1.07.2008

கங்கையை நாம் காக்க வில்லையெனில் நம்மை மட்டும் எப்படி அது காக்கும்.

கங்கை புனிதாமா ?
என்று கேட்டால் இப்பொழுது இல்லை என்று சொல்லக் கூடிய நிலைமையில் தான் நாம் இருக்கிறோம்







நதிகளில் எல்லாம் இப்பொழுது நாம் சுவாசிக்கும் உயிர் காற்றான ஆக்ஸிஜன் மிகவும் குறைந்து காணப்படுகிறது என்று இப்பொழுதைய ஆய்வு சொல்கிறது.
முக்கியமாக நாம் புண்ணிய நதி என்று சொல்கிறோமே 'கங்கை', அதில் 1% ஆக்ஸிஜன் கூட இல்லையாம். வருங்காலத்தில் கங்கை நதியை குடிக்க அல்ல, குளிக்கக் கூட உபயோகப் படுத்த முடியாது; என்று சொல்வதற்க்கே வெட்கமாக இருக்கிறது.
தொழிற்சாலைகளின் கழிவினாலும், மக்கள் செய்யும் சில சம்பிரதாய கழிவுகளினாலும்




கங்கை நீரின் உயிர் தன்மை கெட்டுக் கொண்டு இருக்கிறது.
எங்கெங்குக் காணினும் சக்திய டா ! என்று இருந்த கங்கை இன்று எங்கெங்கு காணினும் பிணமடா!என்றாகிவிட்டது. புண்ணியம் கிடைக்கும் என்று இறந்தவர்களையெல்லாம் நதியில் போட்டு விடுகின்றனர்.அவர்களுக்கு புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ! நமக்கு நிச்சயம் பாவம் தான் வந்து சேர்ந்து கொணடிருக்கிறது.




கங்கை நதியின் புனிதம் என்று நாம் சொல்வதே அதன் உயிர்த்தன்மையை ( ஆக்ஸிஜனின் அளவை) வைத்து தான்.இப்பொழுது அதற்க்கே நாம் வேட்டு வைத்துகொணடிருக்கிறோம்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான ஒன்று. கங்கை நீரின் பிறப்பு.இமய மலைப் பிரதேசத்தில்,இருந்து பனிப் பாறைகள் உருகுவதாலும், மழை நீரினாலும் கங்கைக்கு நீர் வந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பூமியின்
தட்பவெப்ப மாற்றங்களினால், பனிப் பாறைகள் உருகுவது அதிகமாகிக் கொண்டு வருகிறது.


இந்த சூழ்நிலை நிலைக்குமாயின் வருங்காலத்தில் பனிப் பாறைகளெல்லாம் உருகி , மழை நீரின் உதவியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைமை கங்கைக்கு வந்து விடும்.
இந்த விஷயத்தில் அரசாங்கம் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லைஆனால் கங்கையின் புனிதத்தை மட்டும் மேடையில் வாய் கிழிய பேசுகின்றனர்.



இதில் இருந்து கங்கையை காப்பாற்ற தொண்டு நிறுவனங்கள் சில கங்கையை சுத்தம் செய்ய முயற்சி செய்த வண்ணம் தான் இருக்கிறது. இருப்பினும் தொடரும் இந்த கழுவுககளின் படையெடுப்பை மக்கள் நிறுத்தாத வரை ...
கங்கை நீரில் மீண்டும் உயிர் தன்மை பெருக வாய்ப்பில்லை. கங்கையை நாம் காக்க வில்லையெனில் நம்மை மட்டும் எப்படி அது காக்கும்.



வருங்கால தலைமுறையினர் 'கங்கை ' என்றவுடன் மூக்கில் விரலைக்
கொண்டு மூடாமல் இருக்கவாவது நாம் வழி செய்ய வேண்டும்.

4 comments:

  1. நல்ல பதிவு.

    வேர்டு வெரிஃபிகேஷன் வேணுமா?

    மாடரேஷன் போட்டுக்கலையா?

    ReplyDelete
  2. துளசி கோபாலன் அவர்களே, தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
    //வேர்டு வெரிஃபிகேஷன் வேணுமா?

    மாடரேஷன் போட்டுக்கலையா? //
    புரியவில்லையே?
    என்ன சொல்ல வருகிறீர்கள்?

    ReplyDelete
  3. அது ஒண்ணுமில்லைங்க. உங்களுக்குப் பின்னூட்டம் போடவந்தால் அதை பப்ளிஷ் செய்யுமுன் சில ஆங்கில எழுத்துக்கள் வருது பார்த்தீங்களா?

    அதை பின்னூட்டம் இடுபவர் தட்டச்சு செய்தால் மட்டுமே அனுப்பமுடியும். இது பின்னூட்டம் இடுபவர் ஆர்வத்துக்கு ஒரு தடை.

    அதை எடுத்துவிட்டால் எம் போன்ற மக்களுக்கு சுலபம். எப்படியும் எல்லாப் பின்னூட்டங்களும் பிரசுரம் ஆவதற்கு முன் தங்கள் தபால்பெட்டிக்கு வந்துவிடுகிறதல்லவா?

    அப்போதே நீங்கள் அதை வெளியிடுவதா வேண்டாமா என்று முடிவு செய்யலாமே...
    அதான் கொஞ்சம் பாருங்க.

    யப்பா......இதுவே கண்ணைக்கட்டுதே:-)))))

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி நண்பரே!

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts