7.10.2012

காதலிக்க பழகலாம் என்றேன்



 காதலிக்க பழகலாம் என்றேன்
பழகிப் பார்த்து காதலிக்கலாம் என்றாய்
காதலால் பழக்கம் உண்டு
பழக்கத்தால் காதலுண்டோ?
கேள்விக்குறி மனதில்
குழந்தையின் கண்ணாடி பருவம் போல்
உன்னில் என்னை பார்த்து உணர்ந்த
காதல் பருவத்தில் இனி ஒரு முறை
அந்த அரிதான நொடிகள்
நிகழப் போவதில்லை
சிரித்துப் பழகும் குழந்தை போலே
நான் காதலிக்க பழகும் குழந்தை
அழுது அடம் பிடிக்கும் என்
அகபாவத்தை புறத்தில் பாவனை
செய்வது குழந்தைப் போல்
என்னால் இயலாது
நீ சொல்லும் பழக்கம்
என் காதலுக்கு இல்லை
நான் உணர்த்தும் காதல்
உன் பழக்கத்தில் இல்லை
எனக்கான காதலும் உனக்கான பழக்கமும்
ஒரே வழித் தடத்தில்
நிகழப் போகும் நொடிகள்
நீ குழந்தையாய் இருப்பாய்
என்னைப்போல் காதலில்


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

2 comments:

  1. நாளை வலைச்சரத்தில் தங்கள் பதிவு வருக

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts