10.12.2007

சிரிக்க நினைத்தேன்


வார்தைகளை எப்படி மனதிலிருந்து
தோண்டி எடுப்பது என்று நினைவுகள்
அடிக்கடி சோர்கின்றப் பொழுது தான்
சொற்களில் இதமில்லாமல் கடுமை
வெளிப்படுவது கண்டேன்......................
முற்களில் இதயம் மாட்டியது போல்
வலி எங்கே என்று தேடித்
திரிகையில் தான் மேனி
முழுதும் சோர்வைக் கண்டேன்.........
கண்ணீர் சீந்தவும் மனதின்
நினைவுகள் தூண்ட வேண்டும்என்று
கண்கள் கசக்கப் போராடும்
பொழுது உணரக் கண்டேன்.............
உதடுகளில் மலர்ச்சியை காண்பிக்க
உள்ளத்தில் எத்தனை
அழ வேண்டும் என்பதை
துவண்ட இதயத்தின்
சோகத்தில் கண்டேன்

2 comments:

  1. வலியிலும் புன்னகையை வழிய விடுதல் அத்தனை சாத்தியமில்லை என்பதை அழகாய் உணர்த்தும் வரிகள் ..........வலி மிகுந்த வரிகள் பாரட்டுகள் நண்பா

    ReplyDelete
  2. அனுபவங்கள் வார்த்தைகளாகும் பொழுது, காலம் கடந்த பின்னும் அது கவனிக்கப்படும் என்பதை உங்களின் பாராட்டு நிரூபித்துவிட்டது.

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts