Showing posts with label எதிர்ப்பு. Show all posts
Showing posts with label எதிர்ப்பு. Show all posts

10.25.2011

அவதாருக்கு கைத்தட்டல் கூடங்குளத்திற்கு ஏன் எதிர்ப்பு...?


அவதார் :மனித இனம் வேறு ஒரு கிரகத்திற்கு சென்று அங்கிருக்கும் நாபிகள் என்ற இனத்தை விரட்டிவிட்டு,அங்கிருக்கும் ஒரு பொருளை (தனிமத்தை) கைப்பற்ற எண்ணுகின்றனர். அந்த நாபிகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கும் இயற்கையை அழிக்க வந்த மனிதர்களுக்கும் இடையில் மிகப் பெரிய யுத்தம் நிகழ்கிறது. அதற்கு மனிதனில் இருந்து ஒருவன் இவர்களுக்கு நாபியாகி உதவுகிறான். இறுதியில் நாபிகள் வெற்றி பெற்று மனிதர்கள் தோற்று, அந்த கிரகத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள்.

10.13.2011

சமூக ஒழுக்கம்: பெருமைக் கொள்வோம் இந்தியர் என்பதில்.



ஜம்மூ காஷ்மீர் தொடர்பாக,பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்தால் கோபமடைந்த இரு வாலிபர்கள் அவரை அடித்து உதைத்தனர். சுப்ரீம் கோர்ட் சேம்பரிலேயே இந்த சம்பவம் நடந்தது.
பத்திரிக்கையில் ஒரு செய்தி, படித்துவிட்டு மக்கள் உச் கொட்டிவிட்டு சிறிது நாட்களில் மறந்துவிடுவர். ஒரு நபருக்கு கொடுக்க வேண்டிய தண்டைனையைப் பற்றி கருத்துத் தெரிவித்ததில் நடந்த வன்முறை செயல் இது. தூக்குத் தண்டையை ரத்து செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டிலும் சில இடங்களில் போராட்டம் நிகழ்ந்தது. ஜம்மூவிலும் அதைச் சார்ந்தே போராட்டம் நிகழ்கிறது. இதைப் பற்றி கருத்து தெரிவித்த ஒரு வழக்கறிஞர் மேல் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.

10.07.2011

மின்சாரத்திற்கு நிரந்த தீர்வு எப்பொழுது?





தமிழக மின் துறைக்கு சோதனை மேல் சோதனை,கூடங்குளத்தில் அணுமின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம், சென்னையிலும் கல்பாக்கம் அணு மின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம். அமெரிக்காவின் “வால் தெருபோராட்ட்த்திலும் அணு உலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை என்று அணு உலையை எதிர்க்கும் போக்கு வலுத்துக் கொண்டே செல்கிறது. உண்மையில் இது சரி தானா?
வள்ளுவர் சொன்னது போல
     குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
      மிகை நாடி மிக்க கொளல்

Popular Posts