• 1.30.2013

  விஸ்வரூபம் : நான் பார்த்த கதை
         தமிழகத்தில் இது வரை எந்தப் படத்திற்கும் இந்தளவு எதிர்ப்பு கிளம்பியது இல்லை. அது போன்று இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் சொல்ல வேண்டும். உலகம் முழுதும் வெளியாகி முதல் முறை தமிழகத்தில் தடை செய்யப்பட முதல் தமிழ்ப்படம் இதுவாகத் தான் இருக்கும்.அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகாவின் சில இடங்களில் விஸ்வரூபம் ஓடிக் கொண்டிருக்க, தமிழகத்தில் மட்டும் வெளியாகாதது மிகப் பெரிய ஏமாற்றம் தான்.

         இந்த ஏமாற்றத்தை பூர்த்தி செய்யும் வகையில் சில விளம்பரங்களை இணையத்தில் பார்த்ததில் எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் ஏற்பட்டது எனலாம். நேற்று பெங்களூரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நண்பர்களுடன் செல்ல வேண்டியிருந்தது. எனவே என் நண்பர்கள் முன்னரே பெங்களூரில் தேடிக் கண்டுபிடித்து ஒரு திரையரங்கில் விஸ்வரூபம் டிக்கெட்டை புக் செய்தார்கள். நேற்று முந்தைய நாள் ஞாயிற்றுக் கிழமை இணையத்தில் அமர்ந்து விஸ்வரூபம் பற்றிய செய்தியைப் பார்த்ததில் பெங்களூரில் நாங்கள் புக் செய்த திரையரங்கத்தில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. மேலும் பெங்களூரில் எங்கேனும் ஓடினால் புக் செய்துப் பார்த்துவிடலாம் என்ற நோக்கத்தில் இணையத்தில் தேடினோம். அப்பொழுது விஸ்வரூபம் ஸ்பெஷல் என்ற வாசகத்துடன் டிராவல்ஸ் கம்பெனி விளம்பரங்கள். என்னவென்று பார்த்தால் 2400 ரூபாய் கொடுத்தால் விஸ்வரூபம் படத்திற்கு கேரளாவிற்கு அழைத்துச் சென்று படத்தைக் காட்டித்திரும்பிக் கொண்டு வந்துவிட்டு விடுவார்களாம். அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இருப்பினும் எங்களுக்கு பெங்களூரில் எந்த திரையரங்கிலும் ஓடவில்லை என்று தான் செய்தி வந்தது. சரி என்ன செய்வது..? திருமண நிகழ்ச்சிக்கு கிளம்பினோம். மதியம் சில இடங்களில் விசாரித்தோம்.முக்கியமாக ஊர்வசி திரையரங்கத்தில் தான் விசாரித்தோம். ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் அந்த திரையரங்கத்தில் இந்தியாவில் எங்கிலும் இல்லாமல் (4k resolution) காட்சிகள் திரையிடப்படுகிறது. எனவே அந்த திரையரங்கத்தில் படம் பார்ப்பதே ஒரு புது அனுபவம். விஸ்வரூபத்தை பார்ப்பது பெரிய அனுப்வம் என்று நினைத்தோம். ஆனால் அந்த திரையரங்கத்தில் தெளிவாக சொல்லிவிட்டார்கள்.அது மட்டுமின்றி எந்த திரையரங்கிலும் ஓடவில்லை என்ற செய்தி தான் பெங்களூர் கமல் ரசிகர்கள் மூலம் எங்களுக்கு கிடைத்தது. பிறகு 4 மணியளவில் ஒரு திரையரங்கில் மட்டும் ஓடுவதாக செய்தி வந்தது. பின்பு அங்கு படையெடுத்தோம். அதிர்ஷ்டவசமாக எங்களுக்குப் பின் வந்த யாருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. 
            இதில் என்னப் பெரிய ஆச்சர்யம் என்றால் கமலுக்கு பெங்களூரில் இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்களா… என்று அங்கு நடந்த ஒரு போராட்டம் எங்களை சிந்திக்கத் தூண்டியது. காரணம் அங்கு சனிக்கிழமையன்று காலை மட்டும் ஊர்வசி திரையரங்கில் காட்சிப் போடப்பட்டு பிறகு நிறுத்தப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து கமல் ரசிகர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், அந்த திரையரங்கம் இருப்பது, இஸ்லாம் சமூகத்தினர் அதிகம் உள்ள பகுதி. அதில் கலந்துக் கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாம் சமூகத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அப்படியெனில் திரைப்படத்தை எதிர்ப்பவர்கள் யார்…? எப்படியோ எங்களுக்கு விஸ்வரூபம் காட்சிக்கான டிக்கெட் கிடைத்து, திரையரங்கிற்குள் சென்று படம் பார்த்துவிட்டோம். இருப்பினும் திரைப்படம் முடியும் வரை யாரெனும் வந்து படத்தை நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சம் இருந்துக் கொண்டே இருந்தது. காரணம் நேற்று பெங்களூரில் அந்த திரையரங்கத்தில் மட்டும் தான் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. இது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
  சரி இப்பொழுது விஸ்வரூபம் படத்தைப் பற்றிய விமர்சனம் இதோ…


  நட்புடன் 
  தமிழ்ராஜா