• 8.13.2012

  குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து  அம்மா ! அம்மா! இன்று உன் பிறந்த நாளா?
  எனக்கு இன்று உன்னை அழுது தொந்திரவு செய்ய
  கூடாது என்று ஆசை.
  இருப்பினும் நான் அழா விட்டால்
  எனக்கு ஏதோ என்று நீ
  அழுது விடுவாயோ என்று நான் அழுகிறேன்.
  எனக்கு எல்லோரையும் போல் இனிப்பான
  கேக் வேண்டும் என்றால் நீ தரவாப் போகிறாய்.
  எனக்கு மற்றவர்களைப் போல் பரிசுக் கொடுத்தும்
  வாழ்த்து அட்டைக் கொடுத்தும்
   உன்னை பாராட்டத் தெரியாது.
  ஆனால் கற்றுக் கொள்வேன்.
  சகலமும் உன்னைப் போல் கற்றுக் கொள்வேன்.
  இருப்பினும் இன்று என்னுடைய வாழ்த்தை
  அம்மா உனக்கு நான் எப்படி தெரிவிப்பது.
  நான் பிறந்து முதலில் வரும் உன் பிறந்த
  நாளுக்கு உனக்கு என்ன பரிசு தருவது.
  நானே உனக்கு பரிசு என்று நீ சொல்வாயே
  என்றுமே என் முகத்தில் தான் விழிக்கிறாய்
  இன்று மட்டும் நீ விழிப்பதற்குள் நான்
  விழித்து உன் முகத்துக்கு அருகில் சின்ன
  சிரிப்பை உதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
  அம்மா! பிற்காலத்தில் பாடம் படிக்க உன்னை
  காலையில் எழுப்ப சொல்லுவேன்
  அதை இன்று முதலே நீ ஆரம்பித்து வீடு.
  ஆம் என்னை காலையில் எழுப்பு
  எல்லோருக்கும் முன் நான் தான் உன்னை
  முதலில் பார்க்க வேண்டும்.
  என் அழுகை சத்தம் உன்னை வாழ்த்தும்
  என் சத்தமில்லாத சிரிப்பு உன்னை தாலாட்டும்
  அம்மா இன்று தானே நீ பிறந்தாய்
  என்னை போல் நீயும் குழந்தை தானே

  இப்படிக்கு ..........................மழலை


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே