்...! என்று நிறைய முழக்கங்களை நீங்கள் கடந்த சில வருடங்களாக தமிழகமெங்கும் பார்க்கலாம். அது என்ன எல்லா விளம்பரங்களும் தமிழன் அடி வாங்குகிறான், தமிழர்களே எவ்வளவு நாள் தான் ஏமாறுவீர்கள் என்று கோஷமிட்டபடியே இருக்கின்றன.
     முதலில் தமிழன் எங்கு இருக்கிறான். அதைச் சொல்லுங்கள். தமிழ் பேசினால் தமிழனா ? தமிழ் மண்ணில் வாழ்ந்தால் தமிழனா ? யார் தமிழன் ?

பெண்களே உங்கள் அகத்தில் அச்சம் தவிர்ப்பது எப்பொழுது?

11.25.2011 · 9 comments

 
 சமீபத்தில் இணையத்தில் ஒரு கட்டுரைப் படித்தேன். வெளியூரில் இருந்து சென்னையில் வந்து தங்கிப் படிக்கும் பெண்ணின் அவலக் கதை. சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கிப் படிக்கும் பெண். தனியார் விடுதியில் சேர்ந்த முதல் நாளே அவளுக்கு தேனீரில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து, அவளை மயக்கமடைய செய்திருக்கின்றனர்.

தமிழ் பாடல் என்ன கொடுமை ஐயா?(why this கொலை வெறி டீ )

· 5 comments

 
ஆங்கிலம் தெரியாதவன் தமிழைக் கொஞ்சம் பயன்படுத்தி பாடும் பாடலாகத் தெரிகிறது. உண்மையில் இதில் வரும் வார்த்தைகள் ரசிக்க வைக்கிறது. இருப்பினும் தனுஷ் இதற்கு முன் பாடி இன்று வெளியாகவுள்ள மயக்கமென்ன பட்த்தில் வரும் ” “ஓட ஒட இன்னும் தூரம் “ என்ற பாடலை ஒப்பிடுகையில் இது எனக்கு அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை.

உன் வார்த்தைகளும் என் மௌனங்களும்

11.23.2011 · 4 comments


எனது வெட்க்கத்தின் வேர்களில்
தண்ணீர் ஊற்றியவன் நீ
எனது இரவுகளின் ரகசியநொடிகளை
நீளச் செய்தவன் நீ
என் மனதின் ஒவ்வொரு அசைவும்
உன் நினைவெனும்  
மெல்லிய நூலிழையால்                                                                                                                         பிணைக்கப்பட்டிருக்கிறது

பிளாக்கரில் நிறைய சந்தேகங்கள் எனக்கு எழுந்துள்ளது

· 14 comments


 
ஒரு மாதமாக என் பிளாக்கருக்கு ஒரு நல்ல டெம்ப்ளெட்டைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமின்றி நிறைய சந்தேகங்கள் பிளாக்கரில் எனக்கு எழுந்துள்ளது
     யாரேனும் எனக்கு உதவுங்கள்...

புது வீடு குடி புகும் பொழுது

11.22.2011 · 4 comments


 (என்னுடைய  கவிதைக்கான வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட கவிதை)
புது வீடு குடி புகும் பொழுது
எடுத்துப் போக வேண்டிய பொருட்களை
ஒவ்வொன்றாய் சொன்னாய் நீ
குத்து விளக்கு !
நான் வேண்டாம்
நீ இருக்க அது எதற்கு?
என்றேன்.

அரசாங்கம் நடத்தும் சீட்டு கம்பெனியில் ஏமாந்தவர்களில் நானுமொருவன்

11.21.2011 · 2 comments


     இதோ மேலுள்ள படங்களில் நம் அரசாங்கத்தின் முட்டாள்தனத்தைப் பார்க்கலாம். கீழே படிக்க என் முட்டாள் தனத்தைப் பார்க்கலாம்.

   தமிழக அரசு போக்குவரத்து கழகம் அரசாங்கம் நடத்தும் சீட்டு கம்பெனியாகத் தான் எனக்குத் தெரிகிறது. 600 ரூபாய் கொடுத்தால் மாதம் முழுவதும் விருப்பம் போல் மாநகர பேருந்தில் பயணம் செய்யலாம் என்பது நவம்பர் 18ற்கு முன் இருந்த சட்டம்.

கிரிக்கெட்டும் வாழ்க்கையும் தத்துவம்

11.18.2011 · 5 comments

 


 கிரிக்கெட்  இன்று பெரும்பாலான இந்தியர்களின் தேசிய கீதமாகவே இருக்கிறது. அதுவும் நம் இந்திய அணியினர் இந்த வருடம் உலக கோப்பையை வென்றதில் இருந்து இந்தியர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருப்பினும் கிரிக்கெட்டை வெறுப்பவர்கள் இந்தியாவில் நிறையப் பேர் இருக்கிறார்கள். கிரிக்கெட்டை முட்டாள்கள் தான் பார்ப்பார்கள், இன்னும் பல வகையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும். இன்று பணம் கொழிக்கும் தொழிலாகவே உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்க்கப்படுகிறது.

என் உயிர் நாதம்

11.17.2011 · 2 comments


நீ கேட்பதற்காகவே வைத்த என்

அலைப்பேசியின் ஒலி நாதத்தை

உன்னைத் தவிர எல்லோரும் கேட்கிறார்கள்…

விலையினைக் கொடுத்தா ஞானம் வாங்குவது

11.16.2011 · 1 comments


 
விதைகளை விற்று
விறகுகள் வாங்குகிறோம்
சதைகளை வளர்க்க
எலும்பினைத் தேய்கிறோம்
விலையினைக் கொடுத்தா
ஞானம் வாங்குவது
மலரனில் தேய்தா
முற்களைக் கூராக்குவது

அம்மா உனக்குத் தெரியுமா?

11.15.2011 · 9 comments

அடிக்கடி நீ தொட்டுப் பார்க்கும்
அடி வயிற்றில் தான் நான் துடிக்கின்றேன்

நொடிக் கொரு முறை என் சலனத்தை

நீ ரசிப்பதை நானும் உணர்கின்றேன்

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (2)

11.14.2011 · 2 comments

 
நீ கவிதையாய் எழுதிய கடிதங்களை விட
நான் உனக்கு முதன் முதலில்
வாங்கித் தந்த பேனாவை நீ
எழுதுகிறதா என பரிசோதிக்க
ஒரு காகிதத்தில் கிறுக்கினாயே...
அந்த கிறுக்கல்கள் தான் எனக்கு
இன்றும் மிகப் பெரிய காதல் பொக்கிஷமாகத்
தெரிகிறதுவாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (1)

· 2 comments

 

அகரத்தை முதலாக உடையது
எழுத்து
அன்பே உன் விரல்களின்
கிறுக்கல்களை முதலாக உடையது
என் காதல்.....

 வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

கூடங்குளமும் கல்லணையும் அப்துல் கலாம்

11.13.2011 · 2 comments

 

அழும் குழந்தைக்கு சாக்லெட் கொடுக்கும் கதை. கூடங்குளத்தில் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நடக்கும் போராட்டத்தை இப்படித் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

பிளாக்கரில் நான் செய்த தவறுகள் உதவுங்கள்

11.12.2011 · 3 comments
ஒரு பதிவை எழுதிவிட்டு அதை பதிந்த பின் மறுமுறை அதை மீண்டும் திருத்துவது இயலாமல் இருக்கிறது. நேற்று சில மாற்றங்களை செய்து அதை சேமித்தேன். நீண்ட நேரமாகியும் பதிவு சேமிக்கப் படாமலேயே இருக்கிறது.
என்ன செய்வது என்றுத் தெரியவில்லை.

ஏழாம் அறிவுக்கு ஒரு உதவி இயக்குனராக நான் எழுதும் திரைக்கதை (2)

· 6 comments


வாசக நண்பர்களே இந்தப் பதிவை படிப்பதற்கு முன் இதற்கு முந்தையப் பதிவை படிக்கவும். இதற்கு முன் படித்தவர்களிடம் முதலில் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பதிவு மிக நீண்டதாக மாறிவிட்டது. எத்தனை முயன்றும் தவிர்க்க முடியவில்லை. சீன மொழி பேசும் இடங்களில் எல்லாம்  தமிழையே பயன்படுத்தியிருக்கிறேன். வேறு வழியில்லை இன்னும் நீண்டு விடும் என்பதனால்....
வாசக நண்பர்களே படித்துவிட்டு இதன் நிறை குறைகளை மறக்காமல் பின்னூட்டம் இடவும்.
இடைவேளி முடிந்ததும்

ஏழாம் அறிவு திரைவிமர்சனம்: ரசனைக்கு எட்டாத அறிவு

11.11.2011 · 8 commentsஉதயநிதி ஸ்டாலின் ,ஏ.ஆர்.முருகதாஸ்,சூர்யா,ரவி.கே.சந்திரன்,ஹாரிஸ் ஜெயராஜ், பீட்ட்ர் ஹெயின், ஆண்டனி என்று மிகப் பிரம்மாண்டமான கூட்டணியில் ஒரு படைப்பு. ஆயுதப் பூஜையில் இருந்தே ஏழாம் அறிவிற்கான பரபரப்பை கூட்டிவிட்டது மீடியாக்கள். தமிழக மக்களின்றி உலக தமிழர்கள் அனைவரிடமும் ஒரு எதிர்ப்பார்ப்பை கிளப்பிவிட்டது இந்த மீடியாக்கள்

ஏழாம் அறிவுக்கு ஒரு உதவி இயக்குனராக நான் எழுதும் திரைக்கதை

· 8 comments


இது கிண்டலுக்காக அல்ல. உண்மையில் ஏழாம் அறிவைப் பார்க்கையில் சில இடங்களில் வியந்தேன். இருப்பினும் அந்த திரைக்கதை என் மனதில் சிறு உறுத்தலை உண்டு செய்ததால் என் மனதில் இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணியதை எழுதுகிறேன்.

Ø  திரைப்படம் ஆரம்பித்து முதல் 15 நிமிடங்கள் எந்த மாற்றமும் இல்லை. போதி தர்மனின் வாழ்க்கை அப்படியே திரையில் வருகிறது. அதற்கு அடுத்து போதிதர்மன் இறந்ததும் இந்தியத் தேசத்தைக் காட்டுகிறோம். தமிழகம் காட்டப்படுகிறது.

Ø  சென்னை மாநகரில் ஸ்ருதிஹாசன் ( சுபா ஸ்ரீனிவாசன்) படிக்கும் கல்லூரி காட்டப்படுகிறது. ஒரு பேராசிரியர் வந்து ஆராய்ச்சிப் பற்றி சொல்லிவிட்டு, அதை எந்த தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறார். 

மனம் என்ன காதலின் விருந்தாளியா?

11.09.2011 · 5 commentsஇது என்ன புது உணர்வு
எதைக் கொடுப்பது நான்...
நீ என்னிடம் எடுத்துச் சென்றது
திரும்பப் பெற முடியாத உணர்வுகள்
அல்லவா...
அப்படியிருக்க என்னிடம் நீ
எதைக் கேட்கிறாய் பெண்ணே!
கொடுத்த சில பொருட்களைத்
திருப்பிக் கொடுத்துவிட்டு
எல்லாவற்றையும்
நான் கொடுத்துவிட்டேன்...

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு தமிழில் தான் இந்த பழமொழி தோன்றியிருக்கிறது

11.03.2011 · 6 comments


இது நம் தமிழகத்தில் வெகு காலமாக உலவிக் கொண்டிருக்கும் பழமொழி. பழமொழி என்பதால் நிச்சயம் இது தோன்றிய காலகட்டத்தை நாம் அறுதியிட்டு கூறிட முடியாது. இருப்பினும் நம் தமிழகம் இன்று அந்த பழமொழியை எந்தளவு பின்பற்றுகிறது என்று தெரியவில்லை.

வேலாயுதம் திரைவிமர்சனம்

10.28.2011 · 6 commentsநீண்ட நாட்களுக்குப் பிறகு இளைய தளபதிக்கு ஒரு பெயர் சொல்லும் படம். வேலாயுதம். படம் ஆரம்பித்தவுடனேயே காஷ்மீரைப் போன்ற ஒரு இடத்தைக் காட்டி தெரியாத மொழியில் ஏதோ பேச,பழைய விஜயகாந்த் பட்த்துக்குள் நுழைந்துவிட்டது போல் ஒரு உணர்வைத் தருகிறது. மீண்டும் அதே தீவிரவாதமா, அய்யோ சாமி கண்ணைக் கட்டுதேன்னு கொஞ்சம் கண் அயர,சிட்டியில் ஒரு வெடிக்குண்டு வெடிக்கிறது. என்னடா இது சென்னைக்குப் பழக்கப்படாத விஷயங்களைக் காட்டுவதிலேயே இந்த தமிழ்சினிமா எவ்வளவு நாள் தான் பயணிக்குமோ தெரியலையே. பழைய சினிமாவில் வருவதுப் போல் ரிப்போர்டர் கூட்டம் அதில் ஜெனிலியா என்று ஆரம்பித்து ஒரு பத்து நிமிடம் பொறுமையாகச் செல்கிறது.

அவதாருக்கு கைத்தட்டல் கூடங்குளத்திற்கு ஏன் எதிர்ப்பு...?

10.25.2011 · 4 comments


அவதார் :மனித இனம் வேறு ஒரு கிரகத்திற்கு சென்று அங்கிருக்கும் நாபிகள் என்ற இனத்தை விரட்டிவிட்டு,அங்கிருக்கும் ஒரு பொருளை (தனிமத்தை) கைப்பற்ற எண்ணுகின்றனர். அந்த நாபிகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கும் இயற்கையை அழிக்க வந்த மனிதர்களுக்கும் இடையில் மிகப் பெரிய யுத்தம் நிகழ்கிறது. அதற்கு மனிதனில் இருந்து ஒருவன் இவர்களுக்கு நாபியாகி உதவுகிறான். இறுதியில் நாபிகள் வெற்றி பெற்று மனிதர்கள் தோற்று, அந்த கிரகத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள்.

அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம்

10.19.2011 · 0 commentsதேர்தலென்றால் சட்ட மன்றமாகட்டும்,பாராளுமன்றமாகட்டும், ஊராட்சியாகட்டும் பெரு வாரியான மக்கள் எதிர்ப்பார்ப்பது ஒரு ஓட்டுக்கு யார் எவ்வளவு தருவார் என்று தான் இருக்கிறது.
இந்த முறை இந்த வேடபாளர் இத்தனை லகரங்கள் செலவு செய்திருக்கிறார், எனவே அவர் நிச்சயம் வெற்றி பெற்றிடுவார் என்பதாகத் தான் தேர்தல் கணிப்பு இருக்கிறது. அதையும் தாண்டி அவர் எத்தனைப் பிரபலம் என்ற அளவிலும் அமைகிறது வேட்பாளரின் வெற்றி. இந்த முறையில் என்றேனும் ஒரு சிறந்த தலைவர் நமக்கு கிடைக்க வாய்பிருக்கிறதா?

நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் மட்டும் போதுமா?

10.13.2011 · 0 comments
சமூகத்தின் சரியான பிரதிபலிப்பு எங்கேயும் எப்பொழுதும் மணிமேகலை. இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு நன்குப் புரியும் நான் சொல்ல வருகிற கருத்து. தன்னைக் காதலிக்கும் ஒருவனுக்கு மணிமேகலையாக வரும் அஞ்சலி, என்னென்ன தேர்வுகள் வைக்கிறாள் என்பதை இந்தக் கதையில் அழகாக சொல்லியிருக்கிறார்கள். தேர்வுகள் என்பதைவிட தன்னைக் காதலிப்பதனால் என்னென்ன பிரச்சினையை காதலனான கதிரேசன்(ஜெய்) சந்திக்க வேண்டும் என்பதை இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

சமூக ஒழுக்கம்: பெருமைக் கொள்வோம் இந்தியர் என்பதில்.

· 0 commentsஜம்மூ காஷ்மீர் தொடர்பாக,பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்தால் கோபமடைந்த இரு வாலிபர்கள் அவரை அடித்து உதைத்தனர். சுப்ரீம் கோர்ட் சேம்பரிலேயே இந்த சம்பவம் நடந்தது.
பத்திரிக்கையில் ஒரு செய்தி, படித்துவிட்டு மக்கள் உச் கொட்டிவிட்டு சிறிது நாட்களில் மறந்துவிடுவர். ஒரு நபருக்கு கொடுக்க வேண்டிய தண்டைனையைப் பற்றி கருத்துத் தெரிவித்ததில் நடந்த வன்முறை செயல் இது. தூக்குத் தண்டையை ரத்து செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டிலும் சில இடங்களில் போராட்டம் நிகழ்ந்தது. ஜம்மூவிலும் அதைச் சார்ந்தே போராட்டம் நிகழ்கிறது. இதைப் பற்றி கருத்து தெரிவித்த ஒரு வழக்கறிஞர் மேல் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.

நானோ தொழில்நுட்பத்தினால் உடல் தானம் அவசியமற்றுப் போகும்:

· 0 comments
     இன்று நாம் என்ன தான் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்தாலும், மனித சமுதாயத்தையே மிரட்டிக் கொண்டிருக்கும் சில கொடிய நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழியை இன்னும் நாம் கண்டறியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இல்லையெனில் “ ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற சிறந்த மனிதரை நாம் கணையப் புற்று நோய்க்கு பலிக் கொடுத்திருக்க மாட்டோம்.

மின்சாரத்திற்கு நிரந்த தீர்வு எப்பொழுது?

10.07.2011 · 0 comments

தமிழக மின் துறைக்கு சோதனை மேல் சோதனை,கூடங்குளத்தில் அணுமின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம், சென்னையிலும் கல்பாக்கம் அணு மின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம். அமெரிக்காவின் “வால் தெருபோராட்ட்த்திலும் அணு உலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை என்று அணு உலையை எதிர்க்கும் போக்கு வலுத்துக் கொண்டே செல்கிறது. உண்மையில் இது சரி தானா?
வள்ளுவர் சொன்னது போல
     குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
      மிகை நாடி மிக்க கொளல்

வாகை சூட வா...

· 2 comments


திரைவிமர்சனம்: வாகை சூட வா...

     வாகை சூட வா...    பெயரிலேயே தமிழின் சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் புறத்திணையை நினைவுப்படுத்துகிறார் இயக்குனர் சற்குணம். அந்த பெயருக்காகவே படத்தைப் பார்க்க வேண்டுமென திங்க கிழமை காலையிலேயே அருகிலிருக்கும் திரையரங்கிற்குள் சென்றேன். எதிர்பார்த்த கூட்டம் இல்லை தான். எப்பொழுதும் நல்ல படங்களுக்கு கூட்டம் வர சிறிது காலம் பிடிக்கும் தான். எதிர்பார்ப்புடனே டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு திரையரங்கிற்குள் சென்று அமர்ந்தேன். அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே திரைப்படம் ஆரம்பித்துவிட்டது. எல்லா படங்களுக்கும் வரும் சிலுமிச ஜோடிகள் இந்த படத்தையும் விட்டு வைக்கவில்லை.

தமிழ்த்தொட்டில் சமீபத்திய இடுகைகள்

Powered by Blogger.

என்னைப் பற்றி

நான் பின்தொடருபவை...

About

நீங்களும் இணையலாம்

என் கவிதைகள் பக்கம்

Search This Blog

வருகை தந்து பக்கங்களை பார்த்தவர்கள்

Featured Posts Coolbthemes

Vaanyurntha Solaiyila - Short Film Trailer | Tamilraja | Satheesh | Whit...

நட்புடன் தமிழ்ராஜா

Blogroll