• 9.28.2012

  இயற்கையின் மாற்றமும் அமைதியும் (ஆராய்ச்சி 1)               நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவது போல் ஒரு உணர்வு. எழுத்துக்கு என்றுமே நான் அடிமை. எழுதுவது என்றுமே எனக்கு பிடித்த விசயம். அதற்கு இந்த நொடி வாசகர்களாகிய  நீங்கள் உதவியாக இருக்கிறீர்கள்.எழுதுவதை யாரேனும் படிக்க வேண்டுமே...
               தூக்கம், இன்று நிறைய பேர்கள் அலட்சியம் செய்யும் ஒரு விசயமாக ஆகி விட்டது. இயற்கையிலிருந்து தான் நாம் ஒவ்வொரு நாளும் ஆற்றலை எடுத்துக் கொண்டு உயிர் வளர்க்கிறோம், நினைத்தபடி இயங்குகிறோம். இயற்கை தான் நமக்கு வாய் வழியே உணவாகவும்,நாசி வழியே சுவாசமாகவும்,கண்கள் வழியே காட்சியாகவும், செவி வழியே சத்தமாகவும், உடல் வழியே தொடுதலாகவும் சக்தியை தருகிறது. ஆனால் உணவு வழி மட்டுமே நாம் சக்தியை பெறுவதாக பலர் நினைக்கிறார்கள்.மீதி நான்கையும் விட்டு விடுகின்றனர்.எனவே தான் இன்றைய சமூகம் ஆரோக்கியமற்ற சமூகமாக வளர்ந்து வருகிறது. இயற்கையின் மற்ற சக்தியை நாம் பெறுவதில்லை.பெறுவதற்கான அறிவும் நம்மிடையே இல்லை. இயற்கையின் விதியை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள். பகல் முழுவதும் ஒளியை பாதி உலகிற்கு கொடுக்கிறது. மரங்கள் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாம் (ஆக்ஸீசனை) பிராண வாயுவை சுவாசிக்கிறது கரிமில வாயுவை வெளியிடுகிறது. மரங்கள் பிராணவாயுவை வெளியிடுகிறது, கரிமில வாயுவை உள்ளிழுக்கிறது. இதே நேரத்தில் பாதி உலகில் இரவாக இருக்கும். அங்கே இதற்கு அப்படியே எதிர்மறையாக நிகழும். பூமியின் சுழற்சி முறையை பாருங்கள். ஒரு பக்கம் இரவாக இருக்கும் பொழுது அங்கிருக்கும் ஆற்றலை இன்னொரு பக்கம் பகலாக இருக்கும் பகுதிக்கு பகிர்ந்து அளிக்கிறது. எனவே தான் எல்லா உயிரினங்களுக்கும் (குறிப்பிட்ட உயிரினங்கள் தவிர எல்லாவற்றிற்கும்) இரவில் ஆற்றல் கிடைப்பதில்லை. முக்கியமாக பிராண வாயு கிடைப்பதில்லை. எனவே தான் உறக்கம் வருகிறது. இது போன நூற்றாண்டு வரை சரியாகத் தான் நடந்துக் கொண்டு வந்தது. எப்பொழுது எடிசன் மின் விளக்கை கண்டுபிடித்தாரோ அன்றிலிருந்து தான் மனித கலாசாரத்தின் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. ஒட்டு மொத்த உலகின் வாழ்க்கைமுறையே மாறி விட்டது. நான் எடிசனையும் இயற்கையின் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன், சில மாற்றங்களை ஒரு குறிப்பிட்ட சூழலில் இயற்கை நடத்த நினைக்கிறது, அது எடிசன் என்ற மனிதனால் நிகழ்ந்தது. 
     பெரிய தீர்க தரிசிகள்,ஞானிகள் சொன்னது போல் 20தாம் நூற்றாண்டில் உலகம் அழியும் என்று சொன்னதை இயற்கையின் அசரிரீயாகத்தான் நான் பார்க்கிறேன். மனிதர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இயற்கையே...
       இதை இயந்திரங்கள் மிகுந்த, இந்த நவீன வாழிவில் யாரும் புரிந்து கொள்வதில்லை. எனவே தான் மின் விளக்கை நாம் மிகவும் கொண்டாடுகிறோம். அதன் பின் வந்த கண்டுபிடிப்புகளெல்லாம் அதை ஒட்டியே உருவானவை.
              இரவில் நம்மை தூங்க விடாமல் செய்ய இந்த கண்டுபிடிப்புகள் உதவுகிறது. ஒரு பக்கம் இரவாக இருக்கும் பொழுது அங்கு ஒரு உயிரினம் தூங்கவில்லை என்றாலும், இன்னொரு பகுதியில் பகலாக இருக்கும் வேளையில் ஒரு உயிரினம் சரியாக இயங்க முடியாமல் பாதிக்கப்படும். காரணம் இயற்கையின் சுழற்சி முறையில் குளறுபடி நடப்பதால், ஆற்றல் சரியாக பகிர்ந்தளிக்கப் படாததால் இரு உயிரினமும் பாதிக்கப்படும். நீங்கள் தூங்கும் பொழுது, உங்களின் ஆற்றல் வேறு ஒரு உயிருக்கு சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. oruநீங்கள்  ஒரு இரவு தூங்கவில்லை யென்றாலும், இயறகையில் எவ்வளவு பெரிய சலனம் நிகழ்கிறது தெரியுமா?
  வேறு ஒருவர் பகலில் தேவையான ஆற்றலின்றி  இயங்க முடியாமல் தவிப்பார். இரவில் நீங்களும் போதிய சக்தியின்றி அரைகுறையாக இயங்குவீர்கள். இருவருக்கும் நிம்மதியற்ற சூழல் உருவாகும். நன்றாக யோசித்து பாருங்கள் பகலில் ஒரு வேளை உங்களுக்கு தூக்கம் வந்து தூங்குகிறீர்கள், அப்பொழுது இரவில் இருக்கும் இன்னொருவரின் தூக்கம் உங்களால் கெடும். விழிப்பும் உறக்கமும் சரியாக இன்று உலகில் நிகழாததால் தான் யாருக்குமே வாழ்க்கை நிம்மதியின்றி நகர்கிறது. ஆரோகியமற்ற ஒரு சமூகம் நம்மையறியாமலே உருவாகிறது. இன்று இரவில் வேலை செய்யும் கலாசாரம் பெருகி வருவதால் இந்த ஆரோகியமற்ற சூழல் மேலும் வளர்கிறது. சமூகமே நிம்மதியற்ற சமூகமாக மாறி வருகிறது. சரியான முறையில் இயற்கையின் விதியை நாம் பயன்படுத்தாததால், நம்மை நாமே படுகுழியில் தள்ளிக் கொள்கிறோம். இயற்கை நம்மை வைத்து அழகாக திரைகதையில் எந்த பிசிறும் இல்லாமல் ஒரு படத்தை இயக்கிக் கொண்டு தான் இருக்கிறது.
           அதை ரசிகனாக பார்க்கும் கலைஞர்களுக்கே அதன் திரைக்கதை புரிகிறது. அப்படியும் சில இடங்களில் இயற்கை திரைக்கதையை மாற்றி சுவாரசியத்தை அதிகப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.
           இந்த நியதி மக்களுக்கு புரியும் வரை வாழ்க்கையில் நிம்மதியின்றி தான் தவிக்க வேண்டி வரும். தவறிருப்பின் திருத்தவும்.
  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே