• 9.28.2007

  பிறக்க ஆசை

  தாய் மடியில் அனுபவித்த முதல்
  வலியைஅனுபவிக்க ஆசை
  அந்த நினைவற்ற வலிகளுடனே
  இருந்திருக்கக்கூடாதாஎன்றாசை
  என் மேனி சிந்திய
  முதல் ரத்தத்தைபார்க்காசை — அதுவே

  நான் சிந்திய கடைசி ரத்தமாகி
  இருக்கக்கூடாதா என்றாசை
  பள்ளி சென்ற முதல் நாளை
  எப்படியாவது வாங்க ஆசை
  பக்குவப்படாமல் பள்ளிக்
  குள்ளேயே இருந்துவிட ஆசை
  பழகும் பொழுது
  நல்ல நட்பிற்குஆசை
  அந்த நட்பினிலும்
  சிறந்த மனிதரைகாண ஆசை
  பிரிந்திடினும் எனை
  மறவா நண்பனுக்கு ஆசை
  அந்த நண்பனிடமும்
  எனக்குரிய உரிமைக்கு ஆசை
  மறந்திடினும் ஒரு முறையாவது
  காதலிக்க ஆசை
  அந்த காதலிலும் எனக்குரியவளிடம்
  ஊடலுக்குஆசை
  ஒரு முறையாவது எனக்குரியவளை
  தொட்டு விடஆசை
  அந்தத் தொடு உணர்வும்
  திருமணத்திற்கு பின்னிருக்கஆசை
  பத்து மாதம் எனக்குரியவளின்

  பாரம் சுமக்க ஆசை
  ஈன்று எடுக்கும் பொழுது என்னவளுடன்
  வலி தாங்க ஆசை
  என்னால் தோன்றிய உயிரை
  உன்னதமாக்க ஆசை
  அந்த முயற்சியிலும் என்னவள்
  உணர்வு கலக்க ஆசை
  இருக்கும் வரைக்கும்
  இன்பத்திற்கே ஆசை
  இறக்கும் பொழுதும்
  துன்பம்வராமலிருக்க ஆசை
  கல்லறை யிலும் உறக்கமில்லா ஆசை
  அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
  ஆசையில்லா ஜென்மமாகப் பிறக்க ஆசை…………………………
  ……….