2.02.2012

அரசியல் (தலைவர்கள்) என்று சொல்ல முடியவில்லை

 
     பொழுது விடிந்தால் முதலில் எல்லாம் கடன்காரன் வருவானோ, பால்காரன் வருவானோ என்று பயந்திருந்த தமிழகத்தின் நடுத்தர மக்கள். இன்று தொலைக்காட்சியின் செய்திகளையும், தினசரியின் செய்திகளையும் பார்த்து அரசாங்கம் என்னத் திட்டத்துடன் வ்ருமோ ? என்று பயந்துவருகின்றனர். காலை இல்லை,மாலை இல்லை  எல்லாப் பொழுதுகளிலும் அரசாங்கம் தான் இன்று மக்களை பயமுறுத்துகிறது.
     எதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நடுத்தர வர்க்கத்தின் மனநிலையில் மின்சாரத் தடை என்ற மாபெரும் அணுகுண்டைத் தூக்கிப் போட்டது சென்ற ஆளுங்கட்சி. அதையே காராணம் காட்டி ஆட்சிக்கு வந்த அரசோ மேலும் பலத் திட்டங்களால் மக்களின் மென்னியைப் பிடிக்கின்றனர்.
     போதிய மின்சாரமின்மையால் தவிக்கும் தமிழகத்தில் கட்டுமானத் தொழில் மட்டும் எப்படி அமோகமாக நடக்கிறது என்று மட்டும் தான் புரியவில்லை. கண்ணுக்கு எட்டியத் தூரம் வரை இருந்த விவசாய நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி வருவது எப்படி...?
     நிலங்களை காய்கறிப் போல் ஏலம் விடும் தொலைக்காட்சி நிறுவனக்களுக்கு யார் அனுமதி தந்தது. கூடங்குளம் என்று நாமெல்லாம் வாதிட்டு பிரயோஜனம் என்ன...?
     நிச்சயம் கூடங்குளத்தில் இருந்து வரும் மின்சாரமும் நம் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை. இருக்கும் வீட்டிற்க்கே மின்சாரமில்லாதப் பொழுது அடுக்கு மாடிக் குடியிருப்புகள் வளர்ந்த வண்ணமே இருக்கிறதே... இதற்கெல்லாம் எப்படி மின்சாரம் தர இயலும்.
     6, 7 வருடங்களுக்கு முன்னர் ஒரு வீடு கட்டி மின்சாரம் வாங்க வேண்டுமென்றால் குதிரைக் கொம்பாக இருந்தது. ஆனால் கடந்த ஆட்சியில் என்ன நடந்ததென்றே தெரியவில்லை. முதல்வன் படத்தில் இறுதியில் கிராபிக்ஸில் திடீரென நிறைய கட்டடங்கள் உருவானது போல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியெங்கும் கட்டடக் குப்பைகள்.
     2006ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது என்பதை அனைவரும் அறிவர். அதன் பிறகு தான் அது வரை இல்லாத மின்சார பற்றாக்குறை 2008 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அப்பொழுது தொடங்கிய இந்த பற்றாக்குறை இன்று ஆட்சி மாறியும் தொடர்கிறது என்றால், பிரச்சினை உற்பத்தியில் இல்லை. அதை சரியாக மக்களுக்கு பங்கிட்டு அளிக்காத ஆட்சியாளர்கள் கையில் தான் இருக்கிறது.
     காரணத்தை பலவாறு அந்த ஆட்சியாளர்கள் பூசி மொழிகினாலும், உண்மை ஒன்று தான். விவசாய நிலத்திற்கும், பொரம்போக்கு நிலத்திற்கும் மின்சாரம் வழங்கியது தான்.
     பெருகி வரும் இந்த நிலவிற்பனையில் உடனடியாக தலையிட்டு அரசாங்கம் அதை சீர் செய்ய வேண்டும். இதற்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களின் இருப்பிடம் சரியாகத் தான் இருக்கிறதா... இல்லை மோசடி எதேனும் நடந்திருக்கிறதா என்று ஆராய வேண்டும்.
     இதையெல்லாம் ஆளும் ஆட்சியாளர்கள் செய்வார்கள் என்றால் கடந்த ஆட்சியே தொடர்வது போல் தான் தெரிகிறது.     தொலைக்காட்சியைப் பார்த்தால் தமிழகத்தின் மொத்த நிலத்தையும் அபகரித்துவிடுவார்கள் போல் தெரிகிறது. ஒவ்வொரு அலைவரிசையிலும் அந்த நிலத்தைப் பற்றிச் சொல்ல சின்னத் திரை, அல்லது பெரியத்திரை நடிகர்கள் வருகிறார்கள்.
   எல்லாம் சரி அந்த நிலத்திற்கு எப்படி அரசாங்கம் மின்சாரம் கொடுக்கும்...?
இப்படியே சென்றால் இன்னும் ஓராண்டிற்குள் இன்னொரு கூடங்குளத்தை நாம் உருவாக்கும் கட்டாயத்தில் தள்ளப்படுவோம்.
     அரசாங்கம் தன் இரும்புக் கைக் கொண்டு இந்த விஷயத்தில் நிலத்தைப் பாதுக்காக்க வேண்டும். ஆனால் செய்யுமா...?
     என் பலத்தைக் காட்டுகிறேன். எனக்குத் தான் மக்கள் ஓட்டுப் போட்டார்கள் என்று சிறுப் பிள்ளையைப் போல் சட்டசபையில் தலைவர்கள் அடித்துக் கொள்ளும் காட்சியைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது . அப்படியிருக்க இவர்களா நம் தமிழக பூமியை சமூக விரோதிகளின் கையில் இருந்து காப்பாற்றப் போகிறார்கள்.
     இப்பொழுது நம் தமிழ் தலைநகரத்தின் முக்கியமானத் தொழில், வீடு கட்டி வாடகை விடுவது தான். இது அள்ளித் தரும் வருமானம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே...
     கூடிய விரைவில் இது ஒட்டு மொத்த தமிழகத்தின் தொழிலாகக் கூட மாற வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் விவசாய நிலங்களையெல்லாம் இப்படி விலை நிலங்களாக மாற்றுவது, விபசாரம் செய்வதற்கு சமம். இந்த அரசாங்கம் இதை தடுக்குமென்றால் நிச்சயம் தடுக்காது. ஏனெனில் சரியான தலைமை ஆட்சியில் இல்லை. இனி மேலும் வரப் போவதில்லை.
     அப்படியிருக்க தமிழக விவசாய  நிலங்களை காப்பது எப்படி...?
     சட்டசபையில் அமர்ந்துக் கொண்டு என் சக்தியென்ன...? பலம் என்ன...? என்று பேசுபவர்கள் யாராக இருந்தாலும், தமிழகத்தின் மிகப் பெரிய சக்தி விவசாயம் தான். அந்த சக்தியை வைத்து தான் தமிழக மக்களின் சக்தி. மக்களின் சக்தியை வைத்து தான் சட்டசபை மட்டுமின்றி பாராளுமன்றத்தின் சக்தியும் இருக்கிறது. இதை அரசியல் வாதிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்
     இங்கு அரசியல் (தலைவர்கள்) என்று சொல்ல முடியவில்லை வாதிகள் என்று தான் சொல்ல முடிகிறது. வாதிட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள். செயலில் ஒன்றும் இல்லை.  
வரப்புயரநீர் உயரும்...                                                                                                          நீர்உயர நெல்லுயரும்...                                             நெல்லுயரகுடிஉயரும் ...                                                  குடி உயர கோன் உயரும்
இது அரசியல்வாதிகளுக்குப் புரிந்தால் அரசியல் தலைவர்கள் ஆகலாம்.
    


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

3 comments:

  1. நல்ல தேவையான பதிவு
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. நல்ல கருத்து, விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பின் விளைவு தெரியாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. @புலவர் சா இராமாநுசம்

    உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி புலவர் அவர்களே.. பதிவு மட்டுமல்ல இதை செயல்படுத்த எதேனும் வழியிருந்தால் யாரெனும் சொன்னால் அதை நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு செயல்படுவோம்.

    @கும்மாச்சி

    ஆமாம் நண்பரே இதன் விளைவு, மனித இனத்தின் அழிவு தான்.

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts