• 6.10.2012

  என் பார்வைக்கருகில்

                                          உன்னை நான் பார்த்து விடக்கூடாதென்று
  எத்தனை முயற்சி எடுக்கிறாய்
  நான் வீட்டிற்குள் வரும் நேரம்
  தான் உனக்கு மாவு அரைப்பது
  ஞாபகத்திற்கு வரும்
  நான் வெளியில் போகும் பொழுது
  உனக்கு ஊற வைத்த துணி
  ஞாபகத்திற்கு வரும்
  நான் பேசும் பொழுது உன்
  காதுகளுக்கு மட்டும் அடுப்பங்கறையில்
  இருந்து ஒலி கேட்கும்
  நான் விடுமுறை என்றால்
  அப்பொழுது தான் உனக்கு
  தலைவலி ஞாபகத்திற்கு வரும்.
  இப்படி நமக்கான தனிமையெல்லாம்
  சென்றுக் கொண்டே இருக்கிறது.
  உள்ளுக்குள் உன் அருகாமையை
  எண்ணி புலம்பும் ஒரு உயிர் இருப்பதை
  ஏன் உன்னால் உணர முடியவில்லை.
  என் பார்வைக்கருகில், அருகாமையில்
  பேசிக் கொண்டிருக்க உனக்கு விருப்பமில்லையா?
  என்று ஒரே ஒரு முறை தான் கேட்டேன்
  அதுவும் மனம் தாங்காமல்
  அந்நொடி நீ சிந்திய கண்ணீர் சொன்னது
  உன்னுடைய அத்தனை அன்பையும்…  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே