1.27.2012

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (4)


கொஞ்சம் உன் இதழ் திறந்து
பேசேன் காதல் மலரட்டுமென்றேன்
நான் பேசினால் தான் காதலா
என்றாய் நீ...
உணர்விற்கு மொழியேது...?
நீ பேசுவது மட்டுமல்ல
நீ பேசாமல் இருப்பதும் காதல் தான்
மெளனமாக  உன் காதலைப்
பார்த்துக் கொண்டே இருக்க
நான் தயார் என் பார்வையைச் சந்திக்க
நீ தயாரா...? என்றேன்
உன் பார்வையைப் பற்றி எனக்குத்
தெரியாதா...என்று சற்று இடைவெளிவிட்டு
அமர்ந்திருந்த நீ என்னருகில் வந்து
என் காதைத் திருகினாய்...
நான் லேசாக சிணுங்கியவாறு
உன் கைகளைப் பிடிக்க முயற்சித்தேன்
அந்த முயற்சியின் நோக்கத்தை
எப்படித் தான் நீ அறிந்தாயே...
திடீரென்று கையை விலக்கிக் கொண்டு
உன் பார்வையை கீழே படரவிட்டாய்
என்ன ஆயிற்று...?
ஓ! இது தான் நாணமோ...!
உன் வாய்ப் பேசுவதை விட
உன் கை காதலை அழகாகப் பேசுகிறது
என்றேன்...
அந்நொடி உன் முகத்தில் வழிந்த காதலை
அழகு என்று மட்டும் சொன்னால்
நான் மூடன்




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

2 comments:

  1. //அந்நொடி உன் முகத்தில் வழிந்த காதலை
    அழகு என்று மட்டும் சொன்னால்
    நான் மூடன்//

    wow! nice! nice!!!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மாங்கனி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts