இந்தப் பதிவை சென்ற வாரமே எழுத நினைத்து எழுத
முடியாமல் போய்விட்டது. இருப்பினும் இது என் மனதிற்குள் உறுத்திக் கொண்டே
இருந்ததால் உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
கனவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...? என்ன நினைப்பது, அது தான் கனவாயிற்றே...
இருப்பினும் சில நிகழ்வுகள் கனவின்
பிரதிபலிப்பாக வாழ்வில் நடக்கும் பொழுதும், நிகழ்ந்தவைகள் சில வாழ்வின் நகலாக கனவில் தோன்றும்
பொழுதும், கனவு எதிர்க்காலத்தின்
ஒரு குறியீடோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த பொருளை எடுத்துக் கொண்டு தான் அன்று
நீயா நானாவில் விவாதித்தனர்.
இதில் ஒரு சாரார், கனவில் வந்த பல நிகழ்வுகள், தம் வாழ்விலும் நிகழ்ந்திருக்கிறது
என்று விவாதித்தனர். ஒரு சாரார் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று எதிர்விவாதம்
செய்தனர். கனவைப் பற்றிய ஆழமானப் பார்வை ஓரளவு அந்த விவாதத்தில் தென்ப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி
பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது மட்டுமின்றி மனதை வலிக்கச் செய்தது.
தன் கணவர் இறந்துப் போய்விடுவது போல் ஒரு கனவு வந்தது என்றும் அது நடந்து சில
நாட்களில் என் கணவர் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார் எனவும் சொன்னார். இது
உண்மையில் வருத்தத்திற்குரிய விஷயம் தான். ஆனால் அந்தப் பெண்மணி சொன்னதற்கு எதிராக
ஒருவர் பேசினார். அவர் ஒரு மனநல ஆய்வாளர். இதுப் போல் எல்லோருக்குமே வரும், அதற்குக் காரணம் அன்பின் மிகுதி. ஒரு முறை நான் இறந்துப் போவதுப் போல் கூடத் தான் கனவு
கண்டிருக்கிறேன், நிகழ்ந்துவிட்டதா...? என்று விவாதித்தார்.
யாருக்காவது விமானத்தில்
பயணிக்கும் பொழுது விபத்து நடப்பதுப் போல் கனவு வந்திருக்கிறதா ? என்று ஒரு கேள்வியை முன்
வைத்தார். யாரும் பதிலளிக்கவில்லை. அவரே பதிலளித்தார். ஏனெனில் அந்த அனுபவம்
உங்களுக்கு நிகழவில்லை. அது உங்களின் ஆழ்மனதில் பதியவில்லை.எனவே தான் கனவாக அது
வரவில்லை என்று விளக்கமளித்தார். மேலும் கனவு உடலில் ஏற்படும் ஒரு வேதியல் மாற்றம்
தான் என்றும், அது
மனதில் பதிந்த நினைவுகளின் வெளிப்பாடே என்றும் தன் கருத்தை முன் வைத்தார். இதை
அவர் சொன்னவிதம் தான் எல்லோரையும் கொஞ்சம் முகம் சுளிக்க வைத்தது. ஏனெனில் அவர்
பேசிய விதம்,” தான்
சொல்வது மட்டும் தான் சரியானது என்றும், அது மட்டுமே சரியான பார்வை” “ என்றும் அமைந்திருந்தது. இவரின்
விவாதத்திற்கு எதிர்விவாதம் அங்கு யாரும் செய்யவில்லை. அந்த நிகழ்ச்சியின்
தொகுப்பாளர் கோபியும் அவரின் விவாதத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. சற்று நேரம்
பொறுத்து ஒருவர் அந்த மனவியல் நிபுணரை தன் வாதத்தால் வாயடைக்க வைத்துவிட்டார்.
உண்மைவில் கனவைப் பற்றி 4000
வருடங்களாக ஆராய்ச்சி நடந்துக் கொண்டு தானிருக்கிறது. வெறும் புத்தகங்களையும், உலகில் நடக்கும் நிகழ்வுகளையும்
செய்தியாக கேட்டுவிட்டு மட்டுமே கனவைப் பற்றிய ஒரு ஆராய்ச்சியில் நாம்
முடிவெடுத்துவிட முடியாது. கனவு எனபது சில நேரங்களில் நாம் காணாத நிகழ்வுகளையும், மனித சலனங்களையும் நமக்குள்
கொண்டுவருவது உண்டு. இல்லையேல் இந்த அறிவியல் கண்டுப்பிடிப்புகளும், கருவிகளும் சாத்தியமில்லை.
இதெல்லாம இருக்கட்டும் கனவைப்
பற்றி இணையத்தில் எதாவது கிடைக்கிறதா என்று தேடினேன். நிறைய கருத்துக்களும், கட்டுரைகளும், விவாதங்களும் குவிந்துக்
கிடக்கிறது. அதைப் பற்றி இன்றும் நிறைய ஆராய்ச்சிகள் நிகழ்ந்துக் கொண்டுத்
தானிருக்கிறது. அதைப் படித்துப் புரிந்துக் கொள்வது கனவில் கூட
சாத்தியமில்லைத் தான். உபநிடதங்கள், , சிந்து மெசபடோமியா, என்று அதன் காலம் பின்னோக்கி சென்றுக் கொண்டே
இருக்கிறது.இந்த அனைத்திலும் நான் புரிந்துக் கொண்ட ஒன்று. மனிதர்கள்
காலத்திற்கேற்றபடி கனவின் பரிமாணத்தையும், அதன் உட்கருத்தையும், புதுபித்துக் கொண்டே வந்திருக்கின்றனர். ஆம் தங்கள்
வாழ்வின் சிக்கல்களையும், கேள்விகளையும்,அதனூடே அடுத்த தலைமுறைக்கு அதை கடத்தியபடியே
வந்திருக்கின்றனர். இது புரியாமல் நாமும் அந்த சிக்கல்களையும், கேள்விகளையும் அவிழ்க்காமல் அதையே
பின்பற்றிக் கொண்டு வந்திருக்கிறோம். அந்த நிகழ்வில் ஒருவர் கனவைப் பற்றி அருமையாக
ஒரு கருத்தை முன் வைத்தார். கனவு ஒரு மொழி. ஆங்கிலம்,தமிழ் போன்று கனவும் ஒரு மொழி.
இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து
கனவை அணுகினால் நமக்கு நிறைய விடைகள் கிடைக்கும். எந்த ஒரு மொழியும் காலந்தோறும்
நிறைய மாற்றங்களை சந்தித்து வருவதைப் போல், கனவுகளும் உண்மையில் மாற்றத்தை சந்தித்த வண்ணம் தானிருக்கிறது.
அந்தப் பெண்மணிக்கு தன் கணவர்
விபத்தில் சிக்கி உயிரழப்பது போல் கனவு வந்ததாம். அது போலவே அந்த பெண்மணியின் கணவரும் விபத்தில் சிக்கி
உயிரழந்திருக்கிறார். அதே மேடையில் இன்னொரு பெண்மணிக்கு அவரது தாலிப் பறிப்போவது
போலவும், அதை அம்மன் தாங்கிப்
பிடித்து காபாற்றுவது போலவும் கனவு வந்ததாகச் சொன்னார். அடுத்த நாள் அவரது கணவர்
வரப்பு வெளியில் இரவில் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது கருநாகப் பாம்பிடம்
இருந்து தப்பி இருக்கிறார் என்றும் சொன்னார்.
இந்த இரண்டையும் கேட்கும் பொழுது
நமக்கு இது என்ன மூடத்தனம் என்றுக் கூட சொல்லத் தோன்றும். உண்மையில் இது
சிந்திக்கக் கூடிய ஒரு முக்கியமான விஷயம். இந்த இரண்டுப் பெண்களுமே கணவனைப் பற்றிய
ஒரு அச்சத்தில் எப்பொழுதுமே இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. இந்தப் பயம்
அவர்களின் தனிப்பட்ட பயமில்லை. இது சமூகம் ஏற்படுத்திய பயம். இந்த நெருக்கடியான
நகரப் போக்குவரத்துகள் மத்தியில் வாழும் ஒரு பெண், தன் கணவனுக்கு அந்த போக்குவரத்து சூழலால் ஆபத்து ஏதேனும்
வந்துவிடுமோ என்ற பயம் வருவது இயல்பு. இந்தப் பயம் அநேகமாக நகரத்தில் வசிக்கும் பல
பெண்களுக்கு இருக்கிறது. காரணம் சரியான போக்குவரத்து விதிகள் சமூகத்தில் இல்லாதது
தான்.இது சமூகம் உருவாக்கிய பயம். அதேப் போல் வயல்வெளிகளில் சுற்றும் கணவனுக்கு
அங்கிருக்கும் பாம்புகளால் எதெனும் ஆபத்து வந்துவிடுமோ என்று ஒரு கிராமத்துப் பெண்
யோசிப்பதில் தவறில்லை. இதுவும் சமூகம் ஏற்படுத்திய பயம் தான்.
இந்தப் பயம் மனைவிகளுக்கு
மட்டுமில்லை. கணவனுக்கும். ஏன் பள்ளிச் செல்லும் குழந்தைக்குக் கூட தேர்வுகளை
நினைத்து பல பயமூட்டும் கனவுகள் வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஏனெனில் நம் கல்வி
முறை அந்த அளவு மாணவர்களை பயமூட்டுவதாக இருந்து வருகிறது.
ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ வெளியில்
சொல்ல முடியாத ஆசைகள் கனவாக வெளிப்படுகிறது. ஏனெனில் நம் சமூகம் வெளிப்படையாக
இல்லை எனபதை இது காட்டுகிறது.
இதன் மூலம் உலகில் 4000 வருடமாக
கனவு பற்றிய ஆராய்ச்சி நடந்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு நல்ல சமூகம் இன்னும்
கனவாக மட்டுமே இங்கே இருந்து வருகிறது என்பதைத் தான் நமக்குச் சொல்வதாக நான்
நினைக்கிறேன். ஒரு நல்ல சமூகத்தில் கனவு என்பது கனவாகத் தானிருக்கும் என்பது என்
நினைவில் உதித்தது. கனவின்றி ஆழமான உறக்கத்தை நோக்கிய பயணமே ஒரு நல்ல
சமூகத்திற்கான தேடல்.அந்த தேடல் நிறைவடையும் தருணத்தில் அங்கு எல்லாம்
நிகழ்ந்திருக்கும். எனவே அங்கே கனவுக்கு வேலையிருக்காது.
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை! ஆனால், கணவுகள் பற்றிய நிறைய புதுப் பரிமானங்களைத் தங்கள் பதிவு மூலம் தெரிந்துகொள்ல முடிந்தது! நன்றி!
ReplyDeleteஇந்தப் பதிவு இத்துடன் முடிவடைவதல்ல, கனவுகள் இருக்கும் வரை இதை யாரெனும் தொடர்ந்தபடியே இருப்பார்கள்
Deleteநானும் பார்த்தேன்...
ReplyDeleteநல்ல அலசல்...
நனவாக்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன...
படுத்தவுடனே நிம்மதியாக யார் தூங்குகிறார்களோ, (கனவு இல்லாமல்) அவர்கள் தாங்க உலகத்திலே மிகப்பெரிய செல்வந்தர்... (முடியுமா...?)
நன்றி... (TM 2)
சரியாய் சொன்னீர் நண்பரே..
Deleteஎனக்குத் தெரிந்து பிறந்த குழந்தைகள் மட்டும் தான் அப்படி இருக்கிறது என்று நினைக்கிறேன். இருப்பினும் சில நாட்களிலேயே அதற்கும் கனவு தோன்றிவிடுகிறது
Deleteஒரு தாயுக்கும் குழந்தைக்கும் இடையிலும், கணவன் மனைவிக்கிடையிலும், காதலன் காதலிக்கிடையிலும், நெருக்கமான இருநண்பர்களுக்கிடையிலும் ஆழ்மன தொடர்புண்டு...அவ்வண்ணமே அந்த பெண்மணிகளின் கனவும்...அவர்களின் பயம் கலந்த எண்ணங்கள் ஆழ்மதிற்கு கட்டளையாக செல்ல வாய்ப்புள்ளது. இப்படி என் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்தது. அது என்னவென்றால் என் தாயார் கருவுற்றிருக்கும் போது...என் சித்தியின் மேல் அவர்கள் பாட்டி வந்ததாகவும்...என் தாயார் வயிற்றில் அவர்கள் பிறக்கப்போவதாகவும் வந்து சொன்னார்களாம்...நீங்கள் தான் பிறக்கப்போகிறீர்கள் என்பதற்கு என்ன சாட்சி என்று கேட்ட போது நடை உடை பாவனைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று சொன்னார்களாம்... இது கனவில்லை என்ற போதிலும்...அம்மா அதை குறித்து பயந்துக்கொண்டே இருந்ததாக கூறினார்கள்....ஏனென்றால் அந்த பாட்டியால் நடக்க முடியாதாம்... அவர்கள் ஆசிரியராய் பணியாற்றிக்கொண்டிருந்தாராம்...குழந்தை பிறந்ததும் குழந்தை நன்றாக இருப்பதை கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்... சில மாதங்களில் போலியாவால் நடக்க முடியாமல் போனதும்...பாட்டியே பிறந்துவிட்டார்கள் என்ற முடிவிற்கே வந்துவிட்டார்கள். எங்கள் குடும்பத்து பெரியவர்கள் இருந்தவரை எனக்கு பெரிய மரியாதை உண்டு... என் தாத்தா இறக்கும் வரை என்னை அம்மா என்றே அழைத்தார் என் அப்பா என் மேல் அதிகமான பிரியத்தோடு இருந்தார். அவ்வப்போது இந்த கதை எனக்கு சொல்லப்பட்ட போது...சற்று வியப்பும் ஏற்படும்...அம்மாவின் கனவில் அடிக்கடி வரும் அவளின் பாட்டி நான் பிறந்த பிறகு வரவே இல்லை என்று வேறு அம்மா சொல்வாள். அம்மாவை பொறுத்தவரை நான் அவள் பாட்டியின் மறு பிறப்பு...எனக்கு தான் இது விளங்காத வியப்பு...
ReplyDeleteஎன்னை மன்னிக்கவும்
ReplyDeleteஉங்கள் கட்டுரை முழுமை இல்லாமல் உள்ளது. ஒருசில நல்ல தகவல் உள்ளன அனால் கட்டுரை முடிவு திருப்தியாக இல்லை