தலைவணங்குகிறது
கற்பூர தீபத்தைக் காட்டுகையில்
எல்லோரும் கை கூப்பித் தலைவணங்கினர்
என்ன அதிசயம்! அதுவோ!
உன்னைக் கண்டு
தலைவணங்குகிறது.........
அதற்கும் தெரிந்திருக்கிறது நீ
என்னுடைய தெய்வமென்று.......................
அனுமதிப்பதில்லை
கண்ணீரை என் தோட்டத்தில்
என்றுமே நான் அனுமதித்ததில்லை
ஏனோ அதனாலேயே பூக்களையும்
நான் அனுமதிப்பதில்லை
ஏனென்று கேட்கிறாயா?
தன்னை காட்டிலும் ஓர்
மென்மையான அழகா!என்று
உன்னை கண்டதும்
கண்ணீர் விடுகின்றது பூக்கள்
என்ன செய்ய.................
என்னைப் பார்த்து நீ......
துறவியென்றாய் என்னைப் பார்த்து நீ........
இல்லை! நான் துறவியைக் காட்டிலும்
மேன்மையானவன்
துறவியால் தன் உயிரின் உருவத்தை
காண இயலாது
அதைத் தேடியே தன் வாழ்நாளை
வீணடிப்பவன்
நானோ! அதை என்னருகிலேயே காண்கிறேன்
இதோ என்னுயிர் சிரிக்கிறது,
பேசுகிறது, அசைகிறது
அழகாக வெட்கப்படுகிறது
என்று உன்னை கைக் காட்ட
நீயோ! உன் இரண்டு கைகளாலும்
முகத்தை மூடியபடி
உனக்கு ஒரு கும்பிடு என்றாய் ......
என்னைப் பார்த்து
ஆ! என்னுயிருக்கு கும்பிடவும் தெரிந்திருக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இன்று தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த சந்திப்பு ஒரு பெரும் விழாவாகவே இனிதே நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந...
-
அடிக்கடி நீ தொட்டுப் பார்க்கும் அடி வயிற்றில் தான் நான் துடிக்கின்றேன் நொடிக் கொரு முறை என் சலனத்தை நீ ரசிப்பதை நானும் உணர்கின்றேன் ...
-
” கா ந்தி கணக்கு” தமிழ்நாட்டில் பெரும்பாலும் அபத்தமாகப் பிரபலமாகியுள்ளது. இந்த வார்த்தையின் தோற்றம் பற்றி இன்று காலை ஒரு தொலைக்காட்சி அ...
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்