துளித் துளியாய் மரணப் பிறப்புத்
தரும் காதலே தயவு செய்து
என்னிடம் இப்பொழுது வராதே
இரவில் தூக்கமின்றி இருக்கவோ!
எனக்கு நானே பேசிக் கொள்ளவோ!
பசியிருந்தும் உண்ண மறக்கவோ!
நினைவுகளற்ற நினைவில் இருக்கவோ!
என்னை நானே மறந்து துறக்கவோ!
நான் இன்னும் பழகிக் கொள்ளவில்லை
அதுவும் ஒரு பெண்ணை மனத்துக்குள்ளே
வைக்கும் அளவு என் மனம்
தரும் காதலே தயவு செய்து
என்னிடம் இப்பொழுது வராதே
இரவில் தூக்கமின்றி இருக்கவோ!
எனக்கு நானே பேசிக் கொள்ளவோ!
பசியிருந்தும் உண்ண மறக்கவோ!
நினைவுகளற்ற நினைவில் இருக்கவோ!
என்னை நானே மறந்து துறக்கவோ!
நான் இன்னும் பழகிக் கொள்ளவில்லை
அதுவும் ஒரு பெண்ணை மனத்துக்குள்ளே
வைக்கும் அளவு என் மனம்
இன்னும் விரி வடையவில்லை
பிறர் சொன்னதை மனனம் செய்தே
பழக்கப் பட்டவன் நான்
என் பள்ளி பருவம் மனதிற்குள்
அப்படியே இருக்கிறது
ஓரளவு நல்ல பேரை போலியாக
தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்
அதை நீ இப்பொழுது கெடுத்து விடாதே
நான் தான் மற்ற எல்லா வற்றையும்
செய்கிறேனே உன்னை தவிர
ஒரு பெண்ணின் நினைவுகளை
மட்டும் என் மனத்திற்குள் போட்டு
குழப்பிவிடாதே!
பிறர் சொன்னதை மனனம் செய்தே
பழக்கப் பட்டவன் நான்
என் பள்ளி பருவம் மனதிற்குள்
அப்படியே இருக்கிறது
ஓரளவு நல்ல பேரை போலியாக
தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்
அதை நீ இப்பொழுது கெடுத்து விடாதே
நான் தான் மற்ற எல்லா வற்றையும்
செய்கிறேனே உன்னை தவிர
ஒரு பெண்ணின் நினைவுகளை
மட்டும் என் மனத்திற்குள் போட்டு
குழப்பிவிடாதே!
தயவு காட்டு
இவ்வளவு கெஞ்சியும் காதல்
என்னைப் பார்த்து சிரித்தது
அடேய் மடையா! எப்பொழுது
உன்னால் என்னிடம் பேச
முடிகிறதோ!
அப்பொழுதே உன்னை நான்
பிடித்துக் கொண்டேன்
அழாதே! கண்ணை துடைத்துக் கொள்
காதலிப்பவனால் தான் என்னிடம்
பேச முடியும்
இனி வேறு ஒன்றும் செய்ய முடியாது
என்றது…
இவ்வளவு கெஞ்சியும் காதல்
என்னைப் பார்த்து சிரித்தது
அடேய் மடையா! எப்பொழுது
உன்னால் என்னிடம் பேச
முடிகிறதோ!
அப்பொழுதே உன்னை நான்
பிடித்துக் கொண்டேன்
அழாதே! கண்ணை துடைத்துக் கொள்
காதலிப்பவனால் தான் என்னிடம்
பேச முடியும்
இனி வேறு ஒன்றும் செய்ய முடியாது
என்றது…
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
மனனம் என்றால் என்ன?
ReplyDeleteஎனக்கு ஒரு சிறிய சந்தேகம்!!!
ReplyDeleteகாதலிப்பவனால் தான் காதலிடம் பேச முடியும் என்றால், இறந்தவனால் தான் இறப்பைப் பற்றிப் பேசமுடியுமா நண்பரே?
@Karthikeyan.B
ReplyDeleteமனனம் என்றால் மனப்பாடம் செய்தல் என்று பொருள் நண்பரே...
”காதலிப்பவனால் தான் காதலிடம் பேச முடியும் என்றால், இறந்தவனால் தான் இறப்பைப் பற்றிப் பேசமுடியுமா நண்பரே?”
சந்தேகம் என்று வந்துவிட்டதல்லவா...?
அப்படியெனில் நாம் காதலைப் பற்றியும் சரி, மரணத்தை பற்றியும் சரி பேசுவது, நாம் அறிந்தவற்றை மட்டுமே...
அறிந்தவைகளை தாண்டியும் இந்த பிரபஞ்சம் விரிகிறதல்லவா...
எனவே உங்களின் அனுபவத்தில் மட்டுமே சிலவற்றை நீங்கள் உணர முடியும். ஒரு வேளை இந்த அனுபவம் இல்லையென்றால்...
உலகத்தில் வெறும் புத்தகங்களும், திரைப்படங்களும் மட்டுமே வாழும்.
மிக அருமையான விளக்கம்....
ReplyDelete@Karthikeyan.B
ReplyDeleteஉண்மையில் உங்களின் கேள்வியினாலேயே இந்த விளக்கம் எனக்குக் கிடைத்தது.
அதேப் போல் தான் நண்பரே, காதலும் மரணமும்.
மிக்க நன்றி.