உன் வீட்டுத் தோட்டத்தில் தான்
பூக்கள் எவ்வளவு அழகாகப் பூக்கிறது
என் வீட்டில் மட்டும் அப்படி
பூப்பதில்லையே
என்று கன்னத்தில் கை வைத்தபடி
ஒரு பவழ மல்லிச் செடியின்
அருகில் அமர்ந்தபடி என்னைப் பார்த்து
சொன்னாய் நீ
உன் வீட்டுப் பூச்செடுகளுக்கு
உன் அருமைப் புரியவில்லை
அதனால் தான் அது பூக்கவில்லை
என்றதும்...
பவழ மல்லியைப் பார்த்துக்
கொண்டிருந்த உன் கண்கள்
என் பக்கம் திரும்பியது.
அந்தப் பார்வையில்
உன் வீட்டுச்செடிகளுக்கு
மட்டும் என் அருமை
எப்படி புரிந்தது ?
என்றுக் கேட்பது போல் இருந்தது
நானும் அந்தப் பார்வை நிலைக்கத்
தொடர்ந்தேன்.
என் வீட்டுச் செடிகள் அப்படி
இல்லை
விதைத்தப் பொழுதிலிருந்து
சொல்லிச்சொல்லி
வளர்த்திருக்கிறேன் என்றேன்.
நீ கன்னத்திலிருந்த கையை விலக்கியபடி
அப்படியா...!
என்ன சொல்லி வளர்த்திருக்கிறாய்....?
என்று ஆச்சர்யமாக கேட்டாய்
காத்திருங்கள் உங்கள் புன்னைகையை
மிஞ்சும் ஒரு பேரழகி வரப் போகிறாள்
அப்பொழுது அவளைக் கண்டு
நீங்கள் கலங்காமல் இருக்க
தினமும் சிரித்துப் பழகுங்கள்
உங்கள் செடிகளில் உள்ள
எதெனும் ஒரு பூவிற்கு அவள்
தரிசனம் கிடைக்கலாம்.
அப்பொழுது
அவள் விழிகளில் இல்லையென்றாலும்
அவள் இதழ்களிலாவது
நீங்கள் பாராட்டைப் பெறலாம்
அழகு என்று...
சொன்னதும் அமைதியாக என்
முகத்தையே இமைக்காமல் பார்த்தாய்
அதில் சிரிப்பையும், கோபத்தையும்
ஒரே நேரத்தில் பிரதிபலித்து
ஒரே நேரத்தில் அடக்க
நினைத்துத் தோற்றாய்.
இதோ எல்லாப் பூக்களும்
போட்டிப் போட்டுக் கொண்டு
சிரிக்கிறது
உன் பாராட்டைப் பெற...
என்று சொல்லி உன் பார்வையை
பூக்களை நோக்கித் திருப்ப
முயற்சித்தேன்.
நீயோ சற்றென்று எழுந்து வந்து
என் புறங்கையைப் பற்றித் திருப்பி
இதோ என் பாராட்டு என்று
குனிந்து என் உள்ளங்கையில்
உன் இதழ் பதித்து
ஒரு முத்தமிட்டாய்
என் தோட்டத்துப் பூக்களெல்லாம்
நாணத்தில் தலைக் கவிந்தது அந்நொடி
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
நன்று
ReplyDeleteகோவை நேரம் அவர்களே உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி
ReplyDeleteவாவ் இவ்ளோ அழகா கவிதை கூட எழுத வருமா உங்களுக்கு...
ReplyDeleteதோன்றியதை எழுதுகிறேன். அது இவ்ளோ அழகு என்பது உங்களைப் போன்ற வாசகர்கள் தான் சொல்கிறார்கள்.
ReplyDeleteபாராட்டுக்கு உடனே பரிசிட்டதால் சுவார்யஸ்ம் இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது.
ReplyDeleteசெல்லக் கோபத்துடன் தொடர்ந்திருக்கலாம்.
பரிசை தாமதமாக்க சொல்கிறீர்கள்... செல்ல கோபம் தொடர்ந்திருக்கலாம் தான். மீண்டும் முயற்சிக்கிறேன் வேறு ஒரு பரிமாணத்தில்...
Delete