12.30.2011

இது போதும்!


 முதன்முதலாய் நீ என் வீட்டிற்கு
வருகிறாய் என்றதும் — என்
வீட்டிற்குள் தான்
எத்தனை மாற்றங்கள்–உன்னால்
நிகழ்ந்தது தெரியுமா?

ஆனால் வீட்டினுள் நீ நுழைந்ததும்
உன் பார்வையில் அது
எந்த மாற்றத்தையும் செய்யவில்லை
என்பதில் ஏமாற்றம் தான் எனக்குள்
அந்த மாற்றத்தையும் நீ
கவனித்துவிட்டாய் நொடியில்…………..
என்னவென்ற உன் பார்வைக்கு
என்ன சொல்வது நான்……
நீ உள்ளே வந்ததும் தான்
வீடு பிரகாசமடைந்து
குறைகள் கண்ணுக்குத் தெரிகிறத்தென்றேன்
மின்னலாய் ஒரு ஒளி
உன் சிரிப்பில் வீடு மேலும்
பிரகாசமடைந்தது…………….
சிரிக்காதே ! எங்கள் வீட்டில்
இப்பொழுதுதான் புதிதாக
டீவீ வாங்கியிருக்கிறோம்
உன் சிரிப்பு மின்னலைஅது தாங்காது!
என்றேன்.
உன் முகம் அந்நொடி சிவந்ததில்
நடுவெயிலில் செவ்வானத்தை
பார்த்தேன் நான்…………….
எனை சுட்டெறிப்பது போல்
பார்த்தாய் நீ…………………..
வேண்டாம்! இது வாடகை வீடு
பற்றிக் கொள்ளப் போகிறத்தென்றேன்………….
கோபமாக ‘நான் என்னத் தான் செய்ய?’
என்றாய்……….
‘சமையல் செய்யேன்’ என்றதும்
‘ப்ளுக்’ கென்று உன்னையறியாமல்
மீண்டும் சிரித்தாய்………………
அய்யோ! சிரித்துவிட்டேன்
என்று பரிதாபமாக என்னைப் பார்த்தாய்
நிறுத்தாதே! ‘சீரி’ என்றேன்
உங்கள் வீட்டுப் புது டீவீ?
கிண்டலாய் கேட்டாய் நீ
உன் சிரிப்புக்காக எத்தனை
டீவீ யை வேண்டுமானாலும்
இழக்கலாமென்றேன்
உனதுவிழிகள் என்னை
நேருக்கு நேர் சந்திக்க முடியாமல்
நாலாப் பக்கமும் அலைந்தன………..
என்னப் பேசுவது என்றுப் புரியாமல்
உனது உதடுகள் துடித்தன
திடீரென பேச்சை மாற்ற
‘வெளியில் ஏதோ சத்தம் கேட்கிறது’
என்றாய்…….
உனக்காக நானும் வெளியில்
சென்றுப் பார்த்து விட்டு வந்தேன்
என்ன? என்ன சத்தம் யார் ?
என்றாய்
அண்டை வீட்டார் தான்
வீட்டிற்குள் எப்பொழுது
பூக்கள் வளர்க்க ஆரம்பித்தீர்கள்
என்று கேட்கிறார்கள்……….
ஏன்? ஏன் அப்படி கேட்கிறார்கள்
என்று ஒன்றும் அறியாதவள்
போல் அப்பாவியாய் கேட்டாய் நீ……..
எல்லாம் நீ வந்ததால் தானென்று
அவர்களிடம் எப்படி என்னால்
சொல்ல முடியுமென்றேன்
உன் முகத்தில் தான்
எவ்வளவு பிரகாசம்
நொடியில் எங்கள் விட்டுப்பூக்களையெல்லாம்
தலைகுனிய வைத்துவிட்டாய்
உன் நாணத்தால் எங்கள் வீட்டிற்கு
புது சாயம் பூசி விட்டாய்
மொத்தத்தில் எங்கள் வீடு
புதியதாகியது உன் வரவால்
இது போதும்! என்று நான் சொன்னதும்
நீயும் இது போதும்! என்றாய் பதிலுக்கு……………



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

3 comments:

  1. Arumai Sago. Nalla eluthuringa.
    Puththaandu Vaalthukkal.

    ReplyDelete
  2. super !!!!! very nice......shared to my friends and voted ....:)

    ReplyDelete
  3. துரைடேனியல்,pangusanthaieLearn,Hotlinksin.com ,RMY பாட்சா
    அனைவரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்
    மற்றும் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts