• 5.29.2012

  .....நாம் பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்....

  எனது கல்லூரி நாட்களின் பொழுது எழுதிய கவிதை.....
  எல்லோரும் பிரியும் தருவாயில் எழுதியது..

  நாம் பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
  இங்கே இணைந்தோம் நட்பில் மகிழ்ந்தோம்

  இந்த வயதில் இளமை மனதில்
  சேர்ந்த நாட்கள் என்றும் நினைவில்


  பல கனவுகள் சுமந்து வந்தோமே!
  அதைக் கல்லூரி வாழ்வில் நினைத்தோமே!
  சில நண்பர்கள் சொந்தம் கொண்டோமே!
  பலர் நட்பினில் பந்தம் வென்றோமே!
  மனம் நேசிக்கும் இதயம் சுவாசிக்கும்
  இந்த இருக்கையும் நம் நட்பை வாசிக்கும்
  நெஞ்சில் நினைவை சுமந்து செல்வோம்
  இந்த நாளை நினைவில் கொள்வோம்

  .....நாம் பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
  இங்கே இணைந்தோம் நட்பில் மகிழ்ந்தோம்......

  சிரிப்பு வெடிகள் பலவும் கண்டோமே!
  அந்த ஓசையில் கவலை மறந்தோமே!
  கொஞ்ச வெறுப்பும் மனதில் கொண்டோமே!
  பலர் குணத்தை விளம்பரம் செய்தோமே!
  பல நாட்கள் பேச்சை மறந்தோமே!
  பேச நினைத்தாலும் வார்த்தை மறந்தோமே!
  பேச தடுக்கும் மௌனம் துடிக்கும்
  பிரிவை நினைத்தால் வார்த்தை வெடிக்கும்
  மனக் கசப்பை கொஞ்சம் மறப்போம்
  இந்த நாளில் மீண்டும் பிறப்போம்...

  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே