கவிதை என்றதும் உன் ஞாபகம் —வருகிறதென்றேன்
கண்கள் கசக்கினாய்
உனக்கு என் ஞாபகம்
வர நீ என்னை மறந்தால்
தானே முடியும் என்னை மறக்கின்றாயா? —என்றாய்
என்ன பதில் சொல்வது
இல்லை! இல்லை! –என்றேன்
பின்பு கவிதை என்றதும்
யார் ஞாபகம் வருகிறது –என்றாய்…
பேச முடியாமல் விழித்தேன்
பொய் சொல்ல கற்றுக் கொண்டாய் நீ ! என்றாய்
கவிதை எழுதுகிறேனே ! என்றதும்
முறைத்தாய்…
அப்படியென்றால் என்னைப்
பொய் என்கிறாயா?
யார் அப்படி சொன்னது...?
பின்பு கவிதை என்றதும்
என் ஞாபகம் வருவதாகச் சொன்னாயே…
அய்யோ! கடவுளே! என்றேன்
ஏன், நான் என்ன அவ்வளவு
கொடுமைக் காரியா?
கடவுளை கூப்பிட.. என்றாய்…
கண்கள் விரிய உன்னைப்
பார்த்தேன்
ஓ! என்னை பார்வையாலேயே
எரிக்கப் பார்க்கிறீர்களோ!
கண்களை மூடிக் கொண்டேன்
என்னைப் பார்க்க பிடிக்கவில்லை
என்றால் ஏன் என்னை அழைத்தீர்?
அமைதியாக இரு கொஞ்ச
நேரம்—என்றதும்
அப்படியென்றால் இவ்வளவு
நேரம் நான் என்ன உங்கள்
அமைதியை கெடுத்துக் கொண்டிருந்தேனா...?
என்றபடி என்னை விட்டு விலகிச்
சென்ற உன் கரங்களை பற்றி இழுத்தேன் …
விடுங்கள்! என்று நீ சொல்லியும்
உன் கரங்களை நான் என்
முகத்தருகே கொண்டு சென்றேன்
மேலும் கோபம் கொண்ட நீ
வெடுக்’ கென்று உன் கரங்களை
எடுக்க என் கண்களை உன் விரல்கள்
பதம் பார்த்தன
ஆ’ வென்று என் கண்களில்
நான் கை வைக்க
நீயோ பதறிய படி
என் அருகில் வந்து
இமைகளை விரிக்கச்
சொல்லி உன் மெல்லிய
சுவாசத்தால் எனக்கு இதமளித்தாய்
உனது சுவாசத்தின் கதகதப்பில்
மறைந்து போனது
எனது வலிகளும்
உனது கோபமும்
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
உனக்கு என் ஞாபகம்
ReplyDeleteவர நீ என்னை மறந்தால்
தானே .........
மறக்க முடியாத வரிகள்.
Sasi Kala
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி