• 5.28.2012

  நெஞ்சில் ஈரத்து நினைவுடனே........  உறவு உணர்வு என்று உளறிக்
  கொண்டிருந்தாலும்
  உறவாகாமல் உணராமல்
  என்னுள் ஓர் உளறல்
  என் நகம் நனைக்கும் வயதிலிருந்து
  சிலேட்டு பல்பம் வைத்தெழுதியா
  நட்பைக் கற்றேன்.
  என்னைப் பார்த்து நட்பென்றால்
  உனக்குத் தெரியுமா?
  என்று ஒவ்வொருவர் கேட்கும்
  பொழுதும் யோசித்ததுண்டு
  என்ன தான் சண்டைப்
  போட்டுக்கொண்டாலும்
                                                              என் பள்ளி நண்பன்

   


  எனக்கு இன்றும் சுகமளித்துக்
  கொண்டே தான் இருக்கிறான்
  என் மனதில் மௌன
  நினைவகளோடு
  நான் எப்பொழுதும் சிலுமிசம்
  செய்யும் பக்கத்து வீட்டுச் சிறுமி
  'அ.. ஆ .. வன்னா கற்றப் பொழுதிலிருந்து அவளை
  'ஆ' வென்று தான் கத்த வைப்பேன்
  இன்றும் மனதில் அந்த
  நினைவுகள் சுகமாக...
  போ' வென்று சொல்லும் நண்பனை
  கா' வென்று சொல்லும் அந்த நாள்
  சீ' யெ'ன்று சொல்லும் தோழியை
  சூ! சூ! என்று கேலி செய்யும் பொழுது
  நட்பு எனக்குள் ... எனக்குள் இல்லையா?
  அப்படியென்றால் என் மனதில் சுகம் அளிக்கும்
  அந்த நினைவுக்கு என்ன பெயர்
  தொட்டு தொட்டுப் பேசியதில்லை
  தொடாமலும் பழக்கம் இல்லை
  வெட்டிக் கொண்டுப் போனாலும்
  ஒட்டிக் கொள்ள நேரம் காலம் இல்லை
  வீட்டு வாசல் வரை தான் வந்த உறவு
  நெஞ்சின் கடைசி ஓரம் வரை சென்ற உறவு


  அடித்து கொள்வோம் கடித்தும் கொள்வோம்
  பல நாட்கள் நட்பை பிரித்துக் கொள்வோம்
  சிரித்துக் கொள்வோம் தெரியாது,
  எப்படியோ நட்பில் சேர்ந்து கொள்வோம்
  பாட்டுடன் இருப்போம், பாட ஏட்டுடன் இருப்போம்
  பள்ளி செல்கையில் மட்டும் பாசாங்கு செய்வோம்
  பேனா மையை சட்டையில் வைப்போம்
  வெள்ளைத் தாளைக் கிழித்து கப்பல் செய்வோம்
  தொல்லைகள் பலவும் சோராமல் செய்வோம்
  தொய்வில்லாமல் அன்றாடம் புத்தகத்தையும் எடுப்போம்
  பரிட்சை வந்தால் கண் இமைக்காமல் படிப்போம்
  படித்து முடித்ததுமே முதல் மதிப்பெண்ணை நினைப்போம்
  எத்தனை விடுமுறை வீணாய் போனது
  நாங்கள் பழக்கம் கொள்ளாமல்
  பள்ளி திறந்ததும் அத்தனையும் காணாமல் போனது
  எங்கள் பழக்கம் பாராமல்
  ஓய்வின்றி பேசுவோம்
  விடுமுறையில் விட்டதையெல்லாம் பேசுவோம்
  விடுமுறையில் பட்டதையும் பேசுவோம்
  தொலைவில் பார்த்ததையும் ,
  தொலைக்காட்சியில் பார்த்ததையும்
  எங்கள் படிப்பை சிறிது தொலைவில் வைக்குமே
  கண்ணாடி டீச்சர் குச்சைப் பார்த்ததும்
  எங்கள் கைத் தானாகப் பேனா எடுக்குமே
  சனியும் ஞாயிறும் விட்டது தொல்லையென
  வெயிலில் துள்ளித் திரிவோமே
  பக்கத்தில் தோழி வீடிருந்தால் தோழனோடு
  அங்கு சென்று அவளை சீண்டி மகிழ்வோமே .......
  சீண்டி யதால் கோபம் தலைக்கேறி தோழி
  எங்களை திட்ட முயல்வாளே
  ஏதோ நினைத்து கோபித்த தோழியும்
  அதை மறந்து நட்பாகத் திண்பண்டம்
  தருவாளே
  மன்னிக்க ..... மன்னிக்க...
  என்றதனை உண்ண நாங்கள்
  மன்னிப்புக் கோருவோமே
  இல்லை ..... இல்லை
  என்றுன்ண பின் சொன்னதும்
  மீண்டும் கோபிப்பாளே
  திங்களன்று பள்ளி வந்ததும்
  பாசத்தோடு அழிக்க ரப்பர்
  தருவாளே
  கொடுத்த ரப்பரை திருப்பிக் கொடுப்பேன்
  நானும் சிரித்தபடியே
  ஆனால் கொடுத்த நட்பை
  திருப்பி எப்படித் தருவது என்று
  நெஞ்சில் ஈரத்து நினைவுடனே........


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே