10.28.2011

வேலாயுதம் திரைவிமர்சனம்



நீண்ட நாட்களுக்குப் பிறகு இளைய தளபதிக்கு ஒரு பெயர் சொல்லும் படம். வேலாயுதம். படம் ஆரம்பித்தவுடனேயே காஷ்மீரைப் போன்ற ஒரு இடத்தைக் காட்டி தெரியாத மொழியில் ஏதோ பேச,பழைய விஜயகாந்த் பட்த்துக்குள் நுழைந்துவிட்டது போல் ஒரு உணர்வைத் தருகிறது. மீண்டும் அதே தீவிரவாதமா, அய்யோ சாமி கண்ணைக் கட்டுதேன்னு கொஞ்சம் கண் அயர,சிட்டியில் ஒரு வெடிக்குண்டு வெடிக்கிறது. என்னடா இது சென்னைக்குப் பழக்கப்படாத விஷயங்களைக் காட்டுவதிலேயே இந்த தமிழ்சினிமா எவ்வளவு நாள் தான் பயணிக்குமோ தெரியலையே. பழைய சினிமாவில் வருவதுப் போல் ரிப்போர்டர் கூட்டம் அதில் ஜெனிலியா என்று ஆரம்பித்து ஒரு பத்து நிமிடம் பொறுமையாகச் செல்கிறது.
சரியாக  பதினைந்தாவது நிமிடத்தில் ஆரம்பிக்கிறது படத்தின் வேகம். இது வரை வந்த சூப்பர் ஹிரோ படங்களிலிருந்து இந்தப் படம் வித்தியாசப்படுவது, அந்தக் காட்சியில் தான். வேலாயுதம் என்றப் பெயர் தான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. எனவே இது வரை வந்த விஜய் படங்களிலிருந்து இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது.
     முதல் பாதியின் திரைக்கதை அசுர வேகத்தில் செல்கிறது. அதற்கு நேர்மாறாக இரண்டாவதுப் பாதியின் திரைக்கதை அமைந்திருக்கிறது. முக்கியமான ஒரு கட்டத்தில் படம் முடிந்துவிட்டது என்று எண்ணும் நேரத்தில், இன்னும் முடியவில்லை என்று நீளும் காட்சிகள் சலிப்பு. இருப்பினும் படத்தின் இறுதிக் காட்சி அருமை. திரையரங்குகள் அதிரும் அளவுக்கு கைத்தட்டல்,திரைக்குள்ளும் கைத்தட்டல் என இறுதிக் காட்சிகளில் அசத்துக்கிறார் இயக்குனர் ராஜா. இறுதிக்காட்சியில் விஜய் பேசுவதாக வைத்த வசனங்களில் நல்ல முதிர்ச்சி. ”எல்லோரும் சிரிக்க நினைத்தால் சிரிக்கிறீர்கள்,அழுகை வந்தால அழுகிறீர்கள்,கோபம் வந்தால் மட்டும் ஏன் அதை வெளிப்படுத்த இன்னொருவன் வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்”.இது போல் சில இடங்களில் வசனங்களில் கைத் தட்டல் வாங்குகிறது வேலாயுதம். சென்னை வந்து இறங்கியதும் விஜய் தன் பெயரை சொல்லும் பொழுது திரைக்குள்ளும் சரி, திரைக்கு வெளியேயும் சரி ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். 

     இருப்பினும் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படத்தை கிளாசிக் தர வரிசையில் சேர்த்திருக்கலாம்.
இதற்கு இடையில் விஜய்க்கும் சரண்யாமோகனுக்குமான அண்ணன் தங்கை செண்டிமெண்டை நகைச்சுவையாக சொல்லியிருப்பது ரசிக்க வைத்தாலும் திருப்பாச்சியை நியாபகப்படுத்தும் விதமாகவே இருக்கிறது.
     சரண்யா விஜய் காட்சிகள் நகைச்சுவையாகவே மனதில் நிற்கிறது. ஹன்சிகா மோத்வானி அந்த இடத்தைக் கூட பிடிக்க மறுக்கிறார். படத்தில் இவர் இல்லாமல் இருந்திருந்திருந்தாலே திரைக்கதை நன்றாக சென்றிருக்கும். படத்தின் நகைச்சுவைக்கு மட்டுமின்றி, திரைக்கதையை நகர்த்தவும் வேகமாக வருவது சந்தானம். படத்தின் மிகப் பெரிய பிள்ஸ் சந்தானம் நகைச்சுவையைத் தாண்டி திரைக்கதையை நகர்த்தும் கதாப்பாத்திரம். ஜெனிலியா திரையில் நம் கண்ணுக்குத் தெரியும் இயக்குனர். ஒவ்வொரு காட்சிக்கு பின்னும், முன்னும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்படுகிறார். இந்த கதைக்கு ஜெனிலியா மட்டுமே போதும் என்று ஏன் இயக்குனருக்கு தோன்றவில்லை. பாட்டுக்காக மட்டும் வந்து போகிறார் ஹன்சிகா மோத்வானி. 

     மொத்தத்தில் கைத் தட்டி படத்தை ரசிக்க வேண்டிய இடங்கள் நிறைய... ரயில் சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பின்னியெடுத்திருக்கிறார். விஜய்யைப் பற்றி சொல்லத் தேவையில்லை, நீண்ட காலமாக தேடி வந்த ஒரு திரைக்கதைக்கு அருமையாகப் பொருந்தியிருக்கிறார்.
     படத்தில் லாஜிக் இல்லை மேஜிக்கை மட்டும் ரசிக்கும் விதமாக இயக்குனர் அழகாக சொல்லியிருக்கிறார். இருப்பினும் இறுதிகட்டக் காட்சிகளின் வசனம் சொன்ன மேஜிக்கையெல்லாம் லாஜிக்காக்குகிறது
கில்லிக்குப் பிறகு நான் கைத்தட்டி ரசித்த ஒரு விஜய்ப் படம்

6 comments:

  1. விமர்சனத்தை அருமையாக எழுதியிருக்கீங்க!!

    ReplyDelete
  2. வேலாயுதம் வெல்லும் ஆயுதம்

    ReplyDelete
  3. வருகை தந்து கருத்து தெரிவித்த விசு,மைந்தன் சிவா,ராகுலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts