• 10.09.2012

  கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (5)  காற்றின் தூண்டுதலால்
  அசைந்துக் கொண்டிருந்த
  அந்த ஆலமரத்தடியில்
  சையாமல் வெகு நேரமாய்
  மெளனமாய் நின்றிருந்த
  உன்னை கண் இமைக்காமல்
  பார்த்துக் கொண்டிருந்தேன் நான்…
  எனது பார்வையை ரசித்துக்
  கொண்டிருந்த நீ திடீரென
  என்னிடம்
  ன்னை ஏன் காதலிக்கிறாய்…?
  என்றாள்
  யோசிக்காமல்…
  உன் கேள்விக்குப் பதில்
  சொல்லத் தான் என்றேன்
  இதைக் கேட்டதும் நீ
  ன் இமைகளை அகல விரித்து
  என்னைப் பார்த்தாய்
  என்ன என் கேள்விக்குப்
  பதில் சொல்லவா…?
  என்று கேட்டாய்
  ஆமாம் என்றேன்
  ன்ன? என் கேள்விக்குப்
  பதில் சொல்ல…?
  என்று மீண்டும் கேட்டாய்
  மீண்டும் நான் இதோ
  நீ கேள்வி கேட்டாய்
  அல்லவா …
  தற்கு பதில் சொல்லத் தான்
  என்றென்…
  உன் முகத்தில் கோபத்தின்
  சாயல் கொஞ்சம் எட்டிப் பார்த்தது
  நீ மீண்டும் சத்தமாக
  நான் கேட்டது என்ன..? என்றாய்
  என்னை ஏன் காதலிக்கிறாய்
  என்று தானே கேட்டாய்…
  நீ இப்படி கேள்வி கேட்கிறாய்
  அல்லவா அதற்குப் பதில்
  சொல்லத் தான் உன்னைக் காதலிக்கிறேன்
  என்றேன்.
  அந்நேரம்
  பெரு  மூச்சு விட்டபடி
  பல்லைக் கடித்துக் கொண்டு
  நீ என்னைப் பார்த்த அழகு
  இருக்கிறதே…
  ப்பா கம்பன் இறந்துவிட்டதாகச்
  சொல்கிறார்கள்.
  காதல் இருக்கும் வரை
  கம்பன் மறிப்பதில்லை
  என்று மனதுக்குள் நினைத்துக்
  கொண்டேன்.
  நீயோ கையை என் கண்ணருகே
  கொண்டு வந்து
  ப்ப என் கேள்விக்குப் பதில்
  சொல்லத் தான் நீ என்னைக்
  காதலிக்கிறாயா…?
  ஏன் என் கேள்விக்கு
  வேறு யாரும் பதில் சொல்ல
  முடியாதா…?
  என்றாய்
  நான் சிரித்தபடி
  ன் என்னைக் காதலிக்கிறாய்
  என்ற கேள்வியை நீ
  என்னைத் தவர வேறு
  யாரிடமும் கேட்க முடியாது
  என்று நான் நினைக்கிறேன்
  எனவே தான் உன்னைக்
  காதலிக்கிறேன்
  என்றதும்
  பல்லைக் கடித்தபடி
  ன் தலையில் வலது கையால்
  நீயே குட்டியபடி
  நான் சொன்ன பதிலைப்
  புரிந்துக் கொண்டதற்கு
  அர்த்தமாக லேசாகப்
  புன்னைகைத்தாய்
  ஆமாம்ல்ல உன் கிட்டத்
  தான் இதைக் கேட்க முடியும்
  என்று சொல்லி என்னருகில்
  வந்து என் தோளில் தலைவைத்து
  சாய்ந்து என் விரல்களில்
  உனது விரல்களை கோர்த்து
  சரி எதற்காக என்னைக்
  காதலிக்கிறாய் என்று மீண்டும்
  ஆரம்பித்தாய்
  நான் என்னச் சொல்வது
  உன்னிடம் பதிலைத் தெரிந்து
  கொள்வதற்கு தான் காதலிக்கிறேன்
  என்றேன்.
  மண்டையை பிய்த்துக் கொள்ளும்
  நிலையில் எனது தோளில்
  இருந்த உனது முகத்தை எடுத்து
  என்னைப் பார்த்தாய்
  எதையுமே புரியும்படி
  சொல்ல மாட்டாயா..?
  என்று கேட்பது போல்
  இருந்தது அந்தப் பார்வை…
  நான் தொடர்ந்தேன் உனது
  பதிலைத் தெரிந்துக் கொள்ளத்
  தான் உன்னைக் காதலிக்கிறேன்
  என்றேன் மீண்டும்.
  நீ கோபமாக
  என்ன பதில் …?
  என்றாய்
  ன் கேள்விக்குப் பதில்
  என்றதும்
  அப்பாடா என்பது போல்
  பாவமாக என்னைப் பார்த்தாய்
  உன் கேள்வி என்ன…?
  சொல்லு நான் பதில் சொல்கிறேன்
  என்றாய் சோர்வுடன்
  இல்லை அதை இப்பொழுது
  ன்னிடம் கேட்க முடியாது
  என்றதும்
  நீ
  கோபத்தின் உச்சிக்கே சென்றாய்
  உனது முகத்தைப் பார்க்கப்
  பாவமாகத் தான் இருக்கிறது
  சரி நான் கேட்கிறேன்
  உன்னால் பதில் சொல்ல
  முடிந்தால் சொல்லு
  என்று மீண்டும் நிறுத்தினேன்
  ன் முன்னே இரண்டு கையையும்
  கூப்பி தயவு செய்து கேள்
  என்பது போல் பாவனை செய்தாய்
  சரி கேட்கிறேன்
  ப்பொழுது எனக்கு முத்தம்
  தரப் போகிறாய்
  என்று சட்டெனக் கேட்டேன்
  அப்பொழுது உன் முகத்தில்
  வீசிய ஜில்லென்ற காற்றுக்
  கூட உன் அனல் கக்கும்
  பார்வையால் விலகி ஓடிக்
  கொண்டிருந்தது.
  ஆலமரமே பயந்து ஓடத்
  துணிந்த பின் நான் மட்டும்
  எப்படி உன் முன்னே
  நிற்பது…?
  நீயோ என்னை கைக் காட்டி
  வேண்டாம் நில்லு
  என்று அதட்டினாய்
  நானோ ஓட்டம்
  பிடித்தேன்…
  நீயும் என்னை விடுவதாக
  இல்லை
  என்னைப் பின் தொடர்ந்தாய்
  நான் ஆலமரத்தை சுற்ற
  நீயும் சுற்ற
  அன்று மட்டும்
  லமரம் நம்முடைய
  ஒவ்வொரு சுற்றையும்
  எண்ண ஆரம்பித்து
  கலைத்திருக்கும்

     வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே