6.19.2013

ரணகளம்: என்னுடைய முதல் குறும்படம் (காணொளி)( ஒரு போட்டியினால் தீண்டாமையை மாற்றிவிட முடியுமா?)இது கற்பனைத் தான் என்றாலும் என் மனதுக்குள் நிகழ்த்தி அதை நிஜத்தில் நீங்களும் பார்க்குமாறு வடிவம் கொடுக்கும் அளவு இந்த முயற்சி வந்திருக்கிறது. இதைத் தான் சமூக மாற்றத்திற்கான அடித்தளமாக நான் பார்க்கிறேன். போர்க்காய் என்ற ஒரு விளையாட்டை வைத்து தீண்டாமை என்ற ஒரு சமூக மடமையை ஒரு குறும்படத்திலாவது மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த ரணகளம் மூலம் எங்கள் குழுவிற்கு நிறைவேறியது. இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த என் நண்பர் நிவாஸ்குமாருக்கும், விக்னேஷ், குழு நண்பர்கள் அனைவருக்கும், குறிப்பாக லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர் சந்திரசேகர்,மற்றும் எங்களை மேலும் ஊக்குவித்த தினத்தந்தி, டெக்கன் கிரானிக்கல் நாளிதழிற்கும் இந்தப் பதிவின் மூலம் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் 

இந்தக் குறும்படத்தை என் பதிவுலக நண்பர்கள், மற்றும் வாசக நண்பர்கள் அனைவரும் கண்டு கருத்துரையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

 ரணகளம் : தீண்டாமையை வேரறுக்கும் முயற்சிநட்புடன் 
தமிழ்ராஜா

6.16.2013

சாதி அழியாது, நவீனப்படுத்தப்படுகிறது...


அந்தனன் - புத்திக்கு மட்டுமே வேலைக் கொடுப்பவன்.அதன் மூலம் எல்லோரையும் தனக்கு கீழ், பணி செய்யும்படி சாதித்துக் கொள்கிறான்....

அந்தனன் : அரசியல்வாதிகள், மென்பொருளில் வேலைப்பார்ப்பவர்கள், இப்படி மூளையை வைத்து மட்டுமே சமூகத்தின் சகல வசதிகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டவர்கள்....