• 8.16.2012

  அன்பின் வெளிப்பாடு

   
  நீ சொன்ன பொய்யான 
  வார்த்தைகளின்
  மத்தியில் தான்
  எனது காதலின் இருத்தல்
  நிகழ்ந்தது என்று நான்
  நினைக்கவே இல்லை.
  னது பொய்கள்
  உனக்கான அன்பின் 
  வெளிப்பாடு....!

  சிலப் பொருட்கள்
  சிலப் பரிசுகள்
  சில உறுதிமொழிகள்
  சில ஆச்சர்யங்கள்
  சில உண்மைகளும்
  என அன்பின் வெளிபாடு
  பலவிதங்கள்
  அதில் உனக்கு தெரிந்த
  ன்பின் வெளிப்பாடு
  பொய்கள்
  உனது பொய்களின் மூலம்
  என்னால் உணர முடிகிறது
  னது அன்பை...
  ஏன் உன்னால் மட்டும்
  உணர முடியவில்லை
  எனது உண்மைகளை
  ன்பின் வெளிப்பாடாக....  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே