2.28.2012

திரைவிமர்சனம் :முப்பொழுதும் உன் கற்பனைகள் மதன் டாக்கீஸ் 4 ஸ்டார் சரியா...?

 

     இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த ஆர்.எஸ் இன்போடனைனின் மூன்றாவது படம். அந்த தயாரிப்பாளரே இயக்குனர் உருவமெடுத்திருக்கும் முதல் படம். அதர்வா, அமலாப்பால், ஜி.வி. பிரகாஷ், ஒளிப்பதிவாளர் சக்தி என்று நல்ல கலைஞர்களைக் கொண்டு ஒரு புது முயற்சி.

                இதை எழுதத் தூண்டியதே ஜெயா டிவியில் ஒளிப்பரப்பான மதன் டாக்கீஸ் தான். அதில் மதன் அவர்கள் இந்த படத்தைப் பற்றி இயக்குனரிடம் விவாதித்த கருத்துக்களில் எனக்கு சுத்தமாக உடன் பாடில்லை. ஏனெனில் மதன் அவர்களின் நிறைய விமர்சனங்களில் நான் பிரமித்திருக்கிறேன். இருப்பினும் இந்த திரைப்படத்தை அவர் அலசிய விதம் ஒரு தலைப்பட்சமாகவே இருந்தது.
                ஒரு ஆண் மகன் (அதர்வா) ஒரு பெண்ணுடன்(அமலாபால்) வாழ்கிறான். அதே நேரத்தில் அமலாபாலுக்கு திரையில் திருமண நிச்சயம் வெளிநாட்டில் நடக்கிறது. அமலாபால் இந்தியாவிற்கு வந்து அதர்வாவை சந்திக்கிறாள். அந்தப் பெண்ணும், அவன் வீட்டில் இருக்கும் பெண்ணும் ஒரே மாதிரி இருப்பதாக திரைக்கதை நகர்கிறது. ஆனால் அமலாபால் அதர்வாவைப் பார்க்கும் விதமே திரைக்கதையை நமக்கு சொல்லிவிடுகிறது. வீட்டில் இருப்பது அமலாபால் இல்லை என்று...
                இருப்பினும் சுவாரசியத்திற்காக இடைவேளையில் ஒரு சின்ன அதிர்ச்சி. அது முடிந்து வந்து அம்ர்ந்ததும் சப்புக் கொட்ட வைக்கும் காரணம். பிறகு அவன் ஒரு மனப் பாதிப்படைந்தவன். அமலாபாலை பிரிந்தவுடன் அவள் இருப்பதாக எண்ணி அவளுடனேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்  என்று டாக்டர் அமலாபாலிடம் சொல்கிறார்.பிறகு அம்மாவுடனான பிளாஷ் பேக் என்று அதர்வாவின் பாதிப்பைச் சொல்ல மெனகெடல். இறுதியில் அமலாபால் அதர்வாவை ஒரு டாக்டருடன் சேர்ந்து எப்படி சரி செய்கிறார் என்பது கதை.
                தயாரிப்பாளர்  நன்கு சிந்தித்திருக்கிறார்.  எத்தனை சொதப்பல்கள் இருந்தாலும் அம்மா செண்டிமெண்டை வைத்தால் ரசிகர்களை கவர்ந்துவிடலாம் என்ற அவரது கணிப்பு ஒரளவு படத்தில் நிறைவேறியுள்ளது. பார்த்த ரசிகர்கள் எல்லாம் சொன்னது அம்மா வருகிற காட்சிகள் மனதைத் தொடுகிறது என்று தான்.
                இருப்பினும் எங்கெனும் படத்தில் அமலாபாலுடனான காதல் காட்சியில் காதல் இருக்கிறதா என்றால் இல்லை. ஒரு வேளை இன்றைய சமூகத்தில் காதல் இப்படித் தான் இருக்குமா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது. கதைக்கு சம்மந்தமான காட்சிகளில் வலுவில்லை.
                அமலாபாலின் நினைவுகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அதர்வாவிடம் அந்த கற்பனையான அமலாபால் எப்பொழுது காதலைச் சொன்னாள். சரி அதை விடுங்கள் கற்பனை அமலாபாலின் இடத்திற்கு உயிர் கொடுக்க உண்மை அமலாபால் வnthந்ததும் அதர்வாவின் நடவடிக்கையில் எந்த வித மாற்றமும் இல்லை என்பது காதில் மிகப் பெரிய பூ.
     ஆழ்ந்த காதலில் இருக்கும் அதர்வாவின் கற்பனைக் காதலிப் போல் நிச்சயம் அமலாபாலால் உடனே மாறிவிட முடியாது என்பது தான் எதார்த்தம். அந்த நேரங்களை அருமையாக காட்சிப்படுத்தாது கதைக்கு ஜிவனில்லாமல் செய்துவிட்டது.
     இதில் அதர்வா வேறு அன்னியன் பட விக்ரம் போல் இரவில் இரண்டுப் பேரை அமலாபாலிற்க்காக கொலை செய்கிறார்.இறுதியில் அமலாபாலிற்க்காக பார்த்த மாப்பிள்ளை தவறானவர் என்பதை சொல்ல அவரின் நண்பர்களை வில்லனாக்குவது, அதர்வாவிற்கு இறுதிக் காட்சிகளில் சண்டை வேண்டுமென்பதற்காக திணிக்கப்பட்டது போலுள்ளது. இதெல்லாம் படத்தில் உள்ளது. இதற்கு மதன் அவர்கள் பூசிய சாயம் தான் படத்தில் இல்லாதது. எதற்காக இந்த முகஸ்துதி என்றுத் தான் தெரியவில்லை.

வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

3 comments:

  1. நல்ல பதிவு நண்பரே..........நன்றாக அலசி உள்ளீர்கள்

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  3. ஒரு வேளை இன்றைய சமூகத்தில் காதல் இப்படித் தான் இருக்குமா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.

    பல நேரங்களில் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது...

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts