• 11.15.2011

  அம்மா உனக்குத் தெரியுமா?

  அடிக்கடி நீ தொட்டுப் பார்க்கும்
  அடி வயிற்றில் தான் நான் துடிக்கின்றேன்

  நொடிக் கொரு முறை என் சலனத்தை

  நீ ரசிப்பதை நானும் உணர்கின்றேன்

  இரவு பகலென எது வந்தாலும்

  நீ சிரிக்கும் பொழுது இங்கு பகலென

  உணர்கிறேன்

  நீ சிரிக்காத பொழுது இரவெனக்

  கொள்கிறேன்

  என் கருவறை நாட்களில் பகல்

  நீள வேண்டும் என்னை வளர்ப்பவளே!

  எனக்காக சுவாசிக்கும்
    நீ
  எனக்காக உண்ணும் நீ

  எனக்காக துடிக்கும் நீ

  எனக்காக மகிழ வேண்டும்

  மனம் மகிழும் இசையில்

  நா மகிழும் ருசியில்

  நீ திளைக்க வேண்டும்

  என்னுள் உணவை சேர்க்கும்

  இந்த அன்புக் கொடியை

  பிரித்தெடுக்கும் நாளுக்காக

  நீ காத்திருக்கிறாய்

  உன்னுள் பொங்குகின்ற

  தாய்மையை காண

  நான் காத்திருக்கின்றேன்.

  மறதியான வலிகளுடன்

  உனக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றேன்

  நினைவுகளற்ற மனதுடன் உன்னுள்

  விழிக்கப் போகிறேன்

  எனக்கான முத்தங்களையும்

  தழுவல்களையும் நீ கொடுக்கப்

  போகிறாய் என் வலி தீர...

  உனக்கான வலி தீர

  நான் சொல்லப் போகிறேன்

  அம்மா! அம்மா! அம்மா!

  என...
  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே