:
நான் சென்ற கட்டுரையில் எழுதியதை ஒரு
நண்பர் படித்துவிட்டு என்னிடம் பேசினார். நான் எழுதியதில் தவறு இருக்கிறது என்று முறையிட்டார்.
உண்மையில் மகாபாரதத்தில் கண்ணன் அர்சுனனுக்கு பகவத் கீதையை உரைப்பது போல் காட்சி இல்லை.
அந்தப் போர்க்களத்தில் அந்த உரையாடல் அவசியம் அற்றது என்றும் ஒரு கருத்து இருப்பதாகச்
சொன்னார்.
கண்ணன்
அர்சுனனுக்கு உரைப்பது போல் உருவான உரையாடல் பிறகு சேர்க்கப்பட்டது எனவும் கூறினார்.
மகாபாரதம் வியாசர் முனிவர் மூலம் வாய் வழியே பல நூற்றாண்டுகளாக மக்களிடம் பரவியிருந்தது
எனவும், பிறகு அது எழுத்து வடிவம்
பெற்றப் பொழுது பல கதைகள் அதில் சேர்க்கப் பட்டன என்றும் கூறினார். அவ்வழியே கீத
உபசாரமும் சேர்ந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் என்ற தகவலைச்
சொன்னார். இதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகனின் இந்திய ஞான
மரபில் என்ற நூலில் இதை நான் படித்திருக்கிறேன்.இருப்பினும் மகாபாரதம் இன்றும் ஒரு
கேள்விக் குறியாகவே நிறைய ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்து வருகிறது.
எப்படியிருப்பினும்
சென்ற கட்டுரையில் வியாசர் எழுதியதாக நான் பதிவிடவில்லை. வியாச முனியினால் தான் அந்த
காட்சியமைப்பு நமக்குக் கிடைத்தது என்று தான் பதிந்தேன். அதன் பிறகு இன்னொரு நண்பர்
அதைப் பற்றி ஒரு அருமையான விளக்கமளித்தார்.
குருசேத்திரத்தில்
கண்ணன் அர்சுனனுக்கு கீதஉபதேசம் செய்ய எங்கே நேரமிருந்தது என்ற கேளிவிகளை நிறைய ஆராய்ச்சியாளர்கள்
முன் வைக்க்கிறார்கள். எனவே இது இடைசெறுகல் தான் என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
யுத்தக்
களத்தில் குவிந்துக் கிடக்கும் போர்வீரர்கள் முன்னிலையில் இப்படி ஒரு உபதேசம்
சாத்தியமா...?
ஓஷோ அதற்கு
விடையளிப்பதாக சமீபத்தில் பழக்கமான ஒரு பதிவ நண்பர் தான் சொன்னார். நம்முடைய அளவுகோளை
வைத்து காலத்தைப் பார்ப்போமென்றால் அது சாத்தியமில்லை தான். காலத்தின் பிரம்மாண்டமான
வெளியில் இது ஒரு கனவு காண்பது போல் தான். ஒரு நொடியில் நம் மனதினால் ஓராயிரம் ஆண்டுகள்
வாழ்ந்து விட முடியும். அந்த சக்தி நம் மனதிற்கு இருக்கிறது. அந்தக் கோணத்தில்
தான் கண்ணனுக்கும் அர்சுனனுக்கும் இடையிலான விவாதத்தை நாம் பார்க்க வேண்டும். என்று
சொன்னார்.
எனக்கு உண்மையில் பிரமிப்பாக இருந்தது.காலவெளியின்
நிகழ்வில் நாம் சிறு துகள் போல் கூட இல்லை. எனவே அந்தக் கோணத்தை நம் மனம்
பார்ப்பதே மிகப் பெரிய விஷயம் தான். இந்தக் கோணத்தில் மகாபாரதத்தில் ஒரு காட்சியில்
ஒரு உரையாடலை நிகழ்த்திய கலைஞன் உண்மையில் எப்படிப்பட்டவன்... இது மனவியலின் ஆழ்ந்த
பதிவு, அறிவியலின் முதல் பதிவு
எனவே தான் இது காலத்தை வென்று நிற்கிறது.
இந்தக்
கோட்பாடு தான் என்ஸ்டீனின் சார்பு நிலைக் கொள்கையாக மாறியிருக்கிறது. காலம், இடம், வெளி இவற்றை சார்புப் படுத்தி உருவாக்கிய
என்ஸ்டீனின் கொள்கை தான் இன்று விஞ்ஞான உலகில் மிகப் பெரிய சலனத்தை ஏற்படுத்திக்
கொண்டிருக்கிறது. ஒருவன் தனக்கு விருப்பமான செயலை செய்யும் பொழுது காலம் அவனை வெகு
சீக்கிரத்தில் கடந்து செல்கிறது. விருப்பமில்லாமல் செய்யும் எந்த செயலிலும் காலம்
அவனுக்கும் மிக சுமையாகி நகர மறுக்கிறது.
நீங்களும்
கவனித்திருக்கலாம். நமக்கு விருப்பமான ஒரு நபருடன் நேரத்தை செலவிடும் பொழுது நேரம்
செல்வதே நமக்கு தெரிவதில்லை. இதே விருப்பமில்லாத ஒருவருடன் ஒரு நிமிடம் கூட ஒரு
யுகம் மாதிரி நமக்குத் தோன்றும். இந்தக் கோட்பாட்டை வைத்து அன்றே கீதையை
அமைத்திருப்பது இன்றும் நம்மை வியக்க வைக்கிறது. அப்படியெனில் அவர்களின் விஞ்ஞான
அறிவும் மெஞ்ஞான அறிவும் ஒரேப் புள்ளியில் அன்று பயணித்திருக்கிறது எனபதை நாம்
இதன் மூலம் அறியலாம்
இன்றோ மெஞ்ஞானமும்
விஞ்ஞானமும் எதிரும் புதிருமாக இருக்கிறது. இருவருமே பொருளாதாரத்தை மையாக வைத்தே பயணிக்கின்றனர்.
இது நல்ல சமூகத்திற்கான அடித் தளமல்ல என்பதை அன்றைய மகாபாரதத்தின் மண் ஆசை நமக்குச்
சொன்னாலும், நாம்
அதை இன்றும் புரிந்துக் கொள்ளாமல் மண்ணுக்காக அடித்துக் கொள்வது எத்தனை அறிவீனம்.
இதில் இது நவீன யுகம் என்று வேறு பெருமைக் கொள்கிறோம்...
தொடரும்....
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
விரிவான விளக்கம்...
ReplyDelete/// நல்ல சமூகத்திற்கான அடித் தளமல்ல என்பதை அன்றைய மகாபாரதத்தின் மண் ஆசை நமக்குச் சொன்னாலும், நாம் அதை இன்றும் புரிந்துக் கொள்ளாமல் மண்ணுக்காக அடித்துக் கொள்வது எத்தனை அறிவீனம். ///
சிறப்பான கருத்து... நன்றி... வாழ்த்துக்கள்... (TM 2)
இந்த சிறப்பை இந்த சமூகம் உணர்ந்தால் நிறைய நன்மைகள் நடக்கும்
ReplyDelete