2012ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நிகழ்ந்துக்
கொண்டிருக்கிறது. பதக்கப் பட்டியலில் உலக வரைப்படத்தில் கண்ணுக்குப் புலப்படாத நாடுகளெல்லாம்
தங்கம் வென்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இருக்கிறது. நம் இந்தியா மட்டும்
போன ஒலிம்பிக் போட்டியில் வென்ற தங்கமே போதும் என்ற எண்ணதில் இருக்கிறது.
தனிநபர் பிரிவில்
இது வரை நடந்த ஒலிம்பிக் போட்டி அனைத்திலும் இந்த 2012ஐம் சேர்த்து இந்தியாவின்
சார்பில் பதக்கம் வென்றவர்கள்
மொத்தம் 13 பேரே.
விவரம் கீழே
1952 – ஜாதவ் (மல்யுத்தம், பிரீஸ்டைல்) வெண்கலம்
1996 – லியாண்டர் பயஸ் (டென்னிஸ்) வெண்கலம்
2000 – கர்ணம் மல்லேஸ்வரி(பளுத்தூக்குதல் 69 கி.கி)
வெண்கலம்
2004 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (துப்பாக்கி சுடுதல்
டபுள்டிராப்) வெள்ளி
2008 – அபினவ் பிந்த்ரா (துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர்
ரைபிள்) தங்கம்
2008 – விஜேந்திர் சிங் (குத்துச்சண்டை ,மிடில் வெயிட்75கி.கி)வெண்கலம்
2008 – சுஷில் குமார் (மல்யுத்தம், பிரீஸ்டைல் 66கி.கி) வெண்கலம்
2012 – ககன் நரங் (துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர்
ரைபிள்) வெண்கலம்
2012 – விஜய்குமார் (துப்பாக்கிசுடுதல் 25மீரேபிட்பயர்பிஸ்டல்)வெள்ளி
2012 - செய்னா நேவல் (பாட்மிடன் ) வெண்கலம்
2012 – மேரி கோம் (குத்துச்சண்டை,பிளை வெயிட்)வெண்கலம்
2012 – யோகேஷ்வர் தத் (மல்யுத்தம், பிரீஸ்டைல் 60கி.கி) வெண்கலம்
2012 - சுஷில் குமார் (மல்யுத்தம், பிரீஸ்டைல் 66கி.கி) வெள்ளி
அதில் 2012ல் மட்டும் பதக்கம் வென்றவர்கள் 6 பேர். இந்த
தூரத்தை அடைய நமக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறதென்றால், இன்னும் நாம் ஒலிம்பிக் போட்டியில்
எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். இந்தியாவில் தங்கம்
காசுக்காக மட்டுமே விலைப் போகிறது. உழைப்பு தான் என்றுமே பொன் போன்றது. 100
கோடிக்கும் அதிகமாக மக்கள் வாழும் இந்தியாவில் ஒரு தங்கம் கூட இல்லையே என்று நாமும்
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் புலம்பிக் கொண்டுத் தானிருக்கிறோம். தங்கத்தை பதுக்கி
வைக்கும் நம் நாட்டில் உழைப்பின் மதிப்பு தெரியாததால் இந்த நிலை என்றுமே மாறாதது.
போதாதற்கு
இந்த கொள்ளைக்கார அரசாங்கம், சுதந்திர தினத் திட்டமாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு
குடும்பத்திற்கும் மொபைல் என்ற திட்டத்தை அறிவிக்க இருக்கிறார்கள். இந்திய அரசின்
கணக்குப் படி 2000-2001 ஆம் ஆண்டின் கணக்குப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின்
மாத வருமானம் கிராமப்புறங்களில் 328 ரூபாய்க்கு கீழும் நகர்ப்புறங்களில் 454 ரூபாய்க்கு கீழூம்
இருக்க வேண்டும் என்று சொல்கிறது.
அது 2005 – 2006 ஆம் ஆண்டு மாற்றம் செய்து, கிராமப்புறங்களில் 368 ரூபாயும், நகர்ப்புறங்களில் 560ரூபாயும்
என்று சொல்கிறது.
இந்த வருமானத்தில்
உள்ளவர்களை அவர்களின் வருமானத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையுடன் திட்டங்கள்
வகுப்பது தான் நல்ல அரசாங்கமாக இருக்க முடியும். 328க்கும்,560க்கும் கீழ் உள்ளவர்களுக்கு
200 ரூபாய் டாக் டைமுடன் மொபைல் இலவசமாக தருவதினால் அவர்களின் வாழ்க்கைத் தரம்
உயரப் போகிறதா...?. அவர்களுக்கு
அந்த இலவசம் என்ன தந்துவிடப் போகிறது. இந்த பொருளாதார நெருக்கடியில் அரிசியே அவர்களுக்கு
தங்கம் வாங்கும் கனவுப் போல் தான் இருக்கிறது. அப்படியிருக்க இந்த அரசாங்கம் ஒரு நல்ல
ஆரோக்கியமுள்ள சமூகத்தை எப்படி உருவாக்கும்.
அப்படி இருக்கையில் ஒலிம்பிக்கில் மட்டும் நம்மவர்கள்
பதக்கம் வெல்ல வேண்டும் என்று நாம் கனவு காண்பது வீண். இங்கே தங்கம் விற்கவும் வாங்கவும்
செய்கிறது,
மதிக்கப்படுவதில்லை.
அதேப் போல் தான் உழைப்பும், இங்கே உழைப்பை விற்கவும், வாங்கவும் செய்கிறார்கள் யாரும் மதிப்பதில்லை.
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
நல்ல அலசல்...
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...(TM 2)
மிக்க நன்றி நண்பரே
DeleteGood analysis
ReplyDeleteஇந்த வருமானத்தில் உள்ளவர்களை அவர்களின் வருமானத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையுடன் திட்டங்கள் வகுப்பது தான் நல்ல அரசாங்கமாக இருக்க முடியும்.
ReplyDeleteஉண்மையை எடுத்துரைக்கும் வாக்கியங்கள்...மக்கள் மனதை விழிக்க செய்ய இதுபோனற படைப்புகள் அதிகம் தேவை