• 9.25.2012

  இயற்கையின் மெல்லிய அசைவுகளில்
  கண்களை மூட கடினப்பட்டு
  சோர்ந்திருந்த வேளையில்
  உதடுகள் திறப்பதே
  அரிதாகிவிட்ட நொடிகளில்
  செவிகள் மட்டும் எதையோ
  கேட்கத் துடிக்கும்
  வார்த்தைகள் செய்யும் யுத்தம்
  நெஞ்சில் வலியாகத் தோன்றும்
  சில சொற்களின் கூர்மை
  மனதை காயப்படுத்தி  
  விட்டுச்செல்லும்
  விட்டு விட்டுத் துடிக்கும் இதயம்
  கூட விட்டு விடவா…?
  என்று கேட்பதைப்
  போல தோன்றும்
  சுவாசத்தை இழக்கத்
  துணிந்திடும் மனமோ
  வாசத்தை ரசிக்க மறுக்கும்
  புரியாத மெளனங்கள்
  நெஞ்சத்தை இறுக்கும்
  உணராத வலிகளும்
  வேதனை செய்யும்
  என்னென்னவோ 
  ஏதேதோ நினைவுகளின்
  சுமைகளால் அழுந்திய
  உள்ளம் உளறலாமல்
  உள்ளுக்குள் குமுறும்
  சுதந்திரமாய் சுற்றித் திரிந்த 
  எண்ணப் பறவை
  வண்ணமிழந்து சிறகொடிந்து
  மன வாசல் முன் கிடக்கும்
  பரவசக் காற்று உதிர ஓட்டத்தினுள்
  எங்கோ தொலையும்
  சட்டென நொடிகளில் மறையும்
  அத்தனை அழுத்தங்களும்
  இயற்கையின் மெல்லிய அசைவுகளில்


   


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே