• 10.06.2012

  வலைப்பதிவர்களும் நாங்களும் கலாட்டா 2 (சினிமாக்காரர்கள்)


  ரொம்ப நாளா இந்த புலம்பலை நான் கேட்டுட்டு வரேன். அது என்ன புலம்பலுன்னு உங்களுக்கும் இந்த பதிவு மூலம் விளக்கவே இந்த முயற்சி...
  இது சினிமாக்காரர்களின் புலம்பல்…  புதிதாக ஒரு திரைப்படம் எடுக்க திட்டமிடும் திரைப்பட இயக்குனரும், அவருடன் இரண்டு உதவி இயக்குனர்களும்….

  திரைப்படஇயக்குனர் : இப்பல்லாம் நம்ம மக்களுக்கு ரசனையே இல்லை. நல்லப் படம் எதுவும் ஓட மாட்டேங்குது.
  உதவி இயக்குனர்-1 : ஆமாம் சார், இந்த வருசத்துல மட்டும் 140க்கும் மேல படம் வந்திருக்கு, அதுல ஆறே படம் மட்டும் தான் லாபமாம்…
  இயக்குனர் சற்று நேரம் சிந்திக்கிறார்.
  இயக்குனர் மைண்ட் வாய்ஸ் (மை.வா) : இவனுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரியுது. அடுத்து படம் பண்ணிடுவானோ…
  உதவி இயக்குனர் – 1 : என்ன சார் சைலண்ட்டாயிட்டீங்க…? அதுக்காகவெல்லாம் நாம படம் பண்ணாம இருக்க முடியாது இல்ல சார்…
  சொல்லிவிட்டு
  உதவி இயக்குனர் – 1 (மை.வா) : எப்படியும் புரொடுயூஸர் தலையில துண்டைப் போடணும்ல்ல…
  இயக்குனர் அருகில் மெளனமாக அமர்ந்திருக்கும் உதவி இயக்குனர்-2 வைப் பார்க்கிறார்.
  இயக்குனர் (மை.வா) : இவன் மட்டும் ஏன் மெளனமா இருக்கான். வேற எங்கையாவது ஆல்ரெடி கதைச் சொல்லி அட்வான்ஸ் வாங்கிட்டானோ…?
  இயக்குனர் அவனைப் பார்த்து
  இயக்குனர் : டேய் நீ மட்டும் ஏண்டா அமைதியா இருக்க…, நேத்துல இருந்து ஒரு நல்லக் கதையா சொல்றான்னா, இடிச்ச வச்ச புள்ளையார் மாதிரி இருக்க…
  உ.இயக்குனர் -2  இயக்குனரை  ஒருப் பார்வைப் பார்க்கிறார்.
  இயக்குனர் பார்வையாலேயே என்ன என்று கேட்கிறார்.
  உ.இயக்குனர் -2 : சார் எப்படியும் எந்தக் கதையைச் சொன்னாலும், எதாவது ஒரு டிவிடியை பார்த்துத் தான் எடுக்கப் போறோம். பின்ன எதுக்கு சார்…?
  இயக்குனர் (மை.வா) : சே…! ஒருப் படத்துக்கு மேலே ஒரே அசிஸ்டண்டை வச்சிக்கிறது ரொம்பத் தப்பு போல இருக்குதே… நம்ம சீக்ரட்லாம் தெரிஞ்சிடுது.
  உதவி இயக்குனரைப் பார்த்து  “ சரி, மண்டையைப் பிய்ச்சிக்கறதை விட்டுட்டு நேத்து பர்மா பஜார்ல்ல இருந்து வாங்கிட்டு வந்த டிவிடில ஒன்னை எடுத்துப் போடு… எதாவது புது நாட் கிடைக்குதான்னுப் பார்ப்போம்.

  உதவி இயக்குனர் -1(மை.வா) : அதெப்படி டிவிடில இருந்து எடுக்கறதை புது நாட்டுன்னு சொல்றாரோ…
  இயக்குனர் உதவி இயக்குனர் -1 பார்த்து
  இயக்குனர் : டேய் நீ என்ன நினைக்கறன்னு எனக்குத் தெரியும்டா…? என்ன எப்பப் பாத்தாலும் இவன் இப்படி டிவிடியைப் பாத்தே படம் எடுக்கிறானேன்னு தானே யோசிக்கறே…
  உதவி இயக்குனர் -1 அசடு வழிய சிரித்து இல்லை என்ற உடல் மொழியை ( body language ) காட்ட முயற்சிக்கிறார்.
  இயக்குனர் : டேய் … டேய் என்கிட்டவே வா… நடிக்கறவங்களுக்கு பாடி லேங்க்வேஸ் எப்படி இருக்கணும்னு சொல்லித் தர எனக்கே வாடா…
  உதவி இயக்குனர் -2 இடையே புகுந்து
  இல்லை சார் இப்பல்லாம் ஜனங்க ரொம்ப ஸார்ப்பா இருக்காங்க, எல்லாம் நம்மளப் போலவே உலக சினிமாவை பிரிச்சி மேய்றாங்க..
  அது மட்டுமில்லாம இப்ப புதுசா பிளாக்கர்ஸ் வேற நம்மள காட்டிக் கொடுக்க கிளம்பியிருக்காங்க...
  இயக்குனர் : பிளாக்கர்ஸா… ? கேள்விப்பட்ட மாதிரி இருக்கே…
  உ.இயக்குனர் -1 : சார் நம்மப் போனப் படம் எடுக்கறப்ப நெட்ல தேட்னோமே, அப்ப ஒரு கொரியன் சினிமாவைப் பத்தி ஒரு இடத்துலப் படிச்சோம்ல… அதுக்குத் தான் பிளாக்ன்னு பேரு…
  இயக்குனர் : ஆமாம் பேசாம இந்தப் படத்துக்கும் அது மாதிரி ஒரு பிளாக்கைப் புடி…
  உ.இயக்குனர்-2 :  சார் நீங்க வேற, ஏற்கனவே அவங்க ஒரு புது படம் விடாம ரீலிஸ் ஆன அடுத்த நொடியே, நெட்ல விமர்சனம் எழுதி, எந்த உலகச் சினிமாவுல சுட்டது, படத்துல என்னத் தேறும் தேறாதுன்னு சகட்டு மேனிக்கு எழுதிடறாங்க…
  உ.இயக்குனர் -1 : ஆமாம் சார் இப்பல்லாம் தியேட்டர்ல கூட்டமில்லாமப் போறதுக்கு இவங்க(வலைப்பதிவர்கள்) தான் சார் முதல் காரணம். படம் வெளியானதும் அதைப் பத்தி எழுதிபுடறாங்களா… அதைப் படிக்கிற யாரும் தியேட்டர் பக்கமே வர மாட்டன்றாங்க…
  இயக்குனர் : அவனுங்களுக்கு வேற வேலையேக் கிடையாதா, தப்புக் கண்டுப்பிடிக்கறது தான் வேலையா…?
  உ.இயக்குனர் -2 : ஆமாம் சார் எந்தப் படத்துல எந்த ஷாட்டைத் திருடியிருக்கறாங்கன்னு கரெக்டா எழுதி அவங்க பிளாக் ஹிட்ஸை ஏத்திக்கறாங்க…
  இயக்குனர் : அப்ப நாம படம் எப்படி எடுக்கறது…?
  உ.இயக்குனர் -1 : ஒரு வழி இருக்கு சார்,பிரபலமான பிளாக்கர்ஸை எல்லாம் பிடிச்சு ஒரு அமொண்ட்டை பிரஸ்க்குக் கொடுக்கற மாதிரி கொடுத்து படத்தைப் பத்தி டக்கரா எழுதச் சொல்ல வைக்கலாம்.
  இயக்குனர் : என்னங்க படத்தை எடுக்கவே தாவு தீந்துப் போது, இதுல அவனுக்கு இவனுக்கு, டிவிக்கு,பிரஸ்க்குன்னு இல்லாம, இப்ப புதுசா பிளாக்கர்ஸ்க்கு வேற கொடுக்கணுமா…?
  உ.இயக்குனர் -2 : சார் அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார். இருக்கற திருட்டு டி.வி.டி பிரச்சினைல, நம்ம படம் எடுக்கறதே பெரிய விஷயம், இதுல காப்பியடிக்கற படத்துக்காக காப்பிரைட்ஸ்லாம் வாங்குன்னா, எப்படி கட்டுப்படியாகும். திருட்டு டி.வி.டில படம் பாக்குறத நம்ம மக்கள் விடுறாங்களா…? முதல்ல அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாம அப்புறம் நிறுத்தலாம்
  என்று ஆவேசமாகப் பேச
  இயக்குனர் : சரி இப்ப இதுக்கு என்ன தான் வழி…?
  உ.இயக்குனர் -1 : இருக்கு சார். நம்மளச் சுத்தி இருக்குற எல்லா சினிமாக்காரங்களுக்கும் ஒரு பிளாக் ஓபன் பண்றோம். தயாரிப்பாளரிலிருந்து, லைட் மேன், மேக்கப் மேன் ஒருத்தனை விடாம பிடிச்சி ஒரு பிளாக்கை ஓபன் பண்றோம். நமக்கு நாமே விமர்சனம் எழுதி அதுக்கு ஓட்டையும் நமக்கு நாமேப் போட்டுக்குறோம். எப்படி…?
  இயக்குனர் (மை.வா) : விட்டா இவங்க டைரக்டர் ஆயுடுவாங்கப் போல இருக்குறதே…
  இயக்குனர் (மை.வா) : சரி நடத்துங்க…இப்ப கிளம்பலாம். பேட்டா காசு நாளைக்கு வாங்கிக்குங்க…
  என்றதும், உதவி இயக்குனர்கள் இருவரின் முகமும் மாறுகிறது.
  உ.இயக்குனர் இருவரின் மைண்ட் வாய்ஸ் :இவர்க்கிட்டப் போய் பேட்டாக் கேட்டோம்  நம்மள நாமே பாட்டா செருப்பாலத் தான் அடிச்சிக்கினும்.
  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே