12.11.2012

தமிழக மீனவர்களின் இரக்கமிக்க துணிகரச் செயல் (பகிர்வு)



படத்தில் - மீனவர் மணிகண்டன் மீனை தூக்கிச் செல்கிறார்

         

 என்னுடைய வலைத்தளத்தில் என்னைப் பாதித்த செய்திகளை மட்டும் எப்பொழுதெனும் நான் பகிர்வதுண்டு. தற்பொழுது என்னை மிகவும் நெகிழ வைத்த செய்தியை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
          
      மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.

            
நேற்று வியாழன் அன்று சென்னை மெரீனா கடற்கரையில் அரிய வகை டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. மிகமும் ஆழமில்லாத கடற்பகுதியில் இந்த பாலூட்டி வகையை சேர்ந்த மீன் சிக்கிக் கொண்டதால், அதனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இந்த மீனை முதலில் குப்பன் என்ற மீனவர் தான் அடையாளம் கண்டார். கடல் சீற்றம் அதிமாக இருந்ததால் இந்த மீனால் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியவில்லை. இந்த மீனின் வாயில் ரத்தம் கசிந்து வந்ததாக குப்பன் சொல்கிறார்.
      இந்த மீனை காப்பாற்ற வழக்கம் போல் தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகளோ , அல்லது மீன் வளத் துறை அதிகாரிகளோ வரவில்லை. மாறாக அயோத்தி குப்பத்தில் உள்ள ஐந்து மீனவர்கள் இதை காப்பாற்ற முடிவெடுத்தனர். ஐந்து முறை இம்மீனை கடலில் ஆழப் பகுதியில் விட்டுவிட முயற்சித்தும் இம்மீன் மீண்டும் கரை ஒதுங்கியது. அதனால் வேறு வழி இன்றி ஒரு அபாயகரமான முடிவை எடுத்தனர் இந்த ஐந்து மீனவர்கள். ஆம் , கடல் சீற்றத்தையும் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய படகில் இம்மீனை ஏற்றிக் கொண்டு கடலின் ஆழப் பகுதிக்கு துணிந்து சென்று இம்மீனை விட்டு விட்டு வந்தனர் . ஆழமான பகுதியை கண்டதும் இந்த டால்பின் மீன் கடலுக்குள் துள்ளிக் குதித்து சென்று மறைந்தது .
       
மீன்களை உணவிற்காக, வாழ்வாதாரத்திற்கு பிடிக்கும் மீனவர்கள் கூட இந்த அறிய வகை பாலூட்டிகளை கொல்லக் கூடாது என்று தங்கள் உயிரையும் பணயம் வைத்து இந்த மீனை காப்பாற்றி உள்ளனர். இது மிகவும் பாராட்டுக் குரிய செயல். டென்மார்க் ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட இந்த பாலூட்டி மீன்களுக்கு இறக்கம் காட்டுவதில்லை . மிகவும் அறிவு கூர்மையான இந்த மீனை அதிக அளவில் வேட்டை ஆடி வருகின்றனர் . ஆனால் தமிழக மீனவர்களோ இந்த மீனின் தன்மை அறிந்து அதனை காப்பற்றி உள்ளனர் . தமிழ் மீனவர்களுக்கு நம் வாழ்த்துகளை பகிருவோம்.

முகநூலில் பகிரப்பட்ட செய்தி.

நட்புடன் 
தமிழ்ராஜா





6 comments:

  1. சபாஷ்! நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய செயல். சற்றே ஆச்சர்யமானதும் கூட!

    ReplyDelete
    Replies
    1. ஆம் பாராட்டும் மட்டுமல்ல பெருமைப்பட வேண்டிய செய்தியும் கூட அது மட்டுமின்றி நாமும் பின்பற்ற வேண்டிய ஒரு விஷயத்தை சொல்கிறது இந்த செய்தி.

      Delete
  2. மீன்களை உணவிற்காக, வாழ்வாதாரத்திற்கு பிடிக்கும் மீனவர்கள் கூட இந்த அறிய வகை பாலூட்டிகளை கொல்லக் கூடாது என்று தங்கள் உயிரையும் பணயம் வைத்து இந்த மீனை காப்பாற்றி உள்ளனர்.

    நிச்சயம் பாராட்டுக்குரிய செயலே. மனிதம் செத்துப்போகவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆம் மனிதம் செத்துப் போகவில்லை என்பதையும் தமிழன் தான் இன்றும் செயல் மூலம் காட்டுகிறான்.

      Delete
  3. வாவ்!! எவ்ளோ பெரிய செய்தி இது!!! கண்டிப்பாக அவர்களின் துணிச்சல் இரக்கம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று!!
    கிடைத்ததெல்லாம் காசாக்கும் இந்த காலத்திலும் இப்படி ஆட்கள் இருப்பது அதிசயம் தான்...
    பகிர்விற்கு நன்றி ராஜா!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சமீரா. நீங்களும் இதை பகிரவும்

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts