2.07.2012

இதயத்தை பாதிப்பதில்…


ஒவ்வொரு முறை அலைப்பேசி
அழைக்கும் பொழுதும்  உன்
குரலை எண்ணியே செவியில்
வைக்கிறேன்  ஏமாற்றம் தான்.

யாரேனும் என்னிடம்
அலைபேசியில்  பேசும் பொழுது
கூட  ஒருவேளை
இந்த நொடி நீ என் அலை பேசிக்கு
தொடர்பு கொள்ள முயற்சித்தால்
என்று உன்னையே நினைத்து
வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறேன்
அவர்கள் சிக்கிரம் வைக்க வேண்டும்
என்று வேண்டிக் கொண்டே
அலைப் பேசியை எங்கேனும்
வைத்துவிட்டு செல்லக் கூட
பயமாக இருக்கிறது
குளிக்கும் பொழுதும்,இன்னும்
சில வேளைகளிலும் உன் அழைப்பு
வநது விடக் கூடாது என்று
வேண்டிக்கொள்கிறேன்
வேறு யாரேனும் எடுத்து விட்டால்…?
இருப்பினும் அப்படி ஒரு முறையும்
நிகழவில்லை.ஒவ்வொரு நொடியும்
இப்படி என்னை அலைபேசி நோக்கியே
சிந்திக்க வைத்த உன்
அந்த முதல் அலைப்பேசி அழைப்பு நிகழாமலே
இருந்திருக்கலாம்  என்னசெய்வது
நிகழ்ந்து விட்ட அந்த அழைப்பை
நோக்கியே மனம் மீண்டும் மீண்டும்
நிகழாதா? என்று நிகழாத அழைப்பிற்காக  துடிக்கிறது
என் துடிப்பு உனக்கும் புரியவில்லை
இந்த அலைபேசிக்கும் புரியவில்லை
உன் குரலைத் தவிர மற்ற
எல்லோர் குரலையும்
என் காதில் ஒலிக்கச் செய்கிறது
இதைத் தூக்கி எரிந்து விடவும் மனசில்லை
உன் நினைவுகளைப் போல
இரண்டையும் சுமக்கிறேன்
என்நெஞ்சிற்கு அருகில் வைத்து
இரண்டிற்கும் இதயத்தை
பாதிக்கும்  சக்தி அதிகமாம்!
என்றாவது ஒரு நாள் உன் குரல்
ஒலிக்கும் பொழுது தெரியும்
எதற்கு சக்தி அதிகம் என்று…?
இதயத்தை பாதிப்பதில்



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

9 comments:

  1. உண்மைதாங்க சில நேரங்களில் நாம் அலைபேசியை காதலிக்கிறோம் போல அருமைங்க .

    ReplyDelete
  2. @sasikala

    சில நேரங்கள் என்பது பல நேரங்களாக மாறி எப்பொழுதும் என்றளவு வந்துவிடும் போல் இருக்கிறது.

    ReplyDelete
  3. //உன் நினைவுகளைப் போல…
    இரண்டையும் சுமக்கிறேன்
    என்நெஞ்சிற்கு அருகில் வைத்து
    இரண்டிற்கும் இதயத்தை
    பாதிக்கும் சக்தி அதிகமாம்!
    என்றாவது ஒரு நாள் உன் குரல்
    ஒலிக்கும் பொழுது தெரியும்
    எதற்கு சக்தி அதிகம் என்று…?
    இதயத்தை பாதிப்பதில்…//
    மனதை கனக்க வைத்த வரிகள்.அருமை சகோதரா.
    சின்னச் சின்னதாய் நினைவுகள்.

    ReplyDelete
  4. @சித்தாரா மகேஷ்.
    உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete
  5. Replies
    1. பாத்து நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றிகள். மேலும் என் படைப்புக்களை படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்

      Delete
  6. காதலன் இதயத்தை பாதி்ப்பதில் காதலியின் குரலும்,
    காதல் கொண்டவனிடம் பேசியவர்களின் இதயத்தை பாதிக்க,
    இக்கவிதையில் வரிகளும் போதும்............. அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. அலைப்பேசியின் மின்காந்த அலைகளையும்,காதல் பேச்சின் உயிர் காந்த அலைகளையும் ஓப்பீடு செய்துப் பார்த்ததில் உருவானது இக்கவிதை.
      உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தமிழ்ச்செல்வி அவர்களே...

      Delete
  7. உங்கள் பாராட்டிற்கு நன்றி. தொடர்ந்து உங்களைப் போன்றவர்களின் ஆதரவை என் படைப்புக்கும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts