12.13.2007

அம்மா! அம்மா! அம்மா!


ரத்தத்தில் நனைந்து வந்த
என்னை முத்தத்தால் நனைத்த
உன் இதழ்களில்
முதல் முறை என் பெயரை
எப்பொழுது உச்சரித்தாயோ
அன்றிலிருந்து இன்று வரை
அந்த குரலில் கலந்து வரும்
உரிமையை உணர் வை
வேறு எந்த குரலிலும்
நான் உணர்ந்ததில்லை
உன் விரல் பட்ட உணவில்
தான் நான் உயிர் வளர்த்தேன்
உன் இதழ் சிந்திய வார்த்தையை
உச்சரித்துத் தான் மொழி பழகினேன்
உன் சுவாசத்தில் கலந்த காற்றை
சுவாசித்து தான் வாழ்ந்திருக்கேன்
முதல் நடந்திடும் நான்
விழுந்தது உன் மடியில்
முதல் மொழியினை நான்
உணர்ந்தது உன் இதழில்
முதல் கலங்கிடும் விழிகளை
துடைத்தது உன் உடையில்
முதல் சிரிப்பினை பழகியது
உன் முகத்தில்
கண்ணாடிப் பார்க்கும் வரை
என் அத்தனை முகங்களும் நீயே
உன் முன்னாடி இருப்பதை விட
வேறு இன்பமில்லை தாயே
என் நிர்வானத்தை முதலில்
களைத்த நீயே
நீல வானத்தையும் காட்டி
வளர்த்தாய் தாயே
மூச்சு விடும் இடைவெளியிலும்
உன் அன்பு எனை
விட்டு விலகியதில்லை
நீ காட்டி வளர்த்த
ஒவ்வொரு பொருளும்
இனி வேறெங்கும் காண்பதற்கில்லை
கையெடுத்து நீ கும்பிடச்
சொன்ன தெய்வமோ
எனக்கு தலை சீவிவிட்டதில்லை
நானும் பொய்யுரைத்தப் பொழுதும்
கூட நீ எனை அடித்ததில்லையே
குளிப்பாட்டி விடும் உன் கைகளில்
அடி வாங்கஅடம் பிடிப்பேன்
உன்னிடம் அடி வாங்காமல்
உன்னன்பின் ஆழம் புரிவதில்லை
என்பேன்
கிறுக்கித் தான் அம்மா
உன் கைகளை பிடித்து
எழுத துவங்கினேன்
அன்பை சுருக்கி வாழும்
இதயங்களின் நடுவே
உறவுகளை பெருக்கி வாழும்
உன்னுடைய நேசத்தில் நெகிழ்ந்தேன்
அணுஅணுவாய் என் வளர்ச்சியை
ரசிப்பாய் ஒரு கைப்பிடி சோறு
குறைந்தாலும் உள்ளம் துடிப்பாய்
என்றைக்கும் உன் சேலை நுனி தான்
என்னுடைய கை குட்டை
உன் முகமே நான் முகம் பார்த்து
தலை சீவும் கண்ணாடி
உன் வாயில் புத்திசாலி என்று கேட்பதை
விட முட்டாள் என்று செல்லமாக கேட்பதையே
நான் விரும்புகிறேன் தாயே
சட்டை பையில் கை விடும் பொழுதெல்லாம்
எனக்கு தெரியாமல் நீ
வைத்த ஒரு ரூபா தலை நீட்டும்
அந்த சுகம் இன்று எந்த
ஆயிரம் லட்சங்களிலும் கிடைப்பதில்லை
உன் விரல் நுனியின் சுவையை
எந்த நட்சத்திர ஹோட்டலிலும்
உணர்ந்ததில்லை
உன் மடியின் சுகத்தை எந்த
பஞ்சு மெத்தையும் தந்ததில்லை ......... அம்மா!
சத்தியமாய் உன்னைப் போல் ஒரு பிரிவை
இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை




அம்மா !உன் நினைவுகள்





உன் நினைவுகள் படாத
ஒரு பொருளை வீட்டில்
என்னால் காட்ட முடியாது அம்மா!
நீ கட்டிய சேலை
என் தலையணையாக மாறியது.
நீ என் கையைப் பிடித்து
கற்றுத் தந்த மொழிகள்
இன்று கவிதைப் படைக்கிறது
நீ முதன்முதலில் வாங்கிய
உப்புக்கான டப்பாவைப் பார்க்கையில்
உன் கைகளின் சுவை
இன்றும் நாவில் நிற்கிறது
நீ சொல்லித் தந்தபடி
நான் விதைத்த கத்திரி
இன்று நம் வீட்டுக் குழம்பில்
கமகமக்கிறது.
இப்படி வீட்டில்
நீ கட்டிய பந்தலில்
வளர்ந்த அவரக்காய்,மல்லிப் பூ.
வளருமா? என்று நினைத்த வாழைமரம்
என எல்லாவற்றையும் நம்
வீட்டிற்கு வருபவர்களிடம்
நான் காட்டுகிறேன்.

உன் அம்மா எங்கே? என்பவர்களிடம்
இதோ என் அம்மாவென்று
உன் புகைப்படத்தைக்
காட்டவைத்துச் சென்று விட்டாயே!
அம்மா !

15 comments:

  1. nnabre enn sollvnathu endru theriyavillai ennnku............
    kanil neer thabukirathu ivolavu anbinai sumatha nnum varthen endru ....
    enn kayil ulla romangal netti nikirathu unnnai etti paratttta
    உன் மடியின் சுகத்தை எந்த
    பஞ்சு மெத்தையும் தந்ததில்லை ......... அம்மா!
    சத்தியமாய் உன்னை போல் ஒரு பிரிவை
    இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை
    ithu arputhamana varigal............

    nnabre ungalai parathha thondra vilai ennku annnal perumai padukren ungal thayai ninathu
    aval mattum ithai padithiruthal uchi mugarthirpal ungalai
    ungal padapukuu ninar illlai

    varagal ungal apdaipuga
    solla manthil thorenallum varthaigal kidakavillai ungali potra

    nna mattum arasiya iiruthal ungall kavithaiku enn rajiyathiye parisaga thathirupen


    migai pathuthavillai ...... pattaithai sonenn

    ReplyDelete
  2. Thanks for ur Valuable comment sathya

    ReplyDelete
  3. Thanks for ur Valuable comment sathya

    ReplyDelete
  4. ஆயிரம் வாழ்த்துக்கள் ராஜாவிற்கு, அருமையான வரிகள், மிக பக்குவமான வார்த்தை தேர்வு, அருமை மிக அருமை. வாழ்த்துகளை தெரிவிக்கவும். தாயின் பிரிவை
    அப்துல் கலாம் அவார்களின் கவிதைஈல் படித்து ஞாபகம் வருகின்றது " என் அன்னையே நாம் மீண்டும் சந்திப்போம் அந்த நியாஎ தீர்ப்பு நாளில்" அதன் பிறகு கலைஞரின் கவிதையல் " நிழல் கண்ணாடி முன் நான் நிற்கின்றேன் உன் பொஇக்கை வாய் சிரிப்பாஎ அதில் தெரிகின்றது" , அதன் பிறகு மிகவும் மனதில் நின்றஅது இந்த வரி
    உன் மடியின் சுகத்தை எந்த
    பஞ்சு மெத்தையும் தந்ததில்லை ......... அம்மா!
    சத்தியமாய் உன்னைப் போல் ஒரு பிரிவை
    இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை

    ReplyDelete
  5. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...
    மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த கவிதை உங்களால் கவனிக்கப்பட்டிருக்கிறது

    ReplyDelete
  6. தற்பொழுதே கண்டேன், நான் உங்களின் நெருங்கிய உறவு, என்னை தெரியுமா

    ReplyDelete
  7. நெருங்கிய உறவு தான் நன்பரே...
    தாயின் கவிதையினால் உண்மையில் நீங்கள் நெருக்கமாகிவிட்டீர்கள்...
    இதில் கண்டுபிடிக்க என்ன இருக்கிறது
    ஒரே உணர்வு கொண்டவர்கள் நெருக்கமானவர்களாகத் தான் இருக்க முடியும்.அந்த வகையில் நீங்கள் நெருக்கமானவர் தான். இருப்பினும் உறவினர் என்று சொல்கிறீர்கள். இது வரை என் உறவினர்கள் யாரும் என் கவிதையைப் படித்ததில்லை. அதனால் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம்.இருந்தும் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  8. #ஒரே உணர்வு கொண்டவர்கள் நெருக்கமானவர்களாகத் தான் இருக்க முடியும்.அந்த வகையில் நீங்கள் நெருக்கமானவர் தான்#

    கொஞ்சம் என்னையும் சேர்த்துக்கோங்களேன்...:)

    ReplyDelete
  9. நிச்சயம் நண்பரே...
    நா முத்துக்குமார் ஆனந்த விகடனில் அணிலாடும் முன்றில் என்ற தொடரை எழுதுகையில் அம்மாவைப் பற்றியதான அவர் பதிவில் ஒன்று எழுதியிருப்பார்
    அம்மா என்றால் அம்மா தான் அது என்ன உன் அம்மா, என் அம்மா ...?

    ReplyDelete
  10. தாயை இழந்தவர்கள் கண்டிப்பாய் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும் உங்கள் வரிகளைப் படித்து. நீண்ட நேர கண்ணீருக்குப் பின்னரும், இதையும் எழுத முடியாமல்.. தாயின் நினைவுகளைக் கண்ணீரில் கரைத்து...என்ன சொல்ல..?

    அம்மா என்றால் அம்மா தான் அது என்ன உன் அம்மா, என் அம்மா ...?

    ReplyDelete
  11. @sumayha

    ”நீண்ட நேர கண்ணீருக்குப் பின்னரும், இதையும் எழுத முடியாமல்.. தாயின் நினைவுகளைக் கண்ணீரில் கரைத்து...என்ன சொல்ல..?”
    இதற்கு மேல் என்ன சொல்ல...
    "அம்மா என்றால் அம்மா தான் அது என்ன உன் அம்மா, என் அம்மா ...?"
    உண்மை தான்.
    அணிலாடும் முன்றில் தொடரில் அம்மாவை பற்றி நா. முத்துக்குமார் எழுதிய ஆழகான வரிகள்.

    ReplyDelete
  12. நல்ல கவிதை. கவிதை நடை மிகவும் பிடித்து இருக்கிறது. //*நீ கட்டிய சேலை
    என் தலையணையாக மாறியது*//

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே...

      Delete
  13. கண்ணீர் என் கணினி திரையை மறைக்கிறது.. இழப்பின் வேதனை என்னால் உணர முடிகிறது.. எல்லா உறவுகளுக்கும் ஈடு உண்டு.. ஈடு இல்ல உறவு அன்னை தான்!!
    தொண்டையில் பந்து போல் ஏதோ என்னை அடைக்கிறது உங்கள் வரிகளை படிக்கும் போது.. அது வெறும் வரிகள் அல்ல உங்களின் உணர்வுகள், அம்மா மீதான அன்பின் வெளிபாடு, வேறு என்ன சொல்ல???
    அம்மாவின் சிறு பிரிவை கூட நான் தங்கியதில்லை.. உங்களுக்கு மன உறுதியை அந்த ஆண்டவன் கொடுக்க வேண்டும் ..
    நட்புடன் ,, சமீரா

    ReplyDelete
  14. புரிகிறது. இந்த பதிவு உங்களை எந்தளவு பாதித்திருக்கிறது என்று...

    நிச்சயம் உங்களைப் போன்றவர்களின் நட்பு தான் எனக்கு மனவுறுதியைத் தருகிறது.

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts