• 12.18.2007

  என்னை மீட்டுக்கொடு

  என்னை மீட்டுக்கொடு!  உன் துப்பட்டாவால் நான் விழுந்தேன்
  அன்பே என்னை தூக்கி விடு!
  உன் இருவிழி பார்வையில் எனை மறந்தேன்
  அன்பே என்னை மீட்டுக்கொடு!
  ஓருயிர் தானே எனக்குள் இருப்பது
  இருயிர் சுமக்க இதயத்தில் இடமெது
  கருவினில் கூட இருயிர் தோன்றும்
  என் இதயத்தில் என்றுமே ஓருயிர் தான்
  அதுவும் என்றும் உன்னிடம் தான்
  உன் கண் இமைக்குதே
  எனை சிறை வைக்குதே
  உன் இதழ் திறக்குதே
  அது கவி படைக்குதே
  நீயும் புன்னகைக்கையில்
  என்னுயிர் மறுப்பிறப்பெடுக்குதே.............
  காதல் சுடுமோ! கண்ணீர் வருமோ!
  கனவும் நினைவும் கவலையை தருமோ!
  மறதியும் மனதில் மறைவின்றி எழுமோ!
  முற்களின் வலியை பூக்கள் தருமோ!
  சொற்களும் சுமையாய் நெஞ்சினில் விழுமோ!
  என்னவளே!
  அடி என்னவளே!
  ஒரு சொல் சொன்னாய் என் நெஞ்சுள்ளே........
  வாழ்ந்தது போதும் என்று நினைப்பது போல்........
  என் வாழ்க்கை எப்படி போகும்
  உன் சொல்லால் பாதைகள் மாறும்
  கனவாய் நீ இல்லை உயிராய்
  உள்ளிருந்து மனமாய் இயங்குகிறாய்
  பொய்யை மறைக்கின்றேன் நான்
  இருப்பதாக இந்த உடலில்
  உண்மையில் நீயே எனை
  ஆட்கொண்டாய் உன் பார்வையில்
  யாரையோ கூப்பிட்டு விட்டு
  என்னை அழைத்தேன் என்கிறார்கள்
  எனக்கு செவிகள் வேலை செய்யவில்லை
  என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள்
  நல்ல வேளை செவிகள் மட்டும் தான்
  அவர்களுக்கு தெரிந்திருக்கிறது
  என்னுயிரே வேலை செய்ய வில்லை
  என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே
  தெரியும்.................
  தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதே!