12.28.2012

நம் வரிப் பணம் நமக்கல்ல நாட்டிற்காவது …?



    என்ன இது நம் வரிப் பணம் நமக்கல்ல நாட்டிற்காவது பயன்படுகிறதா...? ஆமாம், நாம் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம் அந்த வரிப் பணத்தில் தான் நம் அரசாங்கம் நடக்கிறது. இது அனைவரும் அறிந்த ஒன்றே…

      அது மட்டுமின்றி அரசாங்கம் நடத்த வெளியிலிருந்தும் ஏகப்பட்ட கடன் வாங்கி நம்மையும் இந்த அரசாங்கம் கடன்காரர்களாகத் தான் இன்று வைத்திருக்கிறது. அப்படியிருக்க இந்த பணம் எப்படி செலவாகிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். அதிர்ச்சியாக உள்ளது. தேவையான இடத்தை விட்டு தேவையில்லாத இடங்களில் இது செலவாவது நம்மை ஏமாற்றும் வேலை தானே…
       ன்று நம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனி விமானத்தில் சென்னை வந்து இறங்கியுள்ளார். எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்காக தமிழகம் வந்துள்ளார். இது அரசாங்க நிகழ்ச்சியா..? இல்லை தனிப்பட்ட ஒரு பல்கலை கழக நிகழ்ச்சியா…? ஏனெனில் இந்த பயணத்திற்கான செலவுகள் நம் அரசாங்க கணக்கில் சேருமா…? இல்லை அவரை அழைத்திருக்கும் பல்கலைக் கழக கணக்கில் சேருமா..? ஏனெனில் இதற்கு முன் இருந்த ஜனாதிபதியின் 5 ஆண்டு செலவு கணக்கு 230 கோடியை தாண்டியிருப்பதாக சொல்கிறார்கள்.
       இப்பொழுது அடுத்து வருவோம். எல்லோருமே அறிந்த ஒன்று தான். இப்பொழுது சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட கசாப்பிற்கு ஆன செலவுகள்.
     தற்பொழுது டெல்லியில் நிகழ்ந்த கொடூர செயலுக்குப் பின் அதை எதிர்க் கொள்ள அரசாங்கம் செலவு செய்யும் நிதி. இதெல்லாம் உண்மையில் சரியானது தானா…? காவல் துறையினர் சரியாக செயல்பட்டிருந்தால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்குமா…?
       இது காவல் துறைக்கு மட்டுமல்ல, அந்தப் பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் பொருந்தும். இந்தியாவில் அந்தப் பெண்ணிற்கு சிகிச்சையளிக்கக் கூடிய வசதியில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்தப் பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இது எத்தனை வெட்கக் கேடான செயல்.
       அப்படியெனில் இந்தியாவில் இன்றும் மக்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை, நவீன சிகிச்சையில்லை, குற்றவாளிகளை தடுக்கும் சட்டங்களும் இல்லை, மாணவர்களுக்கு சரியான கல்வியும் இல்லை.
       அப்படியெனில் என்னத் தான் இருக்கிறது இந்தியாவில்…?
        எதையும் கண்டுக் கொள்ளாத மக்கள். அவர்களிடம் ஓட்டை வாங்கிக் கொண்டு, தன் பிள்ளைகளை வெளி நாட்டில் படிக்க வைப்பது. தனக்கு எதெனும் உடல் உபாதைகள் வந்தால் வெளிநாட்டிற்கு ஓடுவது. தாங்கள் வெளியில் சென்றால் மட்டும் பல அடுக்குப் பாதுகாப்பு உருவாக்கிக் கொள்வது. இப்படி மக்கள் சொத்தையெல்லாம் தனக்காக அனுபவிக்கும் அரசியல் சுயநலவாதிகள் பெருகிக் கிடக்கும் நாடு தான் இந்தியாவா…?
           மும்பையில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு பிறந்த ஒரு குழந்தை வினோத நோயால் அவதிப்படுகிறது. பிறந்தது முதல் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு வருகிறது. என்ன வைத்தியம் செய்தும் சரியாகவில்லை.அந்தக் குழந்தையைப் பெற்றவர்களும் பல மருத்துவமனைக்கு சென்றுப் பார்த்துவிட்டார்கள். பலனில்லை. இதற்கு மும்பை மருத்துவர்கள் சொல்லும் காரணம். அந்த குழந்தைக்கு பிற குழந்தைகளை விட சிறுகுடல் மிக சிறியதாக உள்ளது.அதை எவ்வாறு சரி செய்வது என்று யோசித்து வருவதாக சொல்கிறார்கள். இந்தியாவில் இதற்கு சிகிச்சை இருப்பதாக தெரியவில்லை, வெளிநாடுகளில் இருக்கிறது. செலவு செய்ய அந்த ஏழைக் குடும்பத்தால் முடியாது என்கிறார்க்ள்.(தினமலர் 26-12-2012 பக்கம் 13ஆம் வெளி வந்த செய்தி)
        ஏழையாக இருப்பதால் மருத்துவம் செய்ய முடியாமல் அந்த பெற்றவர்கள் திணறுகிறார்கள். உண்மையில் அவர்களுக்கெல்லாம் பயன்படுவதற்காகத் தான் நாம் வரிச் செலுத்துகிறோம்.ஆனால் நம்முடைய ஜனாதிபதிகளும், அரசியல் தலைவர்களும் நம்முடைய வரிப் பணத்தில் நன்றாக ஊரைச் சுத்திவிட்டு, கூட்டங்களுக்கும், விழாவிற்கும் சென்றுக் கொண்டு , எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். நம் இந்திய மக்களை வெளிநாட்டிற்கு செல்லத் தூண்டுகிறார்கள்.
        இந்த இந்தியாவில் நாம் பயன்பெற வேண்டுமென்றால், ஒன்று இவர்களைப் போல் அரசியல்வாதியாக ஆக வேண்டும் இல்லை. டெல்லியில் அந்தப் பெண்ணைப் போல் கொடூர செயலுக்கு ஆளாக வேண்டும். அதுவும் உலகம் முழுவதும் பரவும்படி நிகழ வேண்டும். இல்லையேல் இந்திய மண்ணில் பிறந்த சராசரி குடிமகன்களுக்கு அவர்களுடைய வரிப் பணம் எந்த வகையிலும் உதவாது. ஏனெனில் சிங்கப்பூரில் துடித்துக் கொண்டிருப்பதும் ஓர் உயிர் தான். மும்பையிலும் போராடிக் கொண்டிருப்பதும் ஓர் உயிர் தான்.
       
 

நட்புடன் 
தமிழ்ராஜா

7 comments:

  1. shared in facebook.

    ReplyDelete
  2. அருமையான பதிவு. தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  3. நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் ............என்ன செய்வது தனி மனிதன் உணர்ந்து முன் வர வேண்டும் ........அடுத்த வீட்டில் எரியும் தீ நம் வீட்டை பிடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று சிந்திக்காத மனிதர்களை என்ன செய்ய நண்பா வேதனைதான் மிஞ்சுது

    ReplyDelete
  4. என்ன நடக்கிறது என்று தெளிவாகச் சல்லி இருக்கிறீர்கள் ராஜா. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுங்களேன் ப்ளீஸ்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பல செய்திகளை விரிவாக சொன்னீங்க. ஆமாம் நாம் என்ன செய்ய இயலும் ?

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இந்த அரசியல் நரிகளை கண்டாலே கோபமாக வருகிறது. என் ஆதங்கமும் உங்கள் பதிவு போலதான்.. இன்று இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு மரணத்திற்கும் அரசாங்கம் ஒரு வகையில் காரணமே. ஒன்று பாதுகாப்பின்மை, மருத்துவ வசதியின்மை அல்லது மருத்துவத்துக்கு செலவழிக்க வசதியின்மை, பஞ்சம் இப்படி பலதரப்பட்ட காரணங்கள்..
    ஜனாதிபதிக்கு தலைவலி வந்தால் அபோல்லோ மருத்துவமனை, ஏழைகளுக்கு நெஞ்சு வலி வந்தாலும் தரமற்ற வசதியற்ற அரசு மருத்துவமனை. எந்த அரசியல்வாதியாது இதுவரை அரசுமருத்துவ மனையில் அனுமதிக்கபட்டதுண்டா???? இதற்கு தீர்வு??????

    ReplyDelete

  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts