• 7.12.2012

  நமக்குள் காதல் நிகழ்ந்ததெப்படி?

   
  நமக்குள் காதல் நிகழ்ந்ததெப்படி
  உன்னை நானும் என்னை நீயும்
  கேட்டுக் கொள்ளாத கேள்வி
  மனதுக்குள் எத்தனையோ முறை
  நாமிருவரும் அடிக்கடி கேட்டுக்
  கொண்டும் வார்த்தைகளால்
  வெளிப்படுத்தாத கேள்வி
  நம்மிருவரில் முதலில் காதலை
  வெளிப்படுத்தியது யார்
  நீயா? நானா?
  சில்லென்ற உன் உள்ளங்கையின்
  அணைப்பை முதல் முறை
  கடற்கரையில் நீ நடக்கையில்
  விழுந்து விடாமல் இருக்க
  என் கையைப் பிடித்தாயே
  அப்பொழுது உணர்ந்தேன்
  உன் காதலை...
  அந்த பற்றுதலில் உன் விரல்களின்
  வெப்பநிலை திடீரென மாறியதையும்
  உன் இமைகள் சட்டென மூடியதையும்
  காதலின் குறியீடுகளாகவே
  என் மனம் நினைத்தது
  இருப்பினும் என் மனம் எந்த
  நொடிகளில் எந்தன் காதலை
  உன்னிடம் குறீயீடாக வெளிப்படுத்தியது
  என்று என்னால் உணர முடியவில்லை
  ஆனால் நீ உணர்ந்து விட்டதாகவே
  நான் உணர்கிறேன்.
  என்னை நான் அறியாமலும்
  உன்னை நீ அறியாமலும்
  நம்மிடையே காதல் அறியப்
  பட்ட நொடிகள் புலனால்
  அனுபவித்தும் விளக்கபடாமலே
  நமக்குள் நிகழ்ந்து கொண்டுத் தானிருக்கிறது
  இருந்தும் மனதிற்குள் கேள்வி
  நமக்குள் காதல் நிகழ்ந்ததெப்படி?
  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே